குணாசேகரன் Vs ராணா இறுதி யுத்தம்.. சக்தியை வரப்போகும் ஆபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் இத்தனை நாட்களாக மறைத்து வைத்த அனைத்து உண்மையும் தெரிந்து கொண்ட சக்தி உடைந்து அழுகிறான். அதேபோல வீட்டில் போனில் அனைத்தையும் தெரிந்து கொண்ட பெண்கள் கதறி அழுகின்றனர். அப்போது ரேணுகா, இத்தனை நாட்களாக நான் கஷ்டப்பட்டேன், என் சொத்து என்று சொன்னது எல்லாம் பொய்யா? ஒரு குடும்பத்தை அழித்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து தான் இந்த சொத்தை சேர்க்க வேண்டுமா? அனைத்திற்கும் காரணம் காசுதானா என கதறி அழுகிறாள்.

அதேபோல நந்தினி இந்த வீட்டில் இருப்பதற்கே எனக்கு பயமாக இருக்கு, இவ்வளவு மோசமானவர்களா? இத்தனை கொடுமையும் செய்துவிட்டு இவர்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது என கதறி அழுகிறாள். இவர்களை ஜனனி சமாதானப்படுத்துகிறாள், பின் இது பற்றி குழந்தைகள் யாரிடமும் சொல்ல வேண்டாம் அவர்களுக்கு தெரிந்தால் மிகவும் உடைந்து போவார்கள் என ஜனனி சொல்கிறாள். அப்போது ஜனனி சக்திக்கு போன் செய்கிறாள், ஃபோனை எடுத்த சக்தி, இங்கு பல பிரச்சனை இருக்கு ஜனனி என்று சொல்கிறான். உடனே ஜனனி, முதல் நீ கிளம்பிவா, ஏதாவது பிரச்சனை என்றால், எனக்கு ஃபோன் பண்ணு என்று சொல்லி கண்ணீர் விடுகிறாள். உடனே சக்தி, கவலைப்படாதே ஜனனி, இன்னைக்கு நைட் நான் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் குணசேகரன் சக்தியின் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல், பதட்டத்துடன் இருக்கிறான். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து அடியாளிடமிருந்து போன் வருகிறது. அந்த போனை எடுத்த குணசேகரன், நீ எல்லாம் ஒரு ஆளு, உனக்கு நான் போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்கணுமா என்று கோவப்பட்டு கத்துகிறார். அப்போது அடியால், ஒரு தவறு நடந்துவிட்டது சக்தி எங்களை அடித்து விட்டு சாமியார் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு திரும்பி வந்து கொண்டு இருக்கிறார் என சொல்கிறார். இதை கேட்டு ஆத்திரப்படும் குணசேகரன், அவன் கதையை முடித்துவிட்டு என்னிடம் பேச சொன்னா, நீ என்ன பண்ணிட்டு இதுருக்க. அவன் உயிருடன் ராமேஸ்வரத்தை விட்டு திரும்பக் கூடாது அவன் கதையை முடித்துவிடு, இல்லை என்றால் நான் ராமேஸ்வரம் வந்து உன்னை வெட்டி வீசிவிடுவேன் என்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X