புருஷனை விட்டுட்டு ஜீவானந்தம் கூட வாழ்ந்தாங்க..ஊரே காரிதுப்புச்சி..வரம்பு மீறிய அன்பு..எதிர்நீச்சல்!

சென்னை: பார்கவியை பார்த்த அன்புக்கரசி, சமையல் அறைக்கு சென்று, உனக்கும் தர்ஷனுக்கும் இன்னும் எதுவுமே நடக்கவில்லையா? அதில், நான் உன்னை விட மூத்தவளாக இருக்கிறேன். எந்த சந்தேகம் என்றாலும் என்னிடம் கேட்டு தெரிந்து கொள். தர்ஷனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எனக்குத்தான் நன்றாக தெரியும் என சொல்ல ஆத்திரப்படும் பார்கவி, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா,என்று கத்துகிறாள்.பார்கவி கத்தும் சத்தம் கேட்டு அங்கிருந்து ஓடி வருகிறார் தர்ஷன். அப்போது, அங்கு வரும் ஜனனி, பார்கவியை சமாதானப்டுத்தி, அன்புக்கரசியை இந்த வீட்டில் வைத்து இருக்க காரணமே, உங்களுக்குள் சண்டை வர வேண்டும் என்பதற்காகத்தான்.

இதனால், நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசினால் அனைத்தும் சரியாகிவிடும். இருவரும் பெங்களூர் சென்றுவிட்டு வாருங்கள் என சொல்கிறாள். அப்போது, தர்ஷன், அம்மா இப்படி இருக்கும் போது நான் வெளியில் சென்றால் நன்றாக இருக்காது, வேண்டாம் என்கிறான். ஆனால், பார்கவி, இல்ல தர்ஷா நாம ஊருக்கு போகலாம் என சொல்கிறாள். இதை கரிகாலன் கேட்டுவிட்டு அன்புக்கரசியிம் சொல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: தர்ஷனும் பார்கவியும் பெங்களூர் போகும் விஷயத்தை கரிகாலன் குணசேகரனுக்கு போன் செய்து சொல்கிறான். இதைக்கேட்ட குணசேகரன் அவர்கள் இருவரும் இனிமேல் ஒன்றாகவே சேரக்கூடாது எப்படியாவது இந்த பிளானை தடுக்க வேண்டும் என ஒரு திட்டத்தை சொல்கிறார். மறுநாள் காலை தர்ஷன் பார்கவி இருவரும் பெங்களூருக்கு செல்வதற்காக கிளம்பும் நேரத்தில் அன்புக்கரசியும் நானும் வெளியூர் கிளம்புகிறேன் என சொல்கிறார். அப்போது தர்ஷினி நீ எங்க போற என்று கேட்க என்னுடைய சொந்தக்காரர்கள் திருச்சியில் இருக்காங்க அவர்களை பார்ப்பதற்காக நான் போகிறேன் என்று சொல்கிறாள்.

உங்க அம்மா ஒழுங்கம் இல்லாதவங்க: உடனே தர்ஷினி எனக்கு யாருமே இல்லை, நான் அனாதை என்று சொல்லித்தானே இந்த வீட்டிற்குள் வந்தே, இப்போது என்ன திருச்சியில் சொந்தக்காரர்கள் இருக்காங்கனு சொல்ற என்று கேட்கிறாள். உடனே அன்புக்கரசி எல்லாத்தையும் நானும் கற்றுக் கொண்டேன், ஒண்ணுமே இல்லாத பாட்டு வாத்தியாரின் மகளே காடு மேடு எல்லாம் அலைந்து,கல்யாணம் நடக்கும் நேரத்தில் சரியாக வந்து தர்ஷனை கல்யாணம் செய்து செய்துக்கிட்ட, ஆனால் எல்லா வசதிகளும் இருக்கும் நான் யோசிக்க மாட்டேன்னா? இவர்கள் இருவரும் இப்போ ஹனிமூனுக்காக பெங்களூர் செல்கிறார்கள் அது எனக்கு நன்றாகவே தெரியும் என சொல்கிறாள்.

ஆத்திரப்பட்ட தர்ஷினி: உடனே தர்ஷினி, அவர்கள் பெங்களூர் போவது உனக்கு எப்படி தெரியும் என கேட்க புதிதாக கல்யாணமானவர்கள் ஊட்டி, கொடைக்கானல் போவார்கள். ஆனால், தர்ஷன் கொடைக்கானலுக்கு போக மாட்டான். ஏனென்றால், தர்ஷனின் அம்மா, புருஷனை விட்டுவிட்டு, யாரோ ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். அதனால், அந்த ஊரில் இருப்பவர்கள் கேவலமா பேசினார்கள். தர்ஷனுக்கு அங்கு போனால், அந்த ஞாபகம் வந்துவிடும் என்பதால், அங்கு போக மாட்டார் எனக்கு நன்றாகவே தெரியும் என்று சொல்ல, என் அம்மாவை பத்தியே நீ தப்பா பேசுறியா? என ஆத்திரப்பட்ட தர்ஷினி, அன்புத்தரசியின் கழுத்தை பிடித்து அடிக்கப்பாய்கிறாள். இதை தடுத்து நிறுத்தும் நந்தினி, இவள் வேண்டுமென்றே பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறாள். அதற்கு நீ இடம் கொடுத்து விடாதே என சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு மேலே செல்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X