வயித்துல புள்ள இல்ல.. ஜனனியை அவமானப்படுத்திய விசாலாட்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரிலில் இதுவரை, நந்தினி, ஈஸ்வரி அக்காவிற்குத் தான், மாமாவை சுத்தமா பிடிக்கவே இல்ல, அவங்க வேண்டாம்னு முடிவு பண்ணி தனியா இருக்க முடிவு செய்த பிறகும், அவங்கள விடாப்பிடியா இப்படிக் கஷ்டப்படுத்துவது சரியே இல்ல... இதுதான் இருக்கிறதிலேயே கேவலமான விஷயம். மன வருத்தத்தோடு சொல்ற இவரு ஜெயிலுக்கு போனது தண்டனை அனுபவித்தது இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அவரு அதுக்கு இன்னும் நல்லா அனுபவிக்க போறாரு என்கிறாள்.
இதைத்தொடர்ந்து, அனைவரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். அப்போது, 3 தம்பிகளும், குணசேகரனுக்கு பாட்டு வேஷ்டியை எடுத்துக் கொடுத்து அதை அணிந்து வரும்படி சொல்கின்றனர். இதையடுத்து, குணசேகரன் நான் கட்டிக்கிட்டு வரேன், நீங்க மத்த வேலையை பாருங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டு, சக்தியை மட்டும் தனியாக அழைத்து, சக்தி, எனக்கு பயமா இருக்குடா..."விழா நன்றாக நடக்குமா? உன்னுடைய மனைவியை நினைச்சத் தான் பயமாக இருக்கிறது" என்று சொல்லி வருத்தப்பட. சக்தி, அப்படியெல்லாம் இல்ல அண்ணே.. நிச்சயம் விழா நல்லபடியா நடக்கும். நீங்க ரெடியாகி வாங்க அண்ணா என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

எதிர் நீச்சல்: இதையடுத்து, நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம், வீட்டில் அனைவரும் விழாவிற்காக ரெடியாகிக் கொண்டு இருக்க, ஈஸ்வரி மட்டும் ரெடி ஆகாமல் இருக்கிறாள். அப்போது அங்கு வரும், ரேணுகா, நந்தினி, ஈஸ்வரியின் முகம் வாடி இருப்பதை பார்த்து, அக்கா நேரமாகிவிட்டது புடவை கட்டிக்கொண்டு வாங்கள் என்று சொல்கின்றனர். அப்போது, தர்ஷினி, முன்னாடியே இந்த மணி விழா வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும், அப்போது அமைதியா இருந்துட்டீங்க. இப்போ, கிளம்பாமல் இருந்தா, மணி விழா நடக்காமல் போய்விடுமா என்று ஈஸ்வரியின் மீது கோபப்படுகிறாள். அப்போது, ஜனனி, அம்மா என்ன சூழ்நிலையில இருக்காங்கன்னு தெரியாம நீ பேசாத அவங்களுக்கு, இந்த விஷயத்துல விருப்பமே இல்ல. ஆனால், வேற வழியே இல்ல அதனால தான் அம்மா இந்த மணி விழாவிற்கு சம்மந்தம் சொன்னாங்க, அதை நீ புரிஞ்சிக்கோ என்கிறாள்.
வம்பு இழுத்த ஈஸ்வரி: மறுபக்கம் விழாவிற்கு ஈஸ்வரி என் அப்பா முதல் ஆளாக வருகிறார். அவரை அனைவரும் வரவேற்க, அப்பொழுது ஜான்சி ராணி மருமகனுக்கு மணி விழா, பெரிய மூட்டையில் சீர் கொண்டு வருவீங்கனு பார்த்தா,ரெண்டு கட்டை பையை தூக்கிட்டு வந்து இருக்கீங்க. உங்களுடைய கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா என்று கேட்க, அப்போது ஈஸ்வரியின் அப்பா எல்லாத்திற்கும் ஏற்பட்டை செய்துவிட்டுத்தான் வந்து இருக்கிறேன். இன்னும், கொஞ்ச நேரத்துல வண்டி வரும் என்று சொல்கிறார். அப்போது, ஜனனியின் அப்பா வருகிறார். அவரை, சக்தி வரவேற்க, குணசேகரன் என்ன தனியாக வந்து இருக்கீங்க, வீட்டில் இருந்து யாரையும் அழைத்து வரவில்லையா என்று கேட்கிறார்.
ஜனனியை அவமானப்படுத்திய விசாலாட்சி: அப்போது, ஜான்சி ராணி, மெட்ராஸ் காரங்களுக்கு தெரிந்த மரியாதை அவ்வளவு தான் போல, சம்மந்தி வீட்டில் இருந்து அழைப்பு வந்தா, குடும்பத்தோடு வந்து சீர் செய்யாமல், ஒத்த ஆளா, ஒத்த பையோட வந்து இருக்காரு, இத்தனை வருஷத்துல உங்க நிலைமை மட்டும் தான் மாறவே இல்லை என்று, ஜனனியின் அப்பாவை வம்பு இழுத்து குத்திக்காட்டி பேசுகிறாள். அப்போது, ஜனனியின் அப்பா, பார்வதியை அழைத்து வரலாம் என்று தான் நினைத்தேன் ஆனால், என் இரண்டாவது மகள் கர்ப்பமாக இருக்கிறாள், அவளை கவனித்துக்கொள்வதற்காக வீட்டில் இருக்கிறாள் என்று சொல்கிறாள். இது தான், ஜனனியின் அவமானப்படுத்த சரியான நேரம் என தெரிந்து கொண்ட விசாலாட்சி, உங்க ரெண்டாவது பொண்ணு கர்ப்பமா இருக்கா, ஆனால், உங்க முதல் பொண்ணு தானும், வாழம, அடுத்தவங்களையும் வாழ விடாமல் பண்ணிக்கிட்டு இருக்கா என்று ஜனனிக்கு குழந்தை இல்லாததை குத்திக்காட்டி பேசுகிறாள். அனைவரின் முன் விசாலாட்சி பேசியதால், ஜனனி மனம் முடிந்து அவமானப்பட்டு நிற்கிறார்.

