ஜனனிக்கும் குணசேகரனுக்கும் முற்றும் மோதல்.. மணிவிழா ஒரு கேடா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜனனியின் அப்பாவை விழாவிற்கு அழைத்தால், சக்திக்கும் ஜனனிக்கும் இடையே பெரிய சண்டை வருகிறது. அப்போது, குணசேகரன், ஜனனி கொஞ்சம் அமைதியா இருமா, எல்லாருக்கும் சொன்ன மாதிரி தான் உங்க அப்பாவுக்கும் இந்த விசேஷத்துல கலந்துக்க சொல்லி இருக்கோம். இதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்கிறார். உடனே ஜனனி, எங்க அப்பா இந்த விசேஷத்துல கலந்து கொள்ள வேண்டுமா.. கலந்து கொள்ளக்கூடாதா என்று நான் தான் முடிவெடுக்க வேண்டும். நீங்க யாரும் முடிவெடுக்க கூடாது என ஜனனி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். உடனே , சக்தி எல்லாத்தையும் உன்கிட்ட கேட்டுவிட்டுத்தான் செய்ய வேண்டுமா என்று சத்தம் போடுகிறான். இதையடுத்து, குணசேகரன், சக்தி அமைதியா இரு, ரேணுகா ஜனனியை மேல கூட்டிக்கொண்டு போ என்று சொல்கிறார்.
இதையடுத்து, ஜனனி அழுதுகொண்டே இருக்க, அனைவரும் ஜனனியை சமாதானப்படுத்துகின்றனர். அப்போது, ஜனனி எங்க அப்பா இந்த வீட்டுக்கு வருவதில் எனக்கு விருப்பமே இல்லை. எங்கே அப்பாவை வீட்டுக்கு வரவெச்சி என்னை அசிங்கப்படுத்த பார்க்கிறார் குணசேகரன். அது புரியாம இந்த சக்தியும், அவர் பேச்சை கேட்டு ஆடுகிறான். சக்தி எல்லா நேரத்திலையும் என் கிட்ட நல்ல பேசுவான், ஆனால், அண்ணன் என்று வந்துவிட்டால், மாறிவிடுகிறான். அப்பாவை கூப்பிடலாமா.. வேண்டாமா என்று என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே என்று அழுகிறாள். இதையடுத்து, ரேணுகா மற்றும் நந்தினி, சரி ஜனனி அழாதே நாங்க போய் அவரை கூப்பிடவேண்டாம் என்று சொல்கிறோம். நீ அழாமல் இரு என்ற சொல்லிவிட்டு கீழே வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, குணசேகரன் சக்தியிடம், டேய் நீயும் ரொம்ப கோவப்படுற, அமைதியா இரு என்று சொல்கிறார். அப்போது, விசாலாட்சி, நாலு ஆம்பிளைங்க இருக்கும் இடத்துல ஒரு பொம்பளை நடுவீட்டில் நின்னு கத்திக்கிட்டு இருக்கும் போது எப்படி சக்தியால் சும்மா இருக்க முடியும் என்று சொல்கிறாள். உடனே கதிர், அப்படியே அவ சங்கை பிடிச்சி இருப்பேன், உங்களுக்காகத்தான் அமைதியா இருந்தேன் என்று சொல்கிறான். இதைக்கேட்ட, குணசேகரன், டேய் அமைதியா இருடா, உனக்கு ஆயிரம் முறை சொல்லி இருக்கேன், ஜனனி உன் தம்பி பொண்டாட்டி, உன் கோவத்தை நீ ஜனனி கிட்ட காட்டக்கூடாது. திடீர்னு ஒரு விஷயத்தை சொன்னதும், அந்த பெண்ணுக்கு கோவம் வந்துவிட்டது அவ்வளவு தான். டேய்.. சக்தி நீ போய் ஜனனியை சமாதானப்படுத்து, நீ எடுத்து சொன்ன ஜனனி புரிந்து கொள்வாள் என்று, சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, ரேணுகா மற்றும் நந்தினி கீழே வந்து, அது எதுவும் தேவையில்லை. உங்க குடும்பத்திற்காக எல்லா விஷயத்தையும் நாங்க ஏற்றுக்கொண்டோம், தயவு செய்து ஜனனியை விட்டுவிடுங்க, அதான் எங்க அம்மா, அப்பா, நந்தினி அம்மா, அப்பா எல்லாரும் வரங்க அப்புறம் என்ன என்று கேட்கிறாள் ரேணுகா.
