இன்று முதல் இரவு..ரெடியான பார்கவி..தலைநிறைய மல்லிப்பூவுடன் காத்திருக்கும் அன்புக்கரசி.. எதிர்நீச்சல்!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் தர்ஷன் பார்கவி இருவரும் பெங்களூருக்கு செல்ல இருந்த நிலையில் நானும் ஊருக்கு செல்கிறேன் என அன்புக்கரசி கிளம்பியதால் பிரச்சனை ஏற்பட்டு தர்ஷனும் பார்கவியும் பெங்களூர் செல்லும் பிளான் கைவிடப்பட்டது. இதையடுத்து, வீட்டிலேயே அவர்களுக்கு சாந்தி முகூர்த்ததற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என ஜனனி டீம் திட்டம் போடுகின்றனர். இதையடுத்து, இன்று என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் கோவிலில் இருக்கும் குணசேகரன் தன்னுடைய தம்பிகளிடம், இந்த குடும்பத்தை அழிக்க நினைத்த ஒரு விஷயத்தை நான் வேரோடு அழித்துவிட்டேன். ஆனால், அந்த விதை துரத்திக் கொண்டே வருகிறது. அவர்களுடன் கூட்டு சேர, சக்தி திட்டம் போடுகிறான். அவனை இப்படியே விட்டு வைத்தால், இந்த குடும்பத்தை மொத்தமாக சின்னாபின்னமாக்கிவிடும், அதற்கு நான் விடமாட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம், குணசேகரனுக்கு ராமேஸ்வரத்தில் சக்தியை கண்காணிக்கும் நபரிடம் இருந்து போன் வருகிறது. அப்போது குணசேகரன் அவன் கதையை முடித்துவிடு என சொல்ல ஞானம், கதிர் அதிர்ச்சி அடைகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது ஞானம், அண்ணா கொஞ்சம் யோசிக்கலாம். அவனை அழைத்து பேசலாம், அவன் ஜனனி பேச்சை கேட்டுத்தான் இப்படி செய்கிறான் என்று சொல்ல, உனக்கு மட்டும் தான் தம்பியா அவன் எனக்கும் தம்பிதான் அவனை விட்டு வைத்தால், இந்த குடும்பத்தின் ஆணி வேரையே ஆட்டி விடுவான். அவன் கதையை முடிப்பது தான் சரி என சொல்கிறார். அப்பொழுது கரிகாலன் போன் செய்து வீட்டில் பார்கவிக்கும் தர்ஷனிக்கும் முதலிரவுக்கான ஏற்பாடு நடக்கிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என சொல்கிறான். இதைக்கேட்ட குணசேகரன், சந்தோஷமா நடக்கட்டும்டா, அங்க அன்புக்கரசி இருக்காளா? அவ எல்லாத்தையும் பார்த்துப்பா ஃபோனைவை என சொல்கிறார்.

முதல் இரவுக்கு ரெடியான பார்கவி: மறுபக்கம் வீட்டில் பார்கவி புடவையில் அழகாக அலங்கரித்து முதலிரவுக்கு தயார் செய்கின்றனர். பார்கவி அழகான புடவையில் இருப்பதை பார்த்த நந்தினி, அழகாக இருக்க, என் கண்ணே பட்டுவிடும் போல, பார்த்து புரிந்து நடந்துக்கோ என சொல்ல ரேணுகா, தர்ஷினி, ஜனனி அனைவருமே நந்தினியை கிண்டல் செய்கின்றனர். தர்ஷனுக்கும் பார்கவிக்கும் முதலிரவு நடக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட அன்புக்கரசியும் அழகாக புடவை கட்டு கட்டி தலை நிறைய மல்லிப்பூவை வைத்து முதலிரவுக்கு தயாராகி இருக்கிறாள். இதையடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X