இதே கட்டிலில் கணவன் மனைவியா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.. வரம்பு மீறிய அன்புக்கரசி.. எதிர்நீச்சல்!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், தர்ஷன் கோவமாக பேசியதால், கோபப்படும் பார்கவி, ஆமாம் நான், என்னைப் பற்றி மட்டும் தான் யோசிப்பேன் வேறு யாரைப் பற்றியும் யோசிக்க மாட்டேன். ஆனால், உன்னை போல நிமிஷத்திற்கு நிமிடம் மாற்றிப் பேச மாட்டேன் என்று இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இதைப்பார்த்த ரேணுகா, எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் இப்படி சண்டை போட்டு பிரிய வேண்டும் என்பதற்காகத்தான் குணசேகரன் அன்புக்கரசியை இந்த வீட்டில் வைத்து இருக்கிறார். அது தெரியாமல் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்ளாதீங்க என சொல்கிறாள்.

இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வரும் பெண் போலீசார், அன்புக்கரசியை திருமணம் செய்து கொண்டு பார்கவியுடன் வாழ்ந்து வருவதாக அன்புக்கரசி புகார் அளித்து வருகிறார். அது பற்றி விசாரிப்பதற்காக வந்தோம் என்று சொல்ல, நந்தினி பார்கவி தான் எங்கள் வீட்டு மருமகள் என்று சொல்கிறாள். ஆனால், சட்டப்படி அன்புக்கரசி உடன் தான் திருமணம் நடந்து இருக்கிறது. இதனால் பார்கவி இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என சொல்கிறாள். அப்பொழுது நந்தினி பார்க்கவி என் சொந்தக்காரப் பெண் என்று சொல்கிறாள். இதையடுத்து, அந்தப் பெண் போலீஸ் பார்கவியால் அன்புக்கரசிக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும், அதேபோல அன்புக்கரசி தான் என் மனைவி என்று தர்ஷன் எழுதிக் கொடுக்க வேண்டும் என சொல்கிறார். பெண் போலீஸ் கூறியது போல, பார்கவி, தர்ஷன் இருவரும் எழுதி கொடுக்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் சக்தியைத் தேடி சென்ற ஜனனி, ஒரு பழக்கடையில் தர்ஷனின் புகைப்படத்தை காட்டி, இவர் என் கணவர், இங்கு தான் வந்து இருக்கிறார். ஆனால், அவரை நேற்றில் இருந்து காணவில்லை என்றுசொல்கிறாள். சக்தியின் போட்டோவை பார்த்த பழக்கடைக்காரர், நேற்று என் கடைக்கு வந்தார். இந்த பக்கமாகத்தான் சென்றார் என்றுசொல்ல, ஜனனி சக்தியை தேடி செல்கிறாள்.

நான் தான் உன் பொண்டாட்டி: மறுபக்கம், குணசேகரன் வீட்டில், அன்புக்கரசி, தர்ஷனிடம் சட்டப்படியில் நீங்களும் நானும் தான் கணவன் மனைவி. நாம் இரண்டு பேர் தான் சேர்ந்து வாழ வேண்டும். அந்த விடியா மூஞ்சி பார்கவியை மறந்து விட்டு என்னுடன் சேர்ந்து வாழுங்கள் என சொல்கிறாள். எதைக்கேட்டு ஆத்திரப்படும் தர்ஷன், என்னைக்கும் நான் உன்கூட சேர்ந்து வாழ மாட்டேன், என்னுடைய மனைவி பார்கவி மட்டும்தான் என்கிறான். அப்போது அன்புக்கரசி, இப்போ இப்படித்தான் சொல்லுவீங்க, நீங்களும் நானும், இதே அறையில், இதே கட்டிலில் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்துவோம் என்று சொல்ல, ஆத்திரப்படும் தர்ஷன், கட்டிலில் தலையை மூட்டி கொள்கிறான். அங்கு வரும் குணசேகரன், டேய் என்னடா அடங்க மாட்டியா? நீ செத்தா காரியம் பண்ணிட்டு நான் போய்கிட்டே இருப்பேன். ஒழுங்கா என் மகனா இந்த வீட்டில் இரு, இல்லை என்றால், இந்த வீட்டைவிட்டு வெளியில் போய் இருக்கும் உன் சித்தியும்,சித்தப்பாவும் வீட்டுக்கு வர வேண்டாமா என்று மிரட்டுகிறார். இதனால், தர்ஷன் பதில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X