அய்யோ, சக்தி.. குணசேகரிடம் கெஞ்சும் ஜனனி.. கதறி அழும் குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன், சக்தி ராமேஸ்வரத்திலிருந்து உயிரோட வரவேக்கூடாது, அவன் கதையை முடித்துவிட்டு என்னிடம் பேசு என அடியாளிடம் சொல்லிவிட்டு போனை வைக்கிறார். மறுபக்கம் விஷாலாட்சி தம்பியுடன் வீட்டிற்கு வருகிறாள். அப்போது ஜனனி, நந்தினி, ரேணுகாவுடன் பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் விசாலாட்சியின் தம்பிக்கு சாமி வந்து ஆடுகிறார்.
அப்போது, இந்த வீட்டில் பெரிய உயிர் போகிறது. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அது நடந்தே தீரும் என சொல்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் விசாலாட்சி, தனது மருமகள்களிடம் எந்த பிரச்சனையாக இருந்தாலும், நான் என் குணசேகரனிடம் பேசுகிறேன். நன்றாக இருக்கும் குடும்பத்தை பிரிக்க வேண்டாம் என கெஞ்சுகிறாள். ஆனால், ஜனனி இதற்கு மேல் எங்களால் அமைதியாக இருக்க முடியாது செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் சக்தி, இராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி வந்து கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் சக்தியை காரில் வழிமறிக்கின்றனர். அந்த மர்ம நபர்களிடம் சக்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பிரேவை முகத்தில் அடிக்க, சக்தி மயங்கி விழுகிறான். பின் மர்ம நபர்கள் அவனை கடத்திக் கொண்டு போய் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, அதை வீடியோவாக எடுத்து ஜனனிக்கு அனுப்புகின்றனர். அந்த வீடியோவை பார்த்து பதறிப்போன ஜனனி, கதறி அழுத படி குணசேகரனின் சட்டையை பிடித்து, சக்தியை என்னடா பண்ண, எதற்காக அவனை இப்படி கொடுமைப்படுத்துற, உன்னை நான் சும்மா விட மாட்டேன் என சட்டையை பிடித்து அடிக்கிறாள்.
சக்தியின் உயிருக்கு ஆபத்து: அப்போது குணசேகரன், என்ன பைத்திய மாதிரி பேசிக்கிட்டு இருக்க, நான் சக்தியை என்ன பண்ணேன் என்று கேட்க, அப்போது, நந்தினி அந்த வீடியோவை விசாலாட்சியிடம் காட்டுகிறாள். அதில் சக்தி தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருப்பதை பார்த்த விசாலாட்சி அதிர்ச்சி அடைந்து கதறி அழுகிறாள். எதுவுமே தெரியாதது போல குணசேகரன் அந்த வீடியோவை வாங்கி பார்த்து விட்டு, கதறி அழுது ஐயோ சக்தி, என் மகனே இப்படி தொங்கவிட்டு இருக்கிறார்களே அழுது நடிக்கிறான். இந்தப் பிரச்சினை எல்லாம் நடக்கும் என்பதற்காகத்தான் அவனை எங்கேயும் அனுப்பாதே என்று படித்து படித்து சொன்னேன்.
குணசேகரிடம் கெஞ்சும் ஜனனி: என்னை பழிவாங்குவதாக அங்கே, இங்கே அவனை அனுப்பிவிட்டு, இப்போது, அவனை பிரச்சனையில் சிக்கி வைத்துவிட்ட, இப்போது, என்னுடைய மகனுக்கு இந்த நிலைமை ஆகிவிட்டது. அய்யோ, என் நெஞ்செல்லாம் வலிக்கிதே, என குணசேகரன் நாடகம் ஆடுகிறான். இதைப்பார்த்த ஜனனி நாடகம் ஆடாதீங்க, நடிக்காதீங்க என்று டேபில் மீது இருந்த அனைத்து பொருளையில் குணசேகரன் மீது தூக்கி வீசுகிறாள். நீங்க நான் சக்தியை ஏதோ செய்து விட்டீங்க, இப்போ சக்தி மட்டும் இங்கே வரவில்லை என்றால், உங்களை நான் சும்மாவிடமாட்டேன் என ஜனனி கதறி அழுகிறாள். ஒரு கட்டத்திற்கு மேல், குணசேகரின் காலடியில் விழுந்து, தயவு செய்து சக்தியை என்னிடம் கொடுத்து விடுங்க, நாங்கள் யாரும் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டோம் என கதறி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