வீட்டிற்கு வந்த போலீஸ்: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், மணி விழா நடக்கும் நேரத்தில் போலீஸ் திடீரென வீட்டிற்குள் வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, கதிர் வீட்டில் விசேஷம் நடக்கும் நேரத்தில் எதற்கு வந்தீங்க என்று கேட்க, இந்த வீட்டில் மருமகள்கள் பாதுகாப்பாக இருக்கிறாரார்களா என்பதை விசாரிக்க வந்து இருக்கிறேன் என்கிறார். உடனே கதிர், விசாரிப்பதற்கு வேற நாள் கிடைக்கவில்லையா... இப்போ நீங்க வெளியில் போறீங்களா இல்லையா என்று கோவப்படுகிறான்.
நடக்கப்போவது என்ன: உடனே, போலீஸ் அதிகாரி, போலீஸ் என்ன உங்க வீட்டில் வேலை செய்பவர்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா... எங்களுக்கும் மரியாதை இருக்கு, வீட்டில் பிரச்சனை என்றால், போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டியது, அதை விசாரிப்பதற்கு போலீஸ் வந்தா, ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கணுமா... எனக்கு இன்னைக்கும் தான் இந்த வீட்டில் இருக்கும் மருமகள்களை விசாரித்து ரிப்போட் அனுப்ப வேண்டும் என்று தகவல் வந்தது. அதற்காக நான் வந்து இருக்கிறேன். உங்க வீட்டில் விசேஷன் நடத்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன, நான் விசாரித்து விட்டு போய்விடுகிறேன் என்று சொல்கிறார். அப்போது,ஞானம் எங்க வீட்டில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல, எல்லாரும் நல்லாத் தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உடனே, போலீஸ் அதிகாரி, அதை நீங்க சொல்லக்கூடாது, உங்க வீட்டு மருமகள்கள் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்.
அப்போது, ரேணுகா, நந்தினி, ஜனனி என அனைவரும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, கதிர் கோவப்பட்டு, ஏய் நந்தினி, என்ன அமைதியா இருக்க என்று அவளை திட்ட, அந்த இடம் சலசலப்பாகிறது. அப்போது, குணசேகரன், டேய், என்னடா விசேஷம் நடக்கும் இடத்தில் இப்படி கோவப்படலாமா.. இப்போ என்ன, இந்த வீட்டு மருமகள்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல வேண்டும் அவ்வளவு தானே, ஜனனி நீ சொல்லுமா என்று சொல்கிறார். அப்போது, ஜனனி பூ தொட்டியை தள்ளிவிட்டது, அறையில் அடைத்துவைத்தது என அனைத்தையும் நினைத்துப்பார்க்கிறாள். இதையடுத்து, இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். ஜனனிக்கு குணசேகரன் மீது என்னத்தான் கோவம் இருந்தாலும், குணசேகரனை காட்டிக்கொடுக்க மாட்டாள், அப்படி காட்டி கொடுக்க வேண்டும் என்றால், நீதிபதி முன்பே சொல்லி இருப்பார். இதனால், குணசேகரன் நினைத்தபடி மணி விழா தடபுதலாக நடக்கப்போவது உறுதி.


Click it and Unblock the Notifications











