மவனே யாருகிட்ட.. மணி விழாவை நிறுத்த பிளான் போட்ட ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஜனனிக்கும் சக்திக்கும் சண்டை நடந்த நிலையில், நந்தினி, ரேணுகா இருவரும், எங்க வீட்டில் இருந்து தான் எல்லாரும் வராங்க அப்பும் எதுக்கு, ஜனனியை தொல்லை பண்றீங்க என்று கேட்கிறாள், நந்தினி பேசியதை கேட்டு கடுப்பான கதிர், என்னடி ஓவரா பேசிக்கிட்டு இருக்க என்று, நந்தினியை அடிக்க பாய்கிறான். அப்போது, குறுக்கிட்டு கத்திய குணசேகரன், டேய் கதிர், பொம்பளைய அடிக்கிறது தான் வீரம்னு நினைச்சிட்டு இருக்கியா... நான் ஈஸ்வரியை பல முறை அடிச்சி இருக்கேன். ஆனால், அது எவ்வளவு பெரிய தப்பு என்று இப்போ நினைச்சி வருத்தப்படுகிறேன். வீட்டு பெண்களை அடிச்சி, துன்புறுத்தித்தான் எனக்கு மணி விழா நடக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட மணி விழாவும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். எல்லா ஏற்பாட்டையும் அப்படியே நிறுத்து, எனக்கு இந்த குடும்பம் தான் முக்கியம் என்கிறார் குணசேகரன்.

இதையடுத்து சக்தியிடம் பேசும் ஜனனி, உன்னுடைய அண்ணன் எங்க குடும்பத்துல இருந்து வரவங்கல அவமானப்படுத்துவதற்காக தான் கூப்பிடுறாரு, அது தெரியாம நீயும் எங்க அப்பாவை ஃபோன் பண்ணி கூப்பிட்டு இருக்க, ஒருமுறை என்கிட்ட ஃபோன் பண்ணி அப்பாவை கூப்பிடலாமா.. வேண்டாமான்னு கேட்டு இருக்கலாமே அண்ணனுங்க எல்லாரும், அக்கா வீட்ல இருக்குறவங்கள கூப்பிடும்போது, அக்காவிற்கு ஃபோன் பண்ணி பேச வச்சாங்க, ஆனா, நீ அது கூட செய்யல, என்று கத்திக்கொண்டே இருக்கிறாள். இதனால் கடுப்பான சக்தி எல்லாத்தையும் உன்கிட்ட கேட்டுட்டு தான் செய்யணும் என்கிற அவசியம் இல்ல, கடைசில அண்ணனோட வாயிலிருந்தே மணி விழா வேண்டான்னு சொல்ல வச்சிட்ட பாத்தியா... என்று சொல்லிவிட்டு கோபத்தோடு வெளியே வருகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

குணசேகரன் மாஸ்டர் பிளான்: இதையெல்லாம் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த குணசேகரன். சக்தியை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று சமாதானம் படுத்துகிறான். ஜனனிக்கு நடந்த விபத்துக்கு காரணம் நான் என்று நெனச்சிட்டு இருக்கா, அத மனசுல வச்சுக்கிட்டுத்தான், இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்கா. கதிர், ஞானம் இவர்களுக்கு நல்ல பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வெச்சேன். ஆனால், உனக்கு மட்டும் சரியான ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் செய்து வைக்காமல் போயிட்டேன். அந்தப் பொண்ணு பல விஷயத்துல உனக்கு சரியானவலாத்தான் இருக்கா. இருந்தாலும் இந்த குடும்பம்னு வரும் போது அவ, வேற மாதிரி இருக்கா, உன் கல்யாண விஷயத்துல நான் தப்பு செய்துவிட்டேன் சக்தி. இந்த மணி விழாவை நடத்தி ஆயிரம் வருஷம் நான் நல்லா இருக்கே வேண்டிய அவசியம் இல்ல, ஞானம், கதிர் இந்த மணிவிழாவை நடத்தியே ஆகணும்னு இருக்காங்க. அதுக்காகத்தான் நான் இந்த மணி விழாவிற்கு சரின்னு சொன்னேன். ஆனால், அது உன்னுடைய வாழ்க்கையை பாதிக்கும்னு நான் நினைக்கவே இல்லை. உன் வாழ்க்கையை கெடுத்துத்தான் எனக்கு மணி விழா என்றால், அது எனக்கு வேண்டாம் என்கிறார்.

