சக்தியை வாயிலேயே மிதித்த வில்லன்.. தேடி அலையும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: சக்தி இரண்டு கைகளும் கட்டப்பட்டது மயங்கிய நிலையில் இருக்கிறான். சக்திக்கு சற்று மயக்கம் தெளிய கைகட்டுகளை அவிழ்த்து விடுங்கள். பாத்ரூம் செல்ல வேண்டும் என சொல்ல அவனுடைய கை கட்டுகளை ராமசாமி மெய்யப்பன் அவிழ்த்து விடுகிறான். உடனே, சக்தி உங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னை எதிர்த்து எதிர்த்து பேசுவ, இப்போ எதுவுமே பேசாமல் இருக்க என கிண்டல் அடிக்கிறான். அந்த நேரம் ராமசாமி மெய்யப்பனுக்கு போன் வர, அவன் ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறான். அந்த நேரத்தில் சக்தி தனது அருகில் இருக்கும் ஃபோனை கஷ்டப்பட்டு எடுத்து ஜனனிக்கு போன் செய்ய, ஜனனி, ஒருவரை பின் தொடர்ந்து காரில் சென்று கொண்டு இருப்பதால், அந்த போனை எடுக்காமல் விடுகிறாள்.
மறுபக்கம் வீட்டில் அன்புக்கரசி, தர்ஷன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்ன பொய் சொல்லியும் தர்ஷன் பேசாம இருந்ததால், இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என முடிவு செய்த பார்கவி வீட்டை விட்டு செல்ல முடிவு எடுக்கிறாள். தர்ஷினி, நந்தினி என அனைவருமே அவளை சமாதானப்படுத்தியும், பார்கவி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். இந்த நேரத்தில் அறிவுக்கரசி, பார்கவியிடம் இந்த வீட்டை விட்டு மரியாதையாக வெளியில் சென்று விடு என சொல்லி மிரட்டுகிறாள். இனிமேல் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன். எனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என பார்கவி வெளியே செல்ல முற்படுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது தர்ஷன், பார்கவியின் கையைப் பிடித்து இழுது என்னை விட்டு நீ போக போறியா? நான் பேசாமல் இருந்தது தவறுதான் பார்கவி, அதற்காக நீ என்னை விட்டு போக முடிவு செய்யலாமா? உண்மையிலேயே நான் உன்னை காதலிக்கிறேன். மாற்றி மாற்றி நான் பேசியது எல்லாம் உண்மைதான். ஆனால், இப்பொழுது நான் திரிந்தி விட்டேன் பார்கவி. நீ இல்லாமல் என்னால் நிச்சயமாக வாழ முடியாது என்று பார்கவியின் கைப்பிடித்து அழுகிறான். இதைப்பார்த்து ஆத்திரப்படும் அறிவுக்கரசி, எவ்வளவு திமிர் இருந்தால் என் முன்னாடியே இப்படி பேசுவ, மறியாதையா ரெண்டு பேருமே இந்த வீட்டை விட்டு வெளியில் போங்க. இந்த வீட்டை வீட்டில் நீங்கள் வெளியில் போனா சாப்பாட்டுக்கு பிச்சை தான் எடுக்க வேண்டும். நீ போட்டு இருக்கும் சட்டை, பேண்டு கூட என் அப்பன் வாங்கி கொடுத்தது தான். தர்ஷா வெளியில் போய் நல்ல வாழ்ந்துவிடலாம் என நினைக்காதே எங்க ரெண்டு பேரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறாள்.
பணத்திற்கு என்ன செய்வது: வீட்டில் இப்படி பிரச்சனை நடந்து கொண்டு இருக்க, அந்த நேரம் நந்தினிக்கு மருத்துவமனையில் இருந்து ரேணுகா ஃபோன் செய்து, மருத்துவ செலவிற்கு 15 லட்சம் ரூபாயை கட்ட வேண்டும் என சொல்கிறார்கள். நான் ஜனனிக்கு ஃபோன் செய்தேன், ஜனனி எடுக்கவில்லை எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என சொல்கிறாள். இதைக் கேட்டு நந்தினி பதற்றம் அடைய. அப்போது அந்த ஃபோனை ஞானம் வாங்கி பேசி விட்டு, 15 லட்ச ரூபாய் தானே அது எல்லாம் எங்களுக்கு பிச்சை காசு அதை நாங்கள் கொடுத்து விடுகிறோம் என சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











