சகுனி வேலை பார்த்த ஜான்சி.. மணிவிழா நடக்குமா? பக்கா பிளான் போட்ட குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: விசாலாட்சி சம்மந்திகளை அழைத்து இந்த மணி விழாவை தடபுடலாக நடத்திவிட வேண்டும் என்று சொல்ல, ஞானம், கதிர், சக்தி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து சம்மந்திகளை அழைக்க செல்கின்றனர். ஞானம் முதலில் ரேணுகாவின் அம்மா வீட்டிற்கு வந்து பத்திரிகை கொடுக்கிறார். அப்போது, ரேணுகாவின் அம்மா, நான் அங்கு வந்து என்ன செய்யப்போகிறேன், என்னிடம் சீர் செய்வதற்குகூட பணம் இல்லை என்று சொல்கிறாள். உடனே, சக்தி, எல்லாரும் ஒவ்வொரு சூழ்நிலையில் தவறு செய்து இருக்கிறோம். அது எல்லாத்தையும் மறந்துவிட்டு வாங்க, சீர் செய்வதை பற்றி நீங்க கவலைப்படத் தேவையில்லை, நீங்க வந்தா மட்டும் போதும் என்கிறான். இதையடுத்து, நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ரேணுகாவின் அம்மாவிற்கு பத்திரிகை கொடுத்துவிட்டு வந்த பிறகு, அடுத்ததாக நந்தினி வீட்டிற்கு சென்று பத்திரிகை வைக்கின்றனர். இதைத்தொடர்ந்து ஞானம், சக்தி, கதிர் மூவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது. அனைவருக்கும் பத்திரிகை வெச்சாச்சு. சக்தி உன்னுடைய மாமனாருக்கு மட்டும் இன்னும் பத்திரிகை வைக்கவில்லை என்று சொல்கிறான் கதிர். அப்போது, சக்தி அவர் சென்னையில் இருக்கிறார். இப்போது எப்படி போய் அவருக்கு பத்திரிகை வைப்பது என்று கேட்கிறான். இதை தொடர்ந்து, சக்தி தனது மாமனாருக்கு ஃபோன் செய்து, மணி விழா நடைபெற இருக்கிறது. நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்று கூறுகிறார். அவரும் நான், நிச்சயமாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

சகுனி வேலை பார்த்த ஜான்சி: மறுபக்கம் வீட்டில் ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் சமைத்துக் கொண்டு இருக்க, அங்கு வரும் தாரா, மணி விழா, பணி விழா எல்லாம் இப்ப எதுக்கு. இதுல உங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட வேண்டியது தானே. எதுக்கு எல்லாரும் அமைதியா இருக்குறீங்க என்று கேட்கிறாள். அது மட்டுமல்லாமல், இந்த மணி விழா நல்லபடியா நடக்குமா.. நடக்காதான்னு நான் சீட்டு எழுதி வச்சிருக்கேன். அதை சாமி, முன்னாடி போட்டு பாக்க போறேன் என்று சொல்லிவிட்டு, அம்மன் படத்தின் முன், அந்த சீட்டை போட்டு பார்க்க. அதில், மணி விழா நடக்காது என்று வருகிறது. இப்படி இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை ஜான்சி ராணி மறைந்திருந்து ஒட்டு கேட்கிறாள். இந்த விஷயத்தை ஆதி குணசேகரனிடம் சொல்கிறாள். இந்த வீட்டில் இருக்கும் மருமகள்கள், முகத்திற்கு முன் நன்றாக பேசுகிறார்கள். ஆனால், யாருக்குமே மணி விழா நடப்பதில் விருப்பமே இல்லை என்று, குணசேகரிடம் கொளுத்தி போடுகிறாள்.

