ஜனனி சாகணும் கர்ஜித்த அறிவுக்கரசி.. விசாலாட்சி எடுக்கப்போகும் முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜனனி, பைக் சென்ற நபரை பின்தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறாள். வீட்டில் பார்கவி, அறிவுக்கரசி வெளியில் போக சொல்ல, தர்ஷன் அவளை தடுத்து நிறுத்துகிறான். அதன் பின் இருவரும் வீட்டை விட்டு வெளியில் கிளம்ப தயாராக, அப்போது அறிவுக்கரசி, தர்ஷன் இதே வீட்டில் தான் இருக்க வேண்டும். அவனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் நடக்கப் போகிறது என சொல்கிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடில் ஜனனி காரில், அந்த நபரை பின்தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறாள். அந்த நபர் ஒரு காட்டுப்பகுதியில், பைக்கை நிறுத்திவிட்டு சென்று விடுகிறான். ஆனால், எந்த திசையில் சென்றால் என எதுவுமே தெரியாமல் காட்டுப்பகுதியில் சிக்கிக் கொண்டு இருக்கிறாள் ஜனனி. பைக்கில் சென்ற அந்த நபர், வில்லன் ராமசாமியிடம், நீங்கள் கேட்ட மருந்தை வாங்கி வந்து விட்டேன் என கொடுக்க, அந்த மருந்தை சக்திக்கு கொடுக்கப்படுகிறது. அதை குடித்த சக்தி அப்படியே மயங்கி விடுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில், அறிவுக்கரசி தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் வீட்டிலேயே திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் நந்தினி, விஷாலாட்சி அறையின் கதவைத் தட்டி, இத்தனை நாட்களாக எங்க போனீங்க, ஐந்தாவது பிள்ளையில் ஒரு பிள்ளை போனால் பரவாயில்லை என நினைத்து விட்டீர்களா... ? வீட்டில் எவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. அதை பற்றி எல்லாம் உங்களுக்கு கவலையே இல்லையா என கேட்கிறாள். இதனால் கோபப்படும் விஷாலாட்சியை நந்தினியை அடித்துவிட்டு வாய்க்கு வந்தபடி பேசாதே. என் மகன் சக்தியை அந்த நிலையில் பார்த்துவிட்டு எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக கோயில் கோயிலாக சென்று வருகிறேன் என்கிறாள்.

அவர் தான் காரணம்: அப்போது, சக்தி சித்தப்பா நல்லபடிய வரவேண்டும் என்றால், நீங்க போகவேண்டியது கோவிலுக்கு இல்ல, உங்க மகன் குணசேகரன் கிட்ட கேட்கணும். அவர் தான் சக்தி சித்தப்பாவை கடத்தி வெச்சி, ஜனனியை இந்த வீட்டை விட்டு அனுப்பி இருக்கிறார். அதோடு இல்ல, தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் கல்யாணம் நடந்த மாதிரி, பொய்யாக கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்து இருக்கிறார். இதுஎல்லாம் உங்களுக்கு தப்பா தெரியவில்லை. அப்போது, இந்த பெண் பார்கவியோ வாழ்க்கை என்ன ஆவது என்று கோபத்துடன் பேசுகிறாள்.

ஜனனி இனி வரமாட்டா: அப்போது அறிவுக்கரசி,யார் என்ன சொன்னாலும், எவ குறுக்க வந்தாலும், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் வீட்டில் திருமணம் நடக்கத்தான் போகுது. வெளியில் போன ஜனனி இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டாள். ஜனனியும், சக்தியும் பிணமாகத்தான் வீட்டுக்கு வருவார்கள் என்று சொல்ல, கோபப்பட்ட தர்ஷினி அறிவுக்கரசியை அடிக்க பாய்கிறாள். அப்போது, அறிவுக்கரசி அருவாமனையை எடுத்து வந்து, உங்கள் அனைவரையும் வெட்டி கொன்று விடுவேன். சக்தியும் ஜனனியும் உயிரோடு இந்த வீட்டிற்கு திரும்ப மாட்டார்கள் என சவால் விடுகிறாள். இதைப்பார்த்து பதறிப்போன விசாலாட்சி, அறிவுக்கரசியை தடுத்து நிறுத்தி, அவளை சமாதான படுத்துவிட்டு என் மகன் வரட்டும், உனக்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு செல்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X