தர்ஷன் பார்கவி திருமணம் செல்லாது..குணசேகரன் கொடுத்த ஷாக்.. கலங்கிய பார்கவி.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: சக்தியை கடத்திவைத்துக் கொண்டு மிரட்டும் குணசேகரன், என் சம்பந்தப்பட்ட ஆதாரம் என்னென்ன இருக்கே அது அத்தனையும் இன்னும் மூன்று நாளில் என் கைக்கு வரவேண்டும். அதை என் கையில் கொடுத்து விட்டு, இந்த வீட்டிலிருந்து சத்தம் போடாமல் வெளியே போய்விட வேண்டும். அது வரைக்கும் இந்த விஷயம் வீட்டில் இருக்கும் வேறு யாருக்குமே தெரியக்கூடாது என சொல்கிறான். அனைத்திற்கும் ஜனனி சரியென தலையை ஆட்டி விட்டு , ஆதாரத்தை எடுப்பதற்கான வீட்டை விட்டு வெளியில் செல்கிறாள்.

இன்றைய எபிசோடில், வீட்டை விட்டு வெளியே வந்த ஜனனி. கதறி அழுதபடி என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டிலேயே சக்தியை நினைத்து கதறி அழுத்தி கொண்டு இருக்கிறாள். மறுபக்கம் வீட்டில் குணசேகரன் அன்புக்கரசியிடம் இனிமேல் நீதான் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும், உனக்கு அனைத்து பொறுப்புகளையும் நான் கொடுக்கிறேன் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதன் பின் வெளியில் இருக்கும் நந்தினி, ரேணுகா, தர்ஷினி என அனைவரையும் அழைத்து. இனிமேல் சமையல் வேலைகள் எல்லாம் நீங்கள் தான் செய்ய வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் ஆத்திரப்படுகின்றனர். அப்போது தர்ஷினி, ஜனனி சித்தியை ஏதோ பேசி வெளியில் அனுப்பி விட்டீர்கள். சக்தி சித்தப்பாவை கடத்தி வைத்திருப்பது நீங்க தான் என எங்களுக்கு நன்றாகவே தெரியும், ஜனனி சித்தி வெளியில் போய் விட்டாலும், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என பேசுகிறாள். இதை கேட்டு ஆத்திர படம் குணசேகரன் தர்ஷனியின் கன்னத்தை பளார் என அடிபட்டு. நீயே இவ்வளவு பேசும்போது, உன் அப்பன் நான் எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும். இதற்கு மேல் இந்த வீட்டில் நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் தான் அனைவரும் கேட்க வேண்டும் என சொல்கிறாள்.

குணசேகரனின் ட்விஸ்ட்: அதோடு மட்டுமல்லாமல் குணசேகரன் கதிரிடம் ஒரு சாமியாரை பார்த்து வீட்டிற்கு வரச்சொல், வீட்டில் அன்புக்கரசிக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என சொல்கிறார். இதைக் கேட்டு ஆத்திரப்படும் நந்தினி, என்ன அன்புச்சரசிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா? ஜனனியை வெளியில் அனுப்பிவிட்டு புதிதாக வேறு ஒரு நாடகத்தை ஆரம்பித்திருக்கிறீர்களா? என கேட்கிறாள். இனிமேல் எதையும் நான் ஆரம்பிக்க மாட்டேன் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது. ஏற்கனவே கல்யாணமான அன்புக்கரசிக்கு எதற்கு மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இதைக்கேட்டு மேலும், அதிர்ச்சி அடையும் நந்தினி கல்யாணம் ஆகிவிட்டதா, யார் கூட என்று கேட்க, அதான் தர்ஷன் அன்புக்கரசிக்கு கல்யாணம் நடந்து முடிந்துவிட்டதே என்கிறார்.

பார்கவி நிலை என்னாகும்: அதோடு இல்லாமல், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் கல்யாணம் ஆனதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. உங்களிடம் பார்கவிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணம் ஆனதற்கான ஆதாரம் இருக்கிறதா என குணசேகரன் கேட்கிறாள். இப்படியெல்லாம் நீங்கள் பேசுவீர்கள் என்று தெரிந்து தான் நாங்கள் போட்டோ எடுத்து வைத்திருக்குறோம் என்று சொல்கிறாள் நந்தினி. என்னது போட்டோ.. அந்த போட்டோ இப்போது இருக்கானு பாருங்கள் என்ன சொல்ல தர்ஷினி மொபைலில் போட்டோவை பார்க்க அனைத்து போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தது போல ஒரு சர்டிபிகெட்டை தயார் செய்து காட்ட ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X