இதைத்தொடர்ந்து, அனைவரும் ஹாலில் பேசிக்கொண்டு இருக்க, அப்போது, சக்தி, ஜனனியிடம் அப்பாவிற்கு ஃபோன் செய்து, விழாவிற்கு அழைத்தேன் என்று சொல்கிறான். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஜனனி, யாரை கேட்டு, அவருக்கு ஃபோன் பண்ணி கூப்பிட்ட என்று சத்தம் போடுகிறாள். அப்போது, விசாலாட்சி, விசேஷத்திற்கு சம்மந்தியை கூப்பிடாமல் இருக்க முடியுமா... அனைவருடைய சம்மந்திகளும் வரும் போது, சக்தி மட்டும் தனியா நின்னா நல்லாவா இருக்கும் என்று சொல்கிறார். இப்போ தான், அவர் சம்மந்தி என்று உங்க கண்ணுக்கு தெரியுதா.. கதிரை வைத்து அப்பாவை அடித்து வெளியில் அனுப்பும் போது அவர் சம்மந்தி என்று தெரியவில்லையா.. என்று கேட்டு சத்தம் போடுகிறாள். ஜனனி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால், கடுப்பான சக்தி, இப்போ என்ன, அவரை நான் கூப்பிட்டது தப்பா... இல்ல, உன்னை கேட்காமல் கூப்பிட்டது தப்பா என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.

Ethirneechal Thodargiradhu Suntv promo

மணி விழாவே வேண்டாம்: இதைத்தொடர்ந்து ஆதி குணசேகரன், ஜனனி கொஞ்சம் அமைதியா இரும்மா, எல்லாருக்கும் சொன்ன மாதிரி தான் உங்க அப்பாவுக்கும் இந்த விசேஷத்துல கலந்துக்க சொல்லி இருக்கோம். இதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்கிறார். உடனே ஜனனி, எங்க அப்பா இந்த விசேஷத்துல கலந்து கொள்ள வேண்டுமா.. கலந்து கொள்ளக்கூடாதா என்று நான் தான் முடிவெடுக்க வேண்டும். நீங்க யாரும் முடிவெடுக்க கூடாது என ஜனனி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க, சக்தி ஜனனியை அடிக்க பாய்கிறான். அப்போது, குணசேகரன் குறுக்கிட்டு, இந்த வீட்டு பெண்களை கஷ்டப்படுத்தி, அடித்துத்தான் எனக்கு மணி விழா நடக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட மணி விழாவை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இன்றைய ப்ரோமோ: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஜனனி, உங்க அண்ணாவின் மணி விழா நடக்கக்கூடாது என்று நான் பிளான் பண்ணவில்லை, எதற்கு தேவையில்லாமல் என் மேல பழியை போடுறீங்க என்று கேட்க, உச்சகட்ட கோவத்தில் இருந்த சக்தி, ஆமாம், நீ தான், இந்த மணி விழா நடக்கக்கூடாது என்று நினைக்கிற என சொல்லிவிட்டு வெளியே வருகிறான். அப்போது, குணசேகரன் இவர்கள் இருவரும் பேசியதை கேட்டு விட்டு, சக்தியை தனது அறைக்கு அழைத்து சென்று சமாதானப்படுத்துகிறான். அப்போது, சக்தி அண்ணனின் மடியில் படுத்துக்கொண்டு அழுது கொண்டு இருக்கிறான். இந்த மணி விழாவை நடத்தி ஆயிரம் வருஷம் நல்லா இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்ல. ஞானமும், கதிரும் செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக யாரையும் நாம காயப்படுத்தி, எந்த ஒரு விஷயத்தையும் செய்யக்கூடாது, அது ரொம்ப தப்பு, இந்த மணி விழாவை விட எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம், நாளையில் இருந்து இந்த மணி விழாவை பத்தி யாரும் பேசக்கூடாது.

ஜனனிக்கு நடந்த விபத்துக்கு காரணம் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் அதனால் தான் இந்த மணி விழாவை நடக்க விடக்கூடாது என்று நினைத்திருக்கிறாள். எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம் சக்தி, இதனால் தான் மணி விழா வேண்டாம் என்று சொல்கிறான். இதைகேட்டு, அதிர்ச்சி அடைந்த சக்தி, நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து இந்த விழாவை நடந்த வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த விழாவின் மூலமாக நாங்க அனைவரும் சந்தோஷமாக இருக்கோம். யாரோ ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விழா வேண்டாம் என்று சொல்வது சரி இல்லை... எங்க அண்ணானுக்காக நாங்க எடுக்கும் விழா, இது நடந்தே ஆக வேண்டும் என்று சக்தி கண்கலங்கி பேசுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X