யார் அந்த ராமசாமி மெய்யப்பன்? ஜனனியை மண்டியிடவைத்த குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்று எபிசோடில், ராமேஸ்வரத்திலிருந்து சக்தி நீண்ட நேரமாகியும் வராததால், ஜனனி கவலையில் இருக்கிறாள். பின் ஜனனியின் ஃபோனுக்கு சக்தி தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருக்கும் வீடியோ வருகிறது. இதைப்பார்த்து ஜனனி கதறி அழுகிறாள். இதற்கு எல்லாம் காரணம் குணசேகரம் தான் என கோவத்தோடு வரும் ஜனனி குணசேகரரின் சட்டையை பிடித்து, என் சக்தி எங்கே, சக்திக்கு என்ன ஆச்சு கதறி அழுகிறாள்.
அப்போது விசாலாட்சி சக்திக்கு என்ன ஆச்சு என்று கேட்க, நந்தினி அந்த வீடியோவை காட்ட விசாலாட்சியும் கதறி அழுகிறாள். அப்போது குணசேகரன், வீட்டில் இருக்கும் பெண்கள் தான் சக்தியை எங்கோ அனுப்பி சக்தியை பிரச்சனையில் சிக்க வைத்து வைத்து இருக்கிறார்கள். நான் தோளிலும் போட்டு வளர்த்த குழந்தை, என் மகன் சக்தி இப்போது எங்கோ கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறான் என நாடகம் ஆடுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், வேதனையோடு இருக்கும் ஜனனி ஞானத்திடம் உங்களுக்கு நிச்சயமாக சக்தி எங்கே இருக்கிறான் என்று தெரியும் தயவு செய்து சக்தியை விட்டு விட சொல்லுங்கள். அவர் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். நான் தான் தவறு செய்து விட்டேன். என்னைத்தான் அவருக்கு பிடிக்காது தயவுசெய்து சக்தியை விட்டு விட சொல்லுங்கள் என கதறி அழுகிறாள். பின் விசாலாட்சி, மூத்தவனே சக்திக்கு என்னடா ஆச்சு, இவ என்னென்னமோ சொல்லுற, அவனை காப்பாத்துப்பா, என் தம்பி வேற இந்த வீட்டில் ரெண்டு உயிர்பலி நடக்கும் என்று சொன்னானே என்று கதறி அழுகிறாள். அப்போது குணசேகரன், அம்மா இவ நாடகமாடுற நீ உள்ளே போமா நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.
சூழ்ச்சியின் பிடியில் ஜனனி: அதன் பின், குணசேகரன், ஜனனியிடம் உன்னிடம் சில விஷயங்களை தனியாக பேச வேண்டும் என்னுடைய அறைக்கு வாயென அழைத்து சென்று, நான் தான் சக்தியை கடத்தி வைத்திருக்கிறேன் என நீ நினைக்கிறியா? என கேட்க, ஜனனி ஆம் என தலையை அசைக்கிறாள். அப்படி நான் சக்தியை கடத்தி வைத்திருந்தால் எதற்காக கடத்தி வைத்திருக்கிறேன் என்பது உனக்கு நல்ல தெரியுமே, உன்னிடம் இருக்கும் அனைத்து ஆதாரத்தையும் என்னிடம் கொடுத்துவிடு நான் சக்தியை விட்டு விடுகிறேன் என சொல்கிறான். அப்போது ஜனனி, உங்கள் சம்பந்தப்பட்ட வீடியோ என்னிடம் இல்லை, அது வேறு ஒரு இடத்தில் இருக்கிறது. அந்த வீடியோ எனக்கு 3 நாள் கழித்துத்தான் கிடைக்கும் என சொல்கிறாள்.
நடக்கப்போவது என்ன: உடனே குணசேகரன், என் சம்பந்தப்பட்ட ஆதாரம் என்னென்ன இருக்கே அது அத்தனையும் இன்னும் மூன்று நாளில் என் கைக்கு வரவேண்டும். அதை என் கையில் கொடுத்து விட்டு, இந்த வீட்டிலிருந்து சத்தம் போடாமல் வெளியே போய்விட வேண்டும். அது வரைக்கும் இந்த விஷயம் வீட்டில் இருக்கும் வேறு யாருக்குமே தெரியக்கூடாது என சொல்கிறான். அனைத்திற்கும் ஜனனி சரியென தலையை ஆட்டி விட்டு வெளியில் செல்லும் பொழுது, ஏய் நில்லு. இன்னுமா, நான் நீ சக்தியை கடத்தி வைத்திருப்பேன் என நினைக்கிற, என்று சொல்லிவிட்டு போனை எடுத்து ஒருவருக்கு ஃபோன் செய்து, "என்னப்பா ராமசாமி மெய்யப்பா" சக்தி எப்படி இருக்கிறான். அந்த வீடியோவை ஜனனிக்கு அனுப்பிட்டியா என்று கேட்க, மறுமுனையில் இருக்கும் அந்த ராமசாமி மெய்யப்பன், நான் அந்த வீடியோவை ஜனனிக்கு அனுப்பிவிட்டேன், இந்நேரம் அவள் கதறி துடித்து அழுது கொண்டு இருப்பாள் என கூலாக பேசுகிறான். இதைக் கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைந்து இருக்கிறாள்.
யார் இந்த ராமசாமி மெய்யப்பன்: ஜனனியின் பழைய எதிரி தான் ராமசாமி மெய்யப்பன். ஜனனியின் பெரியப்பா பையான இவர், தர்ஷினியை திருமணம் செய்ய இருந்தார், திருமணம் நடக்கும் நேரத்தில் அவரை அவமானப்படுத்தி அனுப்பினார் ஜனனி. அதற்கு சக்தியும் உடந்தையாக இருந்தார். அந்த பழைய பகையை மனதில் வைத்துக்கொெண்டு தான் குணசேகரன் இப்படி ஒரு திட்டத்தை போட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











