சக்திக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்று, பார்கவி புடவையில் அழகாக அலங்கரித்து முதலிரவுக்கு தயார் செய்கின்றனர். பார்கவி அழகான புடவையில் இருப்பதை பார்த்த நந்தினி, அழகாக இருக்க, என் கண்ணே பட்டுவிடும் போல, பார்த்து புரிந்து நடந்துக்கோ என சொல்ல ரேணுகா, தர்ஷினி, ஜனனி அனைவருமே நந்தினியை கிண்டல் செய்கின்றனர். தர்ஷனுக்கும் பார்கவிக்கும் முதலிரவு நடக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட அன்புக்கரசியும் அழகாக புடவை கட்டி தலை நிறைய மல்லிப்பூவை வைத்து முதலிரவுக்கு தயாராகி இருக்கிறாள்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், தர்ஷன் பார்கவி இருவரும் முதலிரவு அறையில் மனம் விட்டு பல விஷயங்களை பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அன்புக்கரசி தர்ஷனுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் தர்ஷனின் போனுக்கு அனுப்புகிறாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்கவி, கோபத்துடன் அறையை விட்டு வெளியே வந்துவிட, தர்ஷன் அவளை சமாதானப்படுத்துவதற்காக வருகிறான். இந்த சத்தம் கேட்டு, அனைவரும் எழுந்து வந்து என்ன நடந்தது என்று கேட்கின்றனர். அப்போது தர்ஷன், அன்புக்கரசி வேண்டும் என்றே, எப்போதே எடுத்தபோட்டோவை அனுப்பி பிரச்சனை கேட்கிறார் என சொல்ல தர்ஷினி இவளை என்னுடைய சும்மா விடக்கூடாது என்று கோவத்துடன் அன்புக்கரசி இருக்கும் அறைக்கு சென்று தட்டுகிறாள். ஆனால், அவள் கதவை திறக்காமல் இருக்க, ஜனனி அவளை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைத்தொடர்ந்து சக்தி, தனுஷ்கோடியில் இருக்கும் தேவகியின் குருஜி கண்ணதாசன் அவர்களை சந்திப்பதற்காக செல்கிறார். இதை கவனித்த குணசேகரின் அடியாள். குணசேகரனுக்கு போன் செய்து சக்தியை எங்கோ கிளம்பி செல்கிறான் என்று சொல்ல, அப்போது குணசேகரன், அவன் என்ன செய்தாலும் எனக்கு போன் செய்து சொல், அளவுக்கு மீறி போன அவன் கதையை முடித்துவிடு என்கிறார். இதையடுத்து, ஞானம் ராமேஸ்வரத்திற் யார் போய் இருக்கா என்று கேட்க, , அப்போது குணசேகரன், நம்ம வீட்டு கடகுட்டிக்கு நேரம் நெருங்கிவிட்டது,உண்மையில் கட்டுபிடிக்க போய் இருக்கான். இனிமேல் நாம மூன்று பேர் தான் என்கிறார். இதைக்கேட்டு ஞானம் வருத்தப்படுகிறார்.
சக்திக்கு என்ன ஆச்சு: இதையடுத்து வீட்டுக்கு வரும் குணசேகரன், ஜனனியிடம், ஒழுங்காக ராமேஸ்வரத்தில் இருக்கும் உன்னுடைய புருஷன் சக்தியை இங்கே வந்துவிட சொல்லு, அவன் எதையாவது கண்டுபிடிக்கிறேன் என்று இருந்தால், அவன் ஒழுங்க வீடு திரும்பமாட்டான். அவனுக்கு தேதி குறிச்சாச்சு, அவன் உயிரோட இருக்க வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கோள் என்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, சக்திக்கு போன் செய்கிறாள். ஆனால், சக்தி போனை எடுக்காததால் ஜனனி பதற்றம் அடைகிறாள். அப்போது நந்தினி, இவர் பேசுவதை பார்த்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது ஜனனி, சக்திக்கு என்ன ஆச்சுனு தெரியலையே என கேட்கிறாள்.
கோபத்தில் ஜனனி: கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜனனி, குணசேகரிடம் இன்னும் எத்தனை பேரை கொல்ல போகிறீர்க, யார் யாரையெல்லாம் பழிவாங்க போகிறார்க, உங்களுடைய கௌரவத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா? என ஆத்திரத்தோடு கத்துகிறாள். அப்போது குணசேகரன், ஜனனி தள்ளிவிட அவள் கீழே விழுகிறாள். மறுபக்கம், தனுஷ்கோடியில் அடியாட்கள் சக்தியை சுