பாய்ந்தது குண்டாஸ்.. தலைமறைவான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், சக்தியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சக்திக்கு உரிய சிகிச்சை கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றப்படுகிறது. இதையடுத்து, மாஜிஸ்ட்ரேட் நீதிபதியின் முன்பு குணசேகரன் பற்றி ஜனனி புகார் அளிக்கிறாள். அப்போது நீதிபதி, ஏற்கனவே குணசேகரன் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. நீ தைரியமாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்தையும் சொல்லுங்க என சொல்ல, ஜனனி, குணசேகரன், ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றதில் இருந்து ஈஸ்வரியை தாக்கியதுவரை அனைத்து விஷயத்தையும் ஒன்னு விடாமல் சொல்கிறாள்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி, குணசேகரனை வெளியில் வரமுடியாதபடி குண்டாஸ் போட்டு கைது செய்ய, அய்யா துரை தலையில் குழு அமைக்க உத்தரவிடுகிறார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அய்யா துரை, ஜனனியை சந்தித்து, தனி ஒரு பெண்ணாக இருந்து, உங்கள் கணவரை மீட்டுக் கொண்டு வந்தீர்கள். உங்களின் தைரியத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்களுடைய வழக்கின் விவரம் மொத்தத்தையும் நான் படித்துவிட்டேன். இதற்கு மேல் குணசேகரனை வெளியில் விடாதபடி குண்டாஸில் கைது செய்வதற்கான உத்தரவு போடுகிறேன். அதே போல இந்த வழக்கை தொடர்ந்து கொற்றவை விசாரிப்பார் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரன் குண்டாஸில் கைது செய்யப்பட இருக்கும் விஷயத்தை போலீஸ்காரர் ஒருவர் குணசேகரனுக்கு தெரியப்படுத்துகிறார். இதனால், ஆத்திரப்படும் குணசேகரன் அந்த மெட்ராஸ்காரி, எனக்கு எதிராக வழக்கு போட்டு இருக்கிறாள். என்னை கைது செய்வதற்கு போலீஸ் வீட்டிற்கு வருகிறதாம் என சொல்ல ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். ஜனனி, என்ன செய்கிறாள் என நான் பார்த்து விடுகிறேன். இதற்கு மேல் நான் அவளுக்கு பயப்பட மாட்டேன் என சொல்கிறார்.

குணசேகரனை கைது செய்ய வரும் போலீஸ்: இந்த விஷயத்தை கேட்ட ஞானம், வழக்கறிஞருக்கு ஃபோன் போட்டு பேச, அந்த வழக்கறிஞர், அய்யா துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர், மிகவும் கண்ணியமானவர். அவரை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டம். எந்த நேரத்திலும் போலீஸ் வீட்டுக்கு வந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் கைது செய்யலாம். இதனால் ஒரு வாரம் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருங்கள், நான் அதற்கும் அனைத்தையும் சரிகட்டி விடுகிறேன் என சொல்கிறார்.

தலைமறைவான குணசேகரன்: இதைத்தொடர்ந்து ஞானம், இதற்கு மேல் நாம் இங்கு இருந்தா போலீஸ் நம் அனைவரையும் கைது செய்து விடுவார்கள். நாம் இங்கிருந்து கிளம்பலாம் என சொல்ல குணசேகரன் மற்றும் கதிர் இருவரும் வர முடியாது, அந்த ஜனனிக்கு பயந்து இந்த வீட்டை விட்டு நான் போக வேண்டுமா என கேட்கிறார். அப்போது, ஞானம் இப்போது அதைப்பற்றி பேசுவதற்கு நேரம் இல்லை, போலீஸ் அண்ணனை கைது செய்துவிட்டால், அவரால் வெளியே வரவே முடியாது என பல விஷயத்தை எடுத்து சொல்லி, அவரை எப்படியோ சமாளித்து வைத்து வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்ல, அந்த நேரத்தில் ரேவதி, நந்தினி, தர்ஷனி என அனைவரையும் அவரை சூழ்ந்து கொண்டு, யாரும் வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது. செய்த தவறுக்கு, நீங்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என தடுக்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவரையும் அறிவுக்கரசி ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட, குணசேகரன் தனது தம்பிகளுடன் தப்பித்து சென்றுவிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X