ஆதாரத்தை காட்டிய ஜனனி.. மணி விழா மூடு விழாவானது.. ஜெயிலுக்கு போகும் குணசேகரன்.. எதிர்நீச்சல்!
சென்னை: குணசேகரனுக்கு மணி விழா நடைபெற இருப்பதால், ஈஸ்வரியின் அப்பா மற்றும் ரேணுகாவின் அம்மா இருவரும் சேர்ந்து நந்தினியின் அம்மா வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, ஈஸ்வரியின் அப்பா, மாப்பிள்ளை வீட்டில் விசேஷம் வைத்து இருக்கிறார்கள். இதற்கு நாம் தனித்தனியாக சீர் செய்வதைவிட ஒன்றாக சேர்ந்து செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து ஜனனியின் அப்பாவிற்கு விஷயம் தெரியுமா... தெரியாதா என்று தெரியவில்லை. ஏற்கனவே, அவர் அந்த குடும்பத்துடன் சண்டை போட்டுக் கொண்டுதான் சென்னையில் இருக்கிறார். இதனால் அவருக்கு விஷயம் தெரிந்ததா... என்று எனக்கு தெரியவில்லை என்கிறார். இதையடுத்து, ஈஸ்வரியின் அப்பா ஜனனியின் அப்பாவிற்கு போன் செய்து பேச, அவர், சக்தி மாப்பிள்ளை ஃபோன் செய்து மணி விழாவிற்கு என்னை அழைத்து இருப்பதாக சொல்லிவிட்டு, நானும் மணி விழாவிற்கு கட்டாயம் வருவேன் என்கிறார்.
இதையடுத்து, நேற்றைய தொடரில், அதிகாலையிலேயே எழுந்த ரேணுகா, அவரது கணவர் ஞானத்தையும் எழுப்பி விட்டு, விழாவிற்கு ரெடியாகுங்கள் என்று சொல்கிறாள். நேரத்தைப்பார்த்த ஆத்திரம் அடைந்த ஞானம் இரவு 3 மணி இந்த நேரத்தில் நான் எழுந்து என்ன செய்வது என்று கேட்க, நான் மட்டும் வேலை செய்து கொண்டு இருப்பேன், நீங்க நல்லா தூங்குவீர்களா... அதான் எழுப்பிவிட்டேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள் ரேணுகா, அப்போது, நந்தினியும் அழகாக புடவை கட்டிக்கொண்டு வந்து நிற்கிறாள். அப்போது, நந்தினி அக்கா, இந்த புடவை நல்லா இருக்கிறது, நீங்க விழாவிற்கு ரெடியாகிட்டிங்க போல என்று சொல்ல, கடுப்பான ரேணுகா, அட நீ வேற, இப்படி ஒரு மணி விழா வேண்டுமா... வேண்டுமா என்று நினைத்து நைட் புல்லா தூக்கமே வர, அதுக்குள்ள மணி இரண்டாகி விட்டது. இதற்கு மேல தூங்கி என்ன செய்வது என்று, குளித்து விட்டு புடவை கட்டி தயாராகிவிட்டேன் என்கிறாள்.

எதிர் நீச்சல் தொடர்கிறது: இந்த வீட்டில் நாம சந்தோஷப்படுற அளவிற்கு எதுவும் நடக்காது, யாராவது எதையாவது குற்றம் சொல்லிக்கிட்டேத்தான் இருப்பாங்க, நல்ல புடவை கட்டி அழகாக இருந்தா, நம்ம மனசு சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டு இருக்க அப்போது, ஜனனி அழகான புடவையில் ரெடியாகி வருகிறாள். இதைப்பார்த்த, நந்தினி, ரேணுகா இருவருமே நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்த, நல்ல தூங்க வேண்டியதுதானே என்று சொல்ல, இல்ல அக்கா, நானும் சேர்ந்து வேலை பார்க்கிறேன் என்கிறாள். அப்போது, ஈஸ்வரி சோகமான முகத்தோடு அங்கு வந்து, எனக்கு உங்களை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப சங்கடமா இருக்கு, இந்த விழா வேண்டாம் என்று நான் சொல்லிவிடுவேன். ஆனால், அதன்பிறகு இந்த வீட்டில் யாரையும் அவர் நிம்மதியாகவே இருக்க விடமாட்டார். அப்புறம் இந்த வீட்டோட நிம்மதியே போய்விடும். இந்த வீட்டில் நடக்கும் சில விஷயம் பிடிக்கவில்லை என்றாலும், பிள்ளைகளுக்காக, அதை எல்லாம் செய்ய வேண்டியதாக இருக்கு. ஆனால், இதனால், நான் மாறிவிடுவேன் என அவர் நினைக்கிறார். அது அவர் போடும் தப்புக்கணக்கு. இது வெறும் சடங்கு மட்டும் தான், இந்த சடங்கு என்னை மாற்றிவிடாது, மாற்றவும் மாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்று விடுகிறாள்.
