குணசேகரனை சிக்கவைத்த ஜனனி.. கோர்ட்டில் நடக்கப்போகும் அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சர் சீரியலில் நேற்றைய எபிசோடில் நள்ளிரவில் கதிருக்கு போன் செய்யும் வழக்கறிஞர், நான் வெளியில் இருக்கிறேன் ஒரு முக்கியமான விஷயத்தை பேச வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து கதிர், ஞானம், கரிகாலன் அனைவரும் வெளியே வருகின்றனர். அப்போது வழக்கறிஞர், நாளைக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்து விடும், வீட்டில் இருக்கும் பெண்கள் மாற்றி சொல்லிவிட்டால், குணசேகரன் வெளியே வரவே முடியாது என்கிறார். அப்போது கதிர், அனைவரும் அண்ணாவுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள் நீங்க பயப்படவே வேண்டாம் என்று சொல்கிறார். அப்போது வழக்கறிஞர், ஜனனி கோர்ட்டுக்கு வரக்கூடாது, அவ வந்து ஏதாவது செய்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறார். மேலும், அவள் கோர்ட்டுக்கு வர முடியாதபடி ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறாள்.

இன்றைய எபிசோடில் காலை வீட்டுக்கு வரும் வழக்கறிஞர் அண்ணானின் வழக்கு டிரையலுக்கு வந்துவிட்டது 22ந் தேதி வழக்கு விசாரணை என சொல்கிறார். இதைக்கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறார். அன்றைய தேதியில் தான் தர்ஷனுக்கு திருமண செய்ய முடிவு செய்து இருக்கிறோம் என்று சொல்கிறார். உடனே தர்ஷன் கல்யாணம் கூட பிறகு செய்து சொல்லாம் இப்போ அந்த வழக்கை பாருங்க என்று சொல்கிறார். உடனே கதிர், டேய் சும்மா இருடா, அண்ணன் உன் கல்யாணத்தை பார்க்க ஆசைப்படுகிறார். இதனால்,குறித்த தேதியில் கல்யாணம் நடக்க வேண்டும் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ஜனனியின் பிளான்: மேலும், அண்ணனுக்கு உடம்பு சரியில்லாததைவைத்து அவரால் விசாரணைக்கு வரமுடியவில்லை என்று சொல்லலாமா என்று கேட்க, வழக்கறிஞர் தாராளமாக சொல்லலாம்.ஆனால், அதற்கு வீட்டில் இருக்கு பெண்கள், அது உண்மை தான் என ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுதரவேண்டும் என சொல்கிறார். வழக்கறிஞர் கேட்டபடியே நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி என அனைவரும் கையெழுத்து போட்டு கொடுகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் சக்தி,தர்ஷனி, ஜனனி அனைவரும் சாரு பாலாவை பார்த்து வழக்கு குறித்து பேசுகின்றனர். அப்போது சாருபாலா, உங்கள் அண்ணன் இந்த வழக்கில் இருந்து வெளியில் வர பெரிய திட்டம் போடுகிறார். தர்ஷனுக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கும் நாளில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றார். மேலும், வழக்கு விசாரணைக்கு குணசேகர் உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை என்றும்,அதற்கு எங்களுக்கு சம்மதம் என 3 பேரும் கையெழுத்து போட்ட விஷயம் ஜனனிக்கு தெரியவருகிறது. இதனால், ஆத்திரப்படும் ஜனனி,அவரை நான் சும்மா விடமாட்டேன், இந்த வழக்கு குறிப்பிட்ட தேதியில் நடந்தே ஆக வேண்டும். விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க குணசேகருக்கு உடம்பு சரி இல்லை என பொய் சொல்லுகிறார்கள் என ஜனனி பதில் மனு தாக்கல் செய்ய சொல்லுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X