சக்தி ஆதி முத்துவின் ரத்தம் இல்லையா? சக்தியின் பிறப்பின் ரகசியம் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: வீட்டிலேயே அன்புக்கரசிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று அறிவுக்கரசி சொன்னதால், கடுப்பான தர்ஷினி அறிவுக்கரசியை அடிக்க பாய்கிறாள். அப்போது, அறிவுக்கரசி அருவாமனையை எடுத்து வந்து, உங்கள் அனைவரையும் வெட்டி கொன்று விடுவேன். சக்தியும் ஜனனியும் உயிரோடு இந்த வீட்டிற்கு திரும்ப மாட்டார்கள் என சவால் விடுகிறாள். இதைப்பார்த்து பதறிப்போன விசாலாட்சி, அறிவுக்கரசியை தடுத்து நிறுத்திவிட்டு, சரியான ரௌடி பொம்பளைய யார் வீட்டிற்குள் விட்டது, என் மகன் வரட்டும் என்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் தர்ஷினியை சமாதானம் செய்து அழைத்துச் செல்லும் ரேணுகா, அறிவுக்கரசியிடம் சண்டை போட்டு, நீ ஜெயிலுக்கு போக போறியா? அவளுக்கு நம்முடன் சண்டை போடுவது தான் வேலை, அவளை நாம் வேறு வகையில் தான் அடக்க வேண்டும் என சொல்கிறாள். இதையடுத்து, அனைவரும் ஒரு திட்டம் போட்டு, சமையல் செய்ய செல்கின்றனர். இதைப்பார்த்து அறிவுக்கரசி ஆத்திரப்படுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் குணசேகரன், கதிர், ஞானம் என அனைவரும் கோயிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்புகின்றனர். அப்போது, சக்தியை கடத்தி வைத்திருக்கும் ராமசாமியிடம் இருந்து ஃபோன் வர, குணசேகரன் போனை எடுத்து என்ன விஷயம் என கேட்கிறார். அப்போது ராமசாமி, எனக்கு ஜனனி மீது,ஏதோ சந்தேகமாக இருக்கிறது. அவள் வீடியோவை தேடி போகுற மாதிரி எனக்கு தெரியல்லை என்கிறார். அப்போது குணசேகரன், அதற்கு வாய்ப்பே இல்லை, அவள் வீடியோவை தேடி தான் போயிருக்கிறாள். நீ பயப்படாமல் அடுத்த கட்ட வேலையை பார், அப்படியே அங்கு வந்தால் சக்தி, ஜனனி இருவரின் கதையும் முடித்து விடு என சொல்கிறார்.
வருத்தப்படும் ஞானம்: குணசேகரன் பேசியதை கேட்டு வருத்தப்படும் ஞானம், அண்ணா, சக்தி நம்ப தம்பி அவனை விட்டுவிடலாம் அண்ணா. இது ஜனனியின் திமிருக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தான். ஆனால், சக்தி நம்ப தம்பி, அவனை மன்னித்து விடலாம் என சொல்கிறான். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், என்ன பேசுற, அவன் ஜனனி உடன் சேர்ந்து கொண்டு என்னையெல்லாம் செய்தான் என்பதை மறந்துவிட்டியா?அடுத்து வீட்டில் இருக்கும் பொம்பளைகள் பாவம், அவர்களையும் விட்டுவிடலாம் என்று சொல்லுவா, இதெல்லாம் சரிப்பட்டு வராது ரெண்டு பேரின் கதையை முடிக்க வேண்டும் என சொல்கிறான்.
சக்தி நம்ம ரத்தமில்லையா: உடனே ஞானம், ஜனனியால் தான் சக்தி இப்படி மாறிவிட்டான் நாம் சொல்லி புரிய வைத்தால் அவன் சரியாகி விடுவான் சக்தியை விட்டு விடுங்க அண்ணா என்கிறான். அப்போது குணசேகரன், நம்ம ரத்தத்தை நான் எதுவும் செய்ய மாட்டேன், நான் சொல்வது உனக்கு புரிகிறதா என கேட்கிறார். உடனே ஞானம் நம்ம ரத்தம் என்றால், என்ன எனக்கு புரியவில்லை. அப்போ சக்தி நம்ப ரத்தம் இல்லையா என கேட்கிறார். உடனே குணசேகரன் ஆக்ரோஷத்துடன், இப்பவும் நம்ம ரத்தத்தை நான் எதுவும் செய்யமாட்டேன் என கத்துகிறார். இதனால, சக்தி, தேவதையின் மகனான இருப்பானோ என்கின்ற சந்தேகம் வருகிறது.இதையடுத்து நாளை என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