நல்லாவே இருக்க மாட்டாரு: இதையடுத்து, பேசிய நந்தினி, ஈஸ்வரி அக்காவிற்கு தான், மாமாவை சுத்தமா பிடிக்கவே இல்ல, அவங்க வேண்டாம்னு முடிவு பண்ணி தனியா இருக்க முடிவு செய்த பிறகும், வேண்டுமென்று அவங்கள விடாப்பிடியா இப்படிக் கஷ்டப்படுத்துவது சரியே இல்ல... இதுதான் இருக்கிறதிலேயே கேவலமான விஷயம். மன வருத்தத்தோடு சொல்கிறேன், இவரு ஜெயிலுக்கு போனது தண்டனை அனுபவித்தது இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. ஆனால், இதுக்கு மேல வாழ்க்கையில இன்னும் நல்லா அனுபவிக்க போறாரு அது எனக்கு நல்லா தெரிகிறது என்று கோபத்தை வெளிப்படுத்தி பேசிக்கொண்டு இருக்கிறாள் நந்தினி.
இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருப்பதை ஜான்சி ராணி யாருக்குமே தெரியாமல் ஒட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்ட, நந்தினி, நாங்க பேசுறதா ஓட்டு கேட்டு, ஒன்னுக்கு ரெண்டா அத்தை கிட்ட போட்டு கொடுக்கணும். அதுதானே, உன்னுடைய வேலை. நீயே போய் ஒன்னுக்கு ரெண்டா ஏதாவது சொல்லி இந்த விழாவை நிறுத்திவிடு என்கிறாள். மேலும், உன்னை பாத்தாலே ஆத்திரமா வருது, உன்ன கொன்னாவது இந்த விழாவை நிறுத்தி விடுவேன். என நந்தினி ஜான்சியை திட்டுகிறான். அப்போது, ஜனனி என்னடி எல்லாருக்கும் வாய் ரொம்ப அதிகமாக இருக்கு, சமையல் அறையில் பயந்து பயந்த இருந்த நீங்க, இப்போ நடுவீட்டில், குரலை உசத்தி பேசும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா, முதல்ல இதற்கு முடிவு கட்டுகிறேன் என்கிறாள்.
இதையடுத்து, விடிந்ததும் அனைவரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். அப்போது, 3 தம்பிகளும், குணசேகரனுக்கு பாட்டு வேஷ்டியை எடுத்துக் கொடுத்து அதை அணிந்து வரும்படி சொல்கின்றனர். இதையடுத்து குணசேகரன் மகிழ்ச்சியாக நான் கட்டிக்கிட்டு வரேன், நீங்க மத்த வேலையை பாருங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டு, சக்தியை மட்டும் தனியாக அழைத்து ஏதோ பேசுகிறார். இதையடுத்து என்ன ஆனாது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

பயமா இருக்கு சக்தி: இதையடுத்து, வெளியான ப்ரோமோவில், சக்தி, எனக்கு பயமா இருக்குடா..."விழா நன்றாக நடக்குமா? உன்னுடைய மனைவி நினைத்தால் தான் பயமாக இருக்கிறது" புதுபுயலை என கிளப்பி விடுகிறார். ஆனாலும் சக்தி, அப்படியெல்லாம் இல்ல அண்ணே.. நிச்சயம் விழா நல்லபடியா நடக்கும் என சமாதானம் செய்துவிட்டு, நீங்க ரெடியாகி வாங்க அண்ணா என சொல்லிவிட்டு கிளம்புகிறேன். மணி விழாவுக்கு காலையில் எழுந்து அனைவரும் ஆயத்தமாக ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் அப்படியே அமர்ந்திருக்கிறார். ஆனால, மணி விழா ஆரம்பிக்கும் நேரத்தில், போலீஸ் வீட்டுக்குள் நுழைகிறது. இதனை பார்த்த விசாலாட்சி உட்பட அனைவரும், "என்ன ஜனனி செய்த.." என ஜனனியை கேள்வி கேட்கிறார்கள். சக்திக்கும் இது அதிர்ச்சியாக இருக்கிறது. குணசேகரன் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கிறார். அதாவது, ஜனனி மீது பூத்தொட்டி போட்டது, வாட்டர் ஹீட்டரை வெடிக்கவைத்து கொல்லப்பார்த்தது போன்றவற்றுக்கு ஜனனியிடம் ஆதாரம் இருக்கிறது. இதை, ஜனனி போலீசில் காட்டித்தான். குணசேகரனை மீண்டும் சிறைக்கு அனுப்பி ப்ரோமோவை பார்க்கும் போது தெரிகிறது. போலீஸ் எதற்காக உள்ளே வந்தது என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











