கர்ப்பமாக இருக்கும் ஜனனியை ஒழிக்க பிளான்.. நடக்கப்போகும் விபரீதம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் குறித்து ஜனனி சொன்ன அனைத்து விஷயத்தையும் ஈஸ்வரி நம்மாத நிலையில் ஜனனி உடைத்து போகிறாள்.இதற்கு மேல் நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறுகிறார். அதன் பிறகு மதிவதனிக்கு ஃபோன் செய்யும் ஜனனி, நாம் இருவரும் பேசியதை யாரோ ஒருவர் ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். நாம காரில் பேசிய ஆடியோ ஈஸ்வரி அக்காவிற்கு யாரோ அனுப்பியிருக்கிறார்கள். அதை கேட்டு விட்டு நான் வேண்டுமென்றே குணசேகரன் மீது பழி சுமத்துவதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்.
பின்னர் ஈஸ்வரி, அந்த வீடியோ குறித்து பார்கவி மற்றும் தர்ஷனியிடம் விசாரிக்கிறார். அப்போது பார்கவி, அந்த வீடியோவில் பாதி விஷயங்கள் தான் இருக்கிறது. பல இடங்களில் கட் செய்து எடிட் செய்து அனுப்பியிருக்கிறார்கள். அந்த வீடியோவில் முழு உண்மை இல்லை. ஜனனி அக்கா அப்படி பேசக்கூடியவர் இல்லை என்று கூறுகிறார். இதனால் ஈஸ்வரி, உண்மையில் என்ன நடந்தது என்று குழப்பத்தில் ஆழ்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது : இன்றைய எபிசோடில், ஜனனி சாப்பிடாமல் இருப்பதை பார்த்து வருத்தப்படும் நந்தினி, ரேணுகா இருவரும் ஜனனியிடம் சென்று பேசுகின்றனர். அப்போது ஜனனி எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை. ஆனால், பொய் சொல்வதாக நினைப்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறாள். இதுபோல தவறை குணசேகரன் செய்ததற்கான நான் இப்படி சொல்லவில்லை. இதை தவறை சக்தி செய்து இருந்தாலும் நான் அவனுக்கு நிச்சயமாக தண்டனை வாங்கி தருவேன் என சொல்கிறாள். அதைத்தொடர்ந்து விசாலாட்சி, நீங்க நாலு பேரும் எவ்வளவு ஒத்துமையா இருந்தீங்க இப்போ நீங்க பிரிஞ்சி இருப்பதை பார்க்க வருத்தமாக இருப்பதாக சொல்கிறார்.
ஜனனியை கொல்ல திட்டம்: அதன் பின், நள்ளிரவில் கதிருக்கு போன் செய்யும் வழக்கறிஞர், நான் வெளியில் இருக்கிறேன் ஒரு முக்கியமான விஷயத்தை பேச வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து கதிர், ஞானம், கரிகாலன் அனைவரும் வெளியே வருகின்றனர். அப்போது வழக்கறிஞர், நாளைக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்து விடும், வீட்டில் இருக்கும் பெண்கள் மாற்றி சொல்லிவிட்டால், குணசேகரன் வெளியே வரவே முடியாது என்கிறார். அப்போது கதிர், அனைவரும் அண்ணாவுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள் நீங்க பயப்படவே வேண்டாம் என்று சொல்கிறார். அப்போது வழக்கறிஞர், ஜனனி கோர்ட்டுக்கு வரக்கூடாது, அவ வந்து ஏதாவது செய்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறார். மேலும், அவள் கோர்ட்டுக்கு வர முடியாதபடி ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறாள். இதனால், கதிர், ஜனனியை ஒழித்துக்கட்ட பிளான் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடப்பதை பாக்கலாம்.


Click it and Unblock the Notifications