அய்யோ கடவுளே.. சக்தி இறந்துவிட்டாரா? கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் கல்யாணத்தை செய்து வைக்க வேண்டும் என வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. மறுபக்கம் ஜனனி, சக்திகை தேடி பல இடங்களில் அலைந்துவிட்டு கடைசியில் சக்தி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறாள். ஜனனி சக்தியை தேடி காட்டிற்குள் வந்துவிட்டது ராமசாமிக்கு தெரிந்துவிட, இதுக்கு மேல சத்தியை உயிரோடு விடக்கூடாது என சக்தியை ஒரு சவப்பெட்டியில் வைத்து அடைத்து விடுகிறான். சக்தி இருக்கும் குடோனுக்கு ஜனனி வந்துவிட அங்கு இருப்பவர்களிடம் சண்டை போட்டு அனைவரையும் அடி அடி என அடிக்கிறாள்.
ஆனால், அந்த குடோனில் பல இடத்தில் சக்தியை தேட, சக்தி சவப்பெட்டியில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் சக்தியை ஜனனி தனது தோளிலேயே சுமந்து. ஆம்புலன்ஸுக்கு போன் செய்து விஷயத்தை கூற ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வந்து விடுகிறது. ஆம்புலன்ஸில் ஏறி சென்றதை பார்த்த ராமசாமி ஒரு போலீசுக்கு போன் செய்து இருவரின் போட்டோவை அனுப்புகிறேன் அவர்கள் ஆம்புலன்ஸில் தப்பி செல்கிறார்கள் அவர்களை பிடித்து என்னிடம் ஒப்படைத்து விடு, இந்த விஷயம் குணசேகருக்கு தெரியக்கூடாது என்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதைத்தொடர்ந்து போலீசார் ஜனனி வரும் ஆம்புலன்ஸை வழி மறித்து, சோதனை செய்ய வேண்டும் என சொல்கிறார். இதனால் ஆத்திரப்படும் ஜனனி, என்னுடைய கணவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். ஆம்புலன்சில் ஆட்கள் இருக்கும் போது, இப்படி செக் பண்ணக்கூடாது என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள். ஆனால், அந்த போலீஸ், அது எல்லாம் எனக்கு தெரியும், ஆம்புலன்ஸில் தான் நட்சத்திர ஆமையை கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்து இருக்கு, வண்டியை நல்லாக செக் செய்துவிட்டுத்தான் அனுப்புவோம் என்று சொல்கிறார். அப்போது ஜனனி, என் கணவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் தயவு செய்து வழி விடுங்கள் என சொல்ல, போலீஸ் வேண்டும் என்றே தாமதப்ப படுத்துகிறார். இதையடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











