பகையை தீர்க்க வந்த அறிவுக்கரசி.. பார்கவியின் வாழ்க்கை என்னாகும்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் வீட்டில், அன்புக்கரசி, தர்ஷனிடம் சட்டப்படி நீங்களும் நானும் தான் கணவன் மனைவி. நாம் இரண்டு பேர் தான் சேர்ந்து வாழ வேண்டும். அந்த விடியா மூஞ்சி பார்கவியை மறந்து விட்டு என்னுடன் சேர்ந்து வாழுங்கள் என சொல்கிறாள். எதைக்கேட்டு ஆத்திரப்படும் தர்ஷன், என்னைக்கும் நான் உன்கூட சேர்ந்து வாழ மாட்டேன், என்னுடைய மனைவி பார்கவி மட்டும் தான் என்கிறான். அப்போது அன்புக்கரசி, இப்போ இப்படித்தான் சொல்லுவீங்க, நீங்களும் நானும், இதே அறையில், இதே கட்டிலில் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்துவோம் என்று சொல்ல, ஆத்திரப்படும் தர்ஷன், கட்டிலில் தலையை மூட்டி கொள்கிறான். அங்கு வரும் குணசேகரன், நீ செத்தா காரியம் பண்ணிட்டு நான் போய்கிட்டே இருப்பேன். ஒழுங்கா என் மகனா இந்த வீட்டில் இரு, இல்லை என்றால், இந்த வீட்டைவிட்டு வெளியில் போய் இருக்கும் உன் சித்தியும்,சித்தப்பாவும் வீட்டுக்கு வர வேண்டாமா என்று மிரட்டுகிறார்.

இன்றைய எபிசோடில், யாரும் எதிர்பாக்காத வகையில் அறிவுக்கரசி வீட்டுக்குள் நுழைகிறாள். அறிவுக்கரசிகை பார்த்த ஒட்டுமொத்த குடும்பமும், அதிர்ச்சியாக இருக்க அறிவுகரசி நேராக குணசேகரன் காலில் விழுந்து என்னை வெளியில் எடுத்ததற்கு மிகவும் நன்றி என சொல்கிறாள். இதனால், ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கின்றனர். அப்போது அறிவுக்கரசி, இங்கு நடந்த அனைத்து விஷயங்களும் எனக்கு நன்றாகத் தெரியும், அனைத்தையும் மாமா சொல்லி தான் நான் செய்தேன். நான் மட்டும் அன்னைக்கு ஜெயிலுக்கு செல்லவில்லை என்றால் ரெண்டு பேரும் ஜெயிலுக்கு போய் இருப்போம். அதனால் நான், மாமா சொன்னதை கேட்டு ஜெயிலுக்கு போனேன். மாமா வீட்டிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார். இனிமேல் நடக்கப் போவதை பாருங்கள் என சொல்கிறாள். இதனால் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் நந்தினி, ரேணுகா, தர்ஷினி, பார்கவி என அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

வீட்டிற்குள் வந்த அறிவுக்கரசி: வீட்டிற்கு வரும் அறிவுக்கரசி, பிரியாணி. கோழி என அனைத்தையும் ரசித்து சாப்பிடுகிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் தர்ஷினி, மரியாதையாக இந்த வீட்டை விட்டு வெளியே போ, நீ ஒரு கொலைகாரி, கொலைகாரி இந்த வீட்டில் இருப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என சொல்கிறாள். அப்போது குணசேகரன், இது என் வீடு என் உழைப்பால் கஷ்டப்பட்டு வாங்கிய வீடு இந்த வீட்டை உங்க அம்மா வாங்கினாளா? இல்லை உன் சித்திமார்கள் வாங்கினார்களா? நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டில் யார் வேண்டுமானாலும் இந்த வீட்டில் இருப்பார்கள் என சொல்கிறார்.

கோவப்பட்ட நந்தினி: இதைக்கேட்டு ஆத்திரப்படும் நந்தினி, இந்த வீட்டை நீங்கள் எப்படி வாங்குனீங்க? யார் யாரெல்லாம் என்னென்ன செய்தீர்கள் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் எங்களுக்கு தெரிந்து விட்டது, மீண்டும் அதே கதையை எங்களிடம் சொல்லாதீங்க எங்களுக்கு எல்லா கதையும் தெரியும் என சொல்கிறாள். இதனால் ஆத்திரப்படும் குணசேகரன், டேய் கதிர் நாளைக்கு ஆடிட்டரை வரச்சொல், யார் யாருக்கு இந்த வீட்டில் உரிமை இருக்கிறது, யார் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறார்கள் என்பது நாளைக்கு தெரிந்து விடும் எனச் சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X