செய்த பாவம் சும்மாவிடாது? குணசேகரனை துரத்தும் பகை.. கதறும் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: சக்தியின் அப்பா ஆதி முத்து ராமேஸ்வரத்திற்கு பிழைப்பு தேடி வந்த போது, நேபளத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த தேவகியை முதல் மனைவி இருப்பதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குணசேகரன், நேரடியாக ராமேஸ்வரத்துக்கு வந்து தேவகியை மிரட்டுகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கும்போது எதற்காக நீ திருமணம் செய்து கொண்டாய். இந்த சொத்திற்கு ஆசைப்பட்டு தான் நீ திருமணம் செய்து கொண்டாயா என கேட்கிறான்.
அப்போது, கண்ணீருடன் கதறி அழுத தேவகி. நான் சொத்துக்கு ஆசைப்படவில்லை, என்னிடம் இருக்கும் சொத்தை கொடுத்துத்தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன், அவரை நான் நம்பி வந்தேன். என்னை அவர் இப்படி விட்டுவிட்டார் என்று கதறி அழுகிறாள். அப்போது, குணசேகரன், ஆதி முத்துவின் மகன், மூத்த வாரிசு நான் தான், இதுக்கு மேல் இந்த ஊரில் நீ இருந்தா அவ்வளவுதான். நீயும் உன்னுடைய மகனும் உயிரோடு இருக்க மாட்டீர்கள், மூட்டை முச்சியை கட்டிக்கிட்டு இந்த ஊரைவிட்டு போங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான். தேவகி இதைக்கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இந்த நேரத்தில் ஆதி முத்து இறந்துவிட,சொத்தைக் கேட்டு தேவகி, மகனுடன் வந்துவிடப் போகிறாள் என்று பயந்த குணசேகரன். ராமேஸ்வரத்திற்கு அனுப்பி தேவகியையும், அவளின் மகனையும் கொல்வதற்காக அடிஆட்களை அனுப்பினான். இதிலிருந்து தப்பி, தேவகி என்னிடம் வந்து சேர்ந்தாள், அப்போது தான் தேவகி இந்த விஷயங்கள் எல்லாம் என்னிடம் கூறினால். நான் இனிமேல் நீ ராமேஸ்வரத்தில் இருக்க வேண்டாம் என்று சொல்லி, தனுஷ்கோடிக்கு அழைத்து ஒரு வீட்டில் தங்க வைத்தேன். தேவகியை பல இடங்களில் தேடிப் பார்த்த குணசேகரனுக்கு தேவகி தனுஷ்கோடியில் இருப்பது தெரிந்துவிட மீண்டும் அடியாட்களை வைத்து அவளை கொல்லப் பார்த்தான் ஒரு கட்டத்தில் தேவகி அடியார்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்குள் சென்ற நிலையில் வீட்டில் பதுங்கி இருந்த குணசேகரன் தேவகியை கொன்று விட்டான்.
உடைந்து அழுத சக்தி: தேவகியின் மகன் ராணா வீட்டின் பின்பக்கமாக தப்பித்து சென்று விட்டான். தேவகியின் இறுதி அடங்கை செய்வதற்காக பல இடங்களில் நான் ராணாவை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து இறுதி சடங்குகளை செய்ய வைத்தேன். அதன் பிறகு இங்கிருந்தால் ராணவின் உயிருக்கு ஆபத்து என்று ஒரு விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தேன். ஆனால், சில நாட்களில் பிறகு அந்த விடுதியில் இருந்தும் ராணா தப்பித்து சென்று விட்டான். அவன் எங்கே இருக்கிறான் என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியவில்லை. தேவகியின் குடும்பத்திற்கும் அவளின் மகனுக்கும் குணசேகரன் செய்த பாவம் கொஞ்சநெஞ்சமில்லை என்று கண்ணதாசன் அனைத்தையும் சொல்லி முடிக்க, சக்தி உடைந்து அழுகிறான். அதேபோல வீட்டில் இந்த விஷயத்தை போனில் கேட்ட ஜனனி, நந்தினி, ரேணுகா அனைவரும் கதறி அழுதபடி நிற்கின்றனர். அப்போது ரேணுகா கொலைகாரப்பாவி இப்படி ஒரு குடும்பத்தை கொன்னுட்டியே என்று கதறி அழகிறாள். இதை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











