வீட்டையே அதிரவைத்த ஜனனி.. குணசேகரனின் ரகசியங்களை போட்டுடைத்ததால் பரபரப்பு.. எதிர்நீச்சல்!
சென்னை: எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடில், தர்ஷன் கல்யாணத்திற்காக வீட்டில் உள்ள அனைவருக்கும் குணசேகரன் புது புடவைகள் வாங்கிக் கொடுக்கிறார். அப்போது ஜனனி மட்டும் புது துணி வாங்காமல் இருப்பதை கவனித்த குணசேகரன், அவரையும் அழைத்து புது துணி கொடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜனனி, உங்களுடைய நாடகத்தை வீட்டில் இருப்பவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் இந்த நாடகத்தை போடாதீர்க என்று கூறி அந்த துணியை தூக்கி வீசுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, ஜனனியிடம் நீ செய்வது எல்லாம் நல்லது இல்ல. என்று கூறுகிறார். இதையடுத்து ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஜனனி, அக்கா, இங்கே நடந்த விஷயங்கள் உங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி நடந்த அனைத்து உண்மைகளையும் சொல்லத் தொடங்குகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் ஜனனியை தடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் ஜனனி, இன்று எல்லா உண்மைகளையும் சொல்லித்தான் ஆகவேண்டும். உங்களுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறி, குணசேகரன் வீட்டில் செய்த கொடுமைகள், பார்கவியின் அப்பாவை அடித்துக் கொன்றது, அன்புக்கரசியை தர்ஷனுடன் திருமணம் செய்து வைக்க முயன்றது உள்ளிட்ட அனைத்தையும் கூறுகிறார். அதோடு மட்டும் இல்லாமல், உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது குணசேகரன் தான். நீங்கள் பல நாட்கள் மருத்துவமனையில் கோமாவில் இருந்தீர்க. அந்த நேரத்தில் தான் தர்ஷனின் திருமணம் நடந்தது. மருத்துவமனைக்கு செல்லும் முன்பு, என்னை அடித்தது குணசேகரன்தான் என ஜீவானந்தத்துக்கு நீங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தீர்கள்.
ரகசிய வீடியோ: மேலும், குணசேகரன் அடித்ததை நீங்கள் உங்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தீர்கள். ஆனால் அந்த வீடியோ இப்போது யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டால் உண்மை தெரிந்து விடும் என்பதற்காகத்தான் அதை மறைத்து வைத்து நாடகம் ஆடுகிறார்கள் என்றும் ஜனனி கூறுகிறார். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, கடைசியில் இதை எல்லாம் நான் நம்ப வேண்டுமா? உன் மனதில் ஏன் இவ்வளவு வன்மம் இருக்கிறது? என் கணவரை உனக்கு பிடிக்காது என்பதற்காக இன்னும் என்னென்ன பொய்கள் சொல்லப் போற என்று கேட்கிறார்.
குழப்பத்தில் நந்தினி: இதைக் கேட்ட ஜனனி இடிந்து போய், இதற்கு மேல் நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறுகிறார். அதன் பிறகு மதிவதனிக்கு ஃபோன் செய்யும் ஜனனி, நாம் இருவரும் பேசியதை யாரோ ஒருவர் ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். நாம காரில் பேசிய வீடியோவை ஈஸ்வரி அக்காவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். அதை பார்த்து நான் வேண்டுமென்றே குணசேகரன் மீது பழி சுமத்துவதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்.
பின்னர் ஈஸ்வரி, அந்த வீடியோ குறித்து பார்கவி மற்றும் தர்ஷனியிடம் விசாரிக்கிறார். அப்போது பார்கவி, "அந்த வீடியோவில் பாதி விஷயங்கள்தான் இருக்கிறது. பல இடங்களில் கட் செய்து அனுப்பியிருக்கிறார்கள். அந்த வீடியோவில் முழு உண்மை இல்லை. ஜனனி அக்கா அப்படி பேசக்கூடியவர் இல்லை" என்று கூறுகிறார்.இதனால் ஈஸ்வரி, உண்மையில் என்ன நடந்தது என்று குழப்பத்தில் ஆழ்கிறார்.


Click it and Unblock the Notifications