ஆதி முத்து குடும்பத்தின் மர்மம்.. 30 வருட ரகசியத்தை கண்டுபிடித்த சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேற்றைய எபிசோடில், ராமேஸ்வரத்தில் இருக்கும் உன்னுடைய புருஷன் சக்தியை இங்கே வந்துவிட சொல்லு, அவன் எதையாவது கண்டுபிடிக்கிறேன் என்று இருந்தால், அவன் வீடு திரும்பமாட்டான். அவனுக்கு தேதி குறிச்சாச்சு, அவன் உயிரோட இருக்க வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கோள் என்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, சக்திக்கு போன் செய்கிறாள். ஆனால், சக்தி போனை எடுக்காததால் ஜனனி பதற்றம் அடைகிறாள்.

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜனனி, குணசேகரிடம் இன்னும் எத்தனை பேரை கொல்லப்போறீங்க. யார் யாரையெல்லாம் பழிவாங்க போகிறார், உங்களுடைய கௌரவத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா? என ஆத்திரத்தோடு கத்துகிறாள். அப்போது குணசேகரன், ஜனனி தள்ளிவிட அவள் கீழே விழுகிறாள். மறுபக்கம், தனுஷ்கோடியில் அடியாட்கள் சக்தியை சுற்றிவளைத்து கொல்வதற்காக வருகிறார்கள். அவர்களிடம் சக்தி சண்டை போடுகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, இன்றைய எபிசோடில், சக்தியை ஆதி குணசேகரனின் அடியாட்கள் கொல்ல வந்த நிலையில், அங்கு வந்தவர்கள் சக்தியை காப்பாற்றி, சக்தி தேடி சென்ற குருஜி கண்ணதாசனிடம் அழைத்து செல்கின்றனர். கண்ணதாசனிடம் சக்தி அந்த கடிதத்தை கொடுத்து தேவகி பற்றிய விசாரிக்கிறார். அப்பொழுது தான் பல ரகசியங்களை அந்த குருஜி சொல்கிறார்.

ஏமாற்றி திருமணம் செய்த ஆதி முத்து: அதாவது சக்தியின் அப்பா ஆதி முத்து ராமேஸ்வரத்திற்கு பிழைப்பு தேடி வந்த போது, வட மாநிலத்தில் இருந்து வந்த தேவகியை முதல் மனைவி இருப்பதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குணசேகரன், நேரடியாக ராமேஸ்வரத்துக்கு வந்து தேவகியை மிரட்டுகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கும்போது எதற்காக நீ திருமணம் செய்து கொண்டாய். இந்த சொத்திற்கு ஆசைப்பட்டு தான் நீ திருமணம் செய்து கொண்டாயா என கேட்கிறான். அப்போது, கண்ணீருடன் கதறி அழும் தேவகி. நான் சொத்துக்கு ஆசைப்படவில்லை, என்னிடம் இருக்கும் சொத்தை கொடுத்துத்தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன், அவரை நான் நம்பி வந்தேன் என்னை இப்படி விட்டுவிட்டார் என்று கதறி அழுகிறாள்.

கதறி அழுத தேவகி: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன், என்னது சொத்து கொடுத்து கல்யாணம் பண்ணியா? இந்த பிராடு தனத்தை என்கிட்ட வச்சுக்காத ஒழுங்கா, இந்த ஊரை விட்டு ஓடி விடு, இல்லை என்றால் உயிரோடு இருக்க மாட்ட என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது ஒரு சிறுவன் வந்து நின்றிகறார். அவனைப் பார்த்த குணசேகரன், இவன் யார் என்று கேட்க, இவன்தான் ஆதி முத்துவின் வாரிசு என்று சொல்கிறாள். இதைக் கேட்டு மேலும் கோபம் அடையும் குணசேகரன், இவன் ஆதி முத்துவின் மகன் என்றால், நான் யார்? நான் தான் ஆதி முத்து குடும்பத்தின் முதல் வாரிசு, இதுக்கு மேல் இந்த ஊரில் நீ இருந்த அவ்வளவதான். நீயும் உன்னுடைய மகனும் உயிரோடு இருக்க மாட்டீர்கள், மூட்டை முச்சியை கட்டிக்கிட்டு இந்த ஊரைவிட்டு போங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான். தேவகி இதைக்கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மகனை பிடித்து கதறி அழுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X