பார்கவியை ஏமாற்றிய தர்ஷன்.. அறிவுக்கரசி தர்ஷினி போட்ட ஸ்கெட்ச்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி சக்திய தேடி பல இடத்தில் அலைந்து கொண்டு இருக்கிறார். ஜனனி வீட்டில் இல்லாததை பயன்படுத்திக் கொள்ள நினைத்த குணசேகரன், ஜெயிலில் இருந்த அறிவுக்கரசியை ஜாமீனில் கெடுத்து தன்னுடைய வீட்டிலே தங்க வைக்கிறார். ஏற்கனவே பார்கவி, தர்ஷன் கல்யாணம் செல்லாது. தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் தான் திருமணம் நடந்தது என திருமணத்தை போலியாக பதிவு செய்து இருக்கிறார். இதனால் பார்கவி உச்சகட்ட வருத்தத்தில் இருக்கிறாள்.
தர்ஷன், அன்புக்கரசி உடன் ஒரே அறையில் இருப்பதால், பார்கவி இரவு முழுக்க தூங்காமலே இருக்கிறாள். அதே நேரம், காலையில் அன்புக்கரசி தர்ஷன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சொல்லி அழுகிறாள். ஆனால் தர்ஷனோ நான் எதுவும் செய்யவில்லை. அவள் ஏதோ ஒரு மாத்திரை கொடுத்தால், அதை சாப்பிட்டதிலிருந்து எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை என சொல்கிறான். ஆனால் அன்புக்கரசி தர்ஷன் என்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டான். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோவை காட்டுகிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் தர்ஷினி, இப்படி அசிங்கமா பொய் சொல்றீங்களே அசிங்கமா இல்லையா, வேண்டுமென்றே நாடகமாடி, இவர்களை சேர்த்து வைக்க பார்க்கிறீர்களா? அதை நான் நடக்க விட மாட்டேன் என சொல்கிறாள். இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டே இருக்க தர்ஷன் என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் குழப்பத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைப்பார்த்து ஆத்திரப்படும் பார்கவி, என்ன சொல்வது என்று தெரியாமல் கதறி அழுகிறாள். அப்போது நந்தினி, வேண்டுமென்றே குணசேகரன் செய்யும் வேலை, உண்மையில் தர்ஷன் தப்பா நடந்திருக்க மாட்டான். ஜனனி வீட்டில் இல்லாத இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, உன்னையும் தர்ஷனையும் பிரிக்க பார்க்கிறார். அதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள். அதை நான் பலமுறை உன்னிடம் சொல்லிவிட்டேன் தயவுசெய்து புரிந்துகொள் என சொல்கிறாள். அப்போது பார்கவி, இவ்வளவு பெரிய பழியை தர்ஷன் மீது போட்டு இருக்கிறார்கள். நான் அப்படி செய்யவில்லை என்று தர்ஷன் தானே சொல்ல வேண்டும், ஆனால், அவர் ஏன் அமைதியாக இருக்காரு சக்தி சித்தப்பா நல்லபடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக அவன் எதுவுமே பேசவில்லை, நான் அவரின் பொண்டாட்டி தானே, இதை எல்லாம் பார்த்துக்கொண்டு நான் எப்படி அமைதியாக இருக்க முடியும் என சொல்லிவிட்டு, தயவு செய்து கொஞ்சநேரம் என்னை தனியாக விடுங்க, என்னிடம் எதையும் கேட்காதீங்க என சொல்லிவிட்டு செல்கிறாள்.
சக்தியை தேடி அலையும் ஜனனி: மறுபக்கம் சக்தியை தேடி ஜனனி பல இடங்களில் அலைந்து கொண்டு கொண்டிருக்க, ஓட்டல் ஒன்றில் இருந்து சிசிடிவி வீடியோ வாங்கி பார்க்கிறாள் ஜனனி. அந்த வீடியோவில் ஷக்தியை ஒருவர் பின் தொடர்ந்து செல்வது தெரிய வருகிறது. அந்த நபரை ஜனனி எதர்ச்சையாக சந்திக்க, இவர் தான் சக்தியை கடத்தி இருப்பார் என்ற சந்தேகத்தின் பெயரில அந்த நபரை பின்தொடர்ந்து செல்கிறாள் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











