தர்ஷன் Vs அன்புக்கரசி.. கல்யாணத்தில் கிளம்பும் சிக்கல்.. ராவணன் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், ஈஸ்வரியின் அப்பா, ஜனனியிடம் சென்று, ஜனனி எதுக்கு நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிற, இந்த குடும்பத்தோடு அனுசரித்து போனால் என்ன என்று கேட்கிறார். அப்போது இந்த வீட்டில் எல்லாரும் நல்லா டிராமா ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் கேட்க இங்கே யாருக்கும் தைரியம் இல்லை, எனக்கு எதுக்கு அட்வைஸ் என கேட்கிறார். மற்றொரு பக்கம் தர்ஷன் வேலைக்கு செல்லும் இடத்தில் அன்புக்கரசி இருக்க அதைப்பார்த்து தர்ஷன் அதிர்ச்சி அடைகிறார். மேலும் நீ எப்படி இங்கே என்று கேட்க, நான் இந்த உங்களுடைய TL என சொல்கிறார். இதெல்லாம் அந்த ராவணனின் வேலை என்பது தெரியவருகிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: வீட்டுக்கு வரும் சாருபாலாவிடம் ஜனனி குணசேகரன் அக்காக்களை ஏமாத்தி கையெழுத்து வாங்கிவிட்டார் என்கிறார். உடனே சாருபாலா நம்முடைய வழக்கு இது பின்னடைவாக இருக்கும் ஜனனி. அந்த வீடியோ மட்டும் கிடைக்வில்லை என்றால், நமக்கு பெரிய பிரச்சினையாகிடும். கூடிய சீக்கிரம் அந்த வீடியோ கிடைக்க ஏற்பாடுகளை பாருங்க என்கிறார். பின் ரஷயாவில் இருந்து வாங்கி வந்த கிப்டை நந்தினி, ரேணுகாவிடம் கொடுக்க சொல்கிறாள். சாருபாலா கீழே இறங்கி வரும் போது, நந்தினியை பார்த்து எப்போதும் காபி கொண்டு வருவீர்கள் இப்போ அதுக்கூட கொண்டு வரல, ஜனனியை தனியா விட்டுட்டீங்க, அவங்க மட்டும் இப்ப தனியாளா போராடிக்கொண்டு இருக்காங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

அன்புக்கரசியிடம் கெஞ்சிய தர்ஷன்: இதையடுத்து, தர்ஷன் வேலையில் இருந்து சீக்கிரமா வர அப்போது கதிர் கல்யாணம் ஆகும் வரைக்கும் நீ வேலைக்கே போகக்கூடாது வீட்லதான் இருக்க வேண்டும் என சொல்கிறார். இதனால் தர்ஷன் அன்புகரசிக்கு ஃபோன் செய்து, ஒரு வாரம் லீவ் வேணும் கல்யாணம் முடியறவரைக்கும் வெளியில போக கூடாது என வீட்டில் சொல்கிறார்கள் என்கிறார். இதை கேட்ட அன்புக்கரசி ஒரு வாரம் என்னால் லீவு கொடுக்க முடியாது. அது பெரிய பிரச்சனை ஆகிவிடும் என சொல்கிறார். ஆனால், தர்ஷன் நீ தான் எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு என கெஞ்ச அன்புக்கரசி ஓகே என்கிறார். மற்றொரு பக்கம், கல்யாணத்துக்காக குணசேகரன் எல்லாருக்குமே புது துணி எடுத்து வந்து கொடுக்க, எல்லாருமே ஜோடி ஜோடியாக விசாலாட்சி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி துணியை வாங்கிக் கொள்கிறார்கள். இதை ஜனனி வெளியிலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X