நிச்சயம் நடக்கும்: இதையடுத்து சக்தி, அண்ணா, இந்த மணி விழா நடந்தே ஆகணும். அண்ணுங்க எல்லாம் இந்த மணி விழாவை நடத்தணும்ங்கிறதுல ரொம்ப ஆசையா இருக்காங்க. நீங்க வேண்டாம்னு சொன்னதுனால அனைவரும் மனம் உடைந்து போயிட்டாங்க. ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக இந்த மணி விழாவை நடத்தாமல் விடுவது சரியில்லை. இந்த மணி விழாவை நடத்தியே ஆகணும் என்று சொல்ல உடனே குணசேகரன் உங்களுக்கு விருப்பம் என்றால் இந்த மணி விழாவை செய்யுங்கள் என்கிறார். பிறகு இந்த விஷயத்தை அனைவரிடமும் சொல்லிவிடலாம் என்று, ஞானம் கதிர் அனைவரையும் அழைத்து நான், ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் இந்த மணி விழாவிற்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க என்று எனக்கு தெரியும். இதனால நீங்க நினைச்ச படிய இந்த விழாவை நல்ல சிறப்பாக நடத்தி விடுங்கள் என்கின்றார். இதைக்கேட்டு கடுப்பான ரேணுகா மற்றும் நந்தினி, கடவுளே இந்த விழாவை தடுக்க ஏதாவது பெரிய விஷயம் நடக்காதா என்று பேசிக்கொண்டு இருக்க, ஜான்சி ராணி இது அனைத்தையும் ஓட்டு கேட்கிறாள். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த நந்தினி உன்னை அப்படியே கொல்லப்போகிறேன் பார் என்று ஜான்சியுடன் சண்டைக்கு போகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

மறுபக்கம், ஈஸ்வரியின் அப்பா மற்றும் ரேணுகாவின் அம்மா இருவரும் சேர்ந்து நந்தினியின் அம்மா வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, ஈஸ்வரியின் அப்பா, மாப்பிள்ளை வீட்டில் விசேஷம் வைத்து இருக்கிறார்கள். இதற்கு நாம் தனித்தனியாக செய்வதைவிட சேர்ந்து செய்துவிடலாம் என்று சொல்கிறார். அப்போது, நந்தினியின் அம்மா, ஒருவரிடம் பணம் இருக்கும், ஒருவரிடம் பணம் இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் போது, இந்த விஷயத்தில் நாம் எப்படி சேர்ந்து சீர் செய்ய முடியும் என்று கேட்கிறார். உடனே ஈஸ்வரியின் அப்பா, நீங்கள் சொல்வது சரிதான், நான் நம்ப மாப்பிள்ளை, பொண்ணுக்கு செய்வதை ஒன்றும் சொல்லவில்லை. நமக்கு என்ன தோன்றுகிறதோ, என்ன செய்ய விருப்பப்படுகின்றோமோ அதை செய்துவிடலாம்.

ஆனால், பெரிய மாப்பிள்ளைக்கு நாம் செய்ய வேண்டிய சீரை ஒன்றாக சேர்ந்து செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து ஜனனியின் அப்பாவிற்கு விஷயம் போனதா என்று தெரியவில்லை. ஏற்கனவே அந்த குடும்பத்துடன் சண்டை போட்டுக் கொண்டுதான் அவர் சென்னையில் இருக்கிறார். இதனால் அவருக்கு விஷயம் தெரிந்ததா... என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார். உடனே ரேணுகாவின் அம்மா, ஒருவேளை அவருக்கு விஷயத்தை யாரும் சொல்லவில்லை என்றால் என்று கேட்க, நாம அவருக்கு ஃபோன் செய்து கேட்டுவிடலாம் என்று சொல்ல, ஈஸ்வரியின் அப்பா ஜனனியின் அப்பாவிற்கு போன் செய்து பேச, அவர், சக்தி மாப்பிள்ளை ஃபோன் செய்து மணிவிழாவிற்கு என்னை அழைத்தார். இதனால், நான் கட்டாயம் விழாவிற்கு வருவேன் என்கிறார்.

ஜனனியின் திட்டம்: இதையடுத்து இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகியுள்ளது. அந்த பிரமோவில் விசாலாட்சி முன்னாடி என் மகன் குணசேகரன் எப்படி கெத்தா இருந்தியோ, அதே போல மீண்டும் கெத்தா வரணும் அதற்காகத்தான் இந்த மணி விழாவை நடத்துறேன் என்று சொல்கிறாள். அப்போது ஜனனி நீங்க நினைச்சது மட்டும் தான் இந்த வீட்ல நடக்கணுமா... நாங்க நினைச்சதும் நடக்கும் என்று சொல்கிறார். அந்த நேரம் பார்த்து போலீஸ் வீட்டிற்குள் வருகிறது. இதனால், குணசேகரனின் மணி விழா திட்டமிட்டபடி நடக்குமா.. நடக்காதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X