மணி விழா வேண்டாம்: உடனே விசாலாட்சி, என்னடி நீங்க மகாராணிக்கு சப்போட்டா, மணி விழாவிற்கு எல்லாரும் வரும் போது சக்தி அவங்க மாமனாரை வர சொல்லி இருக்கான் இதுல என்ன தப்பு இருக்கு, இதுல ஜனனி என்ன குத்தத்தை கண்டுபுடிச்சிட்டானு நீங்க வந்து கத்திக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல, கடுப்பான நந்தினி, அதான் எங்க அப்பா, அம்மாவை அழைச்சாச்சில அப்புறம் என்ன என்று கேட்கிறாள். நந்தினி பேசியதை கேட்டு கடுப்பான கதிர், என்னடி ஓவரா பேசிக்கிட்டு இருக்க என்று, நந்தினியை அடிக்க பாய்கிறான். அப்போது, குறுக்கிட்டு கத்திய குணசேகரன், டேய் கதிர், பொம்பளைய அடிக்கிறது தான் வீரம்னு நினைச்சிட்டு இருக்கியா... நான் ஈஸ்வரியை பல முறை அடிச்சி இருக்கேன். ஆனால், அது எவ்வளவு பெரிய தப்பு என்று இப்போ நினைச்சி வருத்தப்படுகிறேன். வீட்டு பெண்களை அடிச்சி, துன்புறுத்தித்தான் எனக்கு மணி விழா நடக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட மணி விழாவும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். எல்லா ஏற்பாட்டையும் அப்படியே நிறுத்து எனக்கு இந்த குடும்பம் தான் முக்கியம் என்கிறார் குணசேகரன்.
சக்தி, ஜனனி சண்டை: இதைத்தொடர்ந்து, சக்தி அறையில் படுத்து இருக்க, அப்போது அங்கு வரும் ஜனனி, அப்பாவிடம் பேசுவதற்கு முன் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். ரேணுகா அக்கா, நந்தினி அக்காவோட வீட்டுக்கு போவதற்கு முன், உங்க அண்ணனுங்க அவங்கவிட்ட கேட்டுத்தான் போனாங்க, அது மாதிரி என்கிட்ட நீ கேட்டு இருக்கலாமே என்று சொல்கிறாள். இதனால், ஆத்திரம் அடைந்த சக்தி, என்னடி சும்மா அதையே சொல்லிக்கிட்டு இருக்க, அதான் அந்த மனுஷனே எனக்கு மணிவிழாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே அப்புறம் என்ன... இன்னும் உன்னுடைய ஆத்திரம் தீரவில்லையா... ஏதோ இந்த விஷயத்தில், அண்ணனுங்க, அண்ணிக்கிட்ட கேட்டு பண்ணிட்டாங்க, ஆனால், மத்த எல்லா விஷயத்திலும் நான், உன்கிட்ட நான் எப்படி நடந்துக்கிறேன் என்று நல்லா யோசித்துப்பார். நீ தான் தேவையே இல்லாமல் பிரச்சனையை பெருசா ஆக்கிட்டு போற என்று சொல்கிறான் கதிர்,
மணிவிழாவே வேண்டாம்:உங்க அண்ணாவின் மணி விழா நடக்கக்கூடாது என்று நான் பிளான் பண்ணவில்லை, எதற்கு தேவையில்லாமல் என் மேல பழியை போடுறீங்க, நீ பொய்யா வேஷம் போடும் அண்ணனுக்காக தேவையில்லாத வேலையை செய்கிற என்றுசொல்ல, உச்சகட்ட கோவத்தில் இருந்த சக்தி, ஆமாம், நீ தான், இந்த மணி விழா நடக்கக்கூடாது என்று நினைக்கிற என சொல்லிவிட்டு வெளியே வருகிறான். அப்போது, குணசேகரன் இவர்கள் இருவரும் பேசியதை கேட்டு விட்டு, சக்தியை தனது அறைக்கு அழைத்து சென்று சமாதானப்படுத்துகிறான். அப்போது, சக்தி அண்ணனின் மடியில் படுத்துக்கொண்டு அழுது கொண்டு இருக்கிறான். இந்த மணி விழாவை நடத்தி ஆயிரம் வருஷம் நல்லா இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்ல சக்தி. ஞானமும், கதிரும் மணிவிழாவை நடத்தியே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக யாரையும் நாம காயப்படுத்தி, எந்த ஒரு விஷயத்தையும் செய்யக்கூடாது, அது ரொம்ப தப்பு, இந்த மணி விழாவை விட எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம், நாளையில் இருந்து இந்த மணி விழாவை பத்தி யாரும் பேசக்கூடாது.
ஜனனிக்கு நடந்த விபத்துக்கு காரணம் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் அதனால் தான் இந்த மணி விழாவை நடக்க விடக்கூடாது என்று நினைத்திருக்கிறாள். எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம் சக்தி, இதனால் தான் மணி விழா வேண்டாம் என்று சொல்கிறான். இதைகேட்டு, அதிர்ச்சி அடைந்த சக்தி, நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து இந்த விழாவை நடந்த வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த விழாவின் மூலமாக நாங்க அனைவரும் சந்தோஷமாக இருக்கோம். யாரோ ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விழா வேண்டாம் என்று சொல்வது சரி இல்லை... எங்க அண்ணானுக்காக நாங்க எடுக்கும் விழா, இது நடந்தே ஆக வேண்டும் என்று சக்தி கண்கலங்கி பேசுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











