சட்டப்படி நான் தான் தர்ஷன் பொண்டாட்டி.. பழிதீர்க்கும் அன்புக்கரசி..எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் நேற்றைய எபிசோடில் குணசேகரன், அன்புக்கரசிக்கும் தர்ஷனுக்கும் தான் திருமணம் நடந்தது அவர்களின் திருமணத்தை நான் ரிஜிஸ்டர் செய்து இருக்கிறேன் என கூறுகிறார். இதை பார்த்து குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பார்கவி என்ன செய்வது என தெரியாமல் நிலை குலைந்து இருக்கிறாள்.

இன்றைய எபிசோடில், ரேணுகா, நந்தினி இருவரும், தர்ஷனிடம் எங்களுக்கு தான் வேறு வழியில்லை, ஜனனி இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என சொல்லிவிட்டு போயிருக்கிறாள். அதனால், நாங்கள் இந்த வீட்டில் இருக்கிறோம். நீங்க இரண்டு பேரும் வேறு எங்காவது சென்று விடுங்கள் என சொல்கிறாள். அப்போது பார்கவி, என்னால் தான் அனைத்து பிரச்சனையும் வருகிறது. நான் தர்ஷனை திருமணம் செய்து கொண்டதே பெரிய தவறு, தெரியாமல் திருமணம் செய்து கொண்டேன். நானே இந்த வீட்டை விட்டு வெளியே போய் விடுகிறேன் என கிளம்புகிறாள். இதனால் ஆத்திரப்படும் தர்ஷன் எப்பொழுதுமே உனக்கு உன்னுடைய பிரச்சனை மட்டும் தான் பெருசா தெரியும். என்னை பற்றி நீ கவலைபட்டதே இல்லை என்று கோபப்படுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: தர்ஷன் பேச்சால் கோபப்படும் பார்கவி, ஆமாம் நான், என்னைப் பற்றி மட்டும் தான் யோசிப்பேன் வேறு யாரைப் பற்றியும் யோசிக்க மாட்டேன். ஆனால், உன்னை போல நிமிஷத்திற்கு நிமிடம் மாற்றிப் பேச மாட்டேன் என்று இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இதைப்பார்த்த ரேணுகா, எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் இப்படி சண்டை போட்டு பிரிய வேண்டும் என்பதற்காகத்தான் குணசேகரன் அன்புக்கரசியை இந்த வீட்டில் வைத்து இருக்கிறார். அது தெரியாமல் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்ளாதீங்க என சொல்கிறாள். பின் தர்ஷினி, பார்கவியும் தர்ஷனும் இங்கே இருந்தால், நிச்சயமாக ஏதாவது பிரச்சனை செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தர்ஷனை வேறு எங்காவது அனுப்பி விடலாம் என சொல்கிறாள். இதையடுத்து தர்ஷன் தன்னுடைய நண்பன் வீட்டுக்கு கிளம்ப அப்போது குணசேகரன் அவனை தடுத்து நிறுத்தி நீ எங்கேயும் போகக்கூடாது என சொல்கிறார்.

சக்திக்கு என்னாச்சு: மறுபக்கம் ஜனனி என்ன செய்வது என்று தெரியாமல் சக்தியை தேடி காரில் அழுதபடி சிவகாசிக்கு சென்று கொண்டு இருக்கிறாள். அப்போது தர்ஷினிக்கு ஃபோன் செய்யும் ராமசாமி மெய்யப்பன் என்ன ஜனனி வீடியோவை தேடி போறியா எனக்கேட்ட ஆமாம் வீடியோவுடன் நிச்சயம் வருவேன் அதுவரை சக்தியை ஏதும் செய்து விடாதே என கதறி அழுகிறாள். இதை எடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X