சக்திக்கு பல்ஸ் இல்ல... கைவிரித்த மருத்துவர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜனனி சக்தியை ஆம்புலன்சில் அழைத்து சென்றதைப் பார்த்த ராமசாமி, போலீஸ் ஒருவருக்கு தகவல் கொடுத்து ஜனனி செல்லும் ஆம்புலன்சை வழி மறித்து அழைத்து வர சொல்கிறார். இதையடுத்து, போலீசார் ஜனனி வரும் ஆம்புலன்ஸை மறித்து, சோதனை செய்ய வேண்டும் என சொல்கிறார். இதனால் ஆத்திரப்படும் ஜனனி, என்னுடைய கணவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். ஆம்புலன்சில் ஆட்கள் இருக்கும் போது, இப்படி செக் பண்ணக்கூடாது என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள். ஆனால், அந்த போலீஸ், அது எல்லாம் எனக்கு தெரியும், ஆம்புலன்ஸில் நட்சத்திர ஆமையை கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்து இருக்கு, வண்டியை நல்லாக செக் செய்துவிட்டுத்தான் அனுப்புவோம் என்று சொல்கிறார். அப்போது ஜனனி, என் கணவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் தயவு செய்து வழி விடுங்கள் என சொல்ல, போலீஸ் வேண்டும் என்றே தாமதப்ப படுத்துகிறார்.

இன்றைய எபிசோடில் குணசேகரன் தனது தம்பிகளுடன் வீட்டிற்கு வருகிறார். குணசேகரன் வருகைக்காக காத்திருந்த விசாலாட்சி சக்திக்கு என்ன ஆச்சு, சக்தியை யார் கடத்தியது. வீட்டில் இருப்பவர்கள் சக்தியை கடத்தி வைத்திருப்பது நீதான் என சொல்கிறார்கள். அறிவுக்கரசி இந்த வீட்டில் நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கா, இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சக்தியை கடத்தியது யார் என்று கேட்கிறாள். அப்போது, குணசேகரன் வீட்டில் இவளுங்க பேச்சைக்கேட்டுக்கிட்டு நீ பேசாதம்மா, எதையோ விசாரிக்க அனுப்புகிறேன் என்று சொல்லி சக்தியை வெளியில் அனுப்பிவிட்டு, இப்போ அவன் பிரச்சனையில் இருக்கான். இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என மீனாட்சி படத்தின் முன்பு விசாலாட்சியின் தலையில் அடித்து, உன் மேல சத்தியமாக என் தம்பிகளுக்கு நான் எந்த துரோகமும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்கிறார். இதைப்பார்த்து வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியின் முன்பு குணசேகரன் பற்றி ஜனனி புகார் அளிக்கிறாள். அப்போது நீதிபதி, ஏற்கனவே குணசேகரன் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. நீ தைரியமாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்தையும் சொல்லு என சொல்ல, ஜனனி குணசேகரன் இதுவரை செய்த அனைத்து விஷயத்தையும் ஒன்னு விடாமல் ஜனனி சொல்கிறாள். மறுபக்கம் சக்தியை மருத்துவமனையில் அனுமதிக்க, அவரை பரிசோதனை செய்த டாக்டர் பல்சே இல்லை என சொல்கிறார். உடனே நல்ல செக் பண்ணுங்க டாக்டர் பல்ஸ் இருக்கு என சொல்ல, மருத்துவர் இல்லமா என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஜனனி அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறாள். சக்தி பிழைப்பாரா இல்லையா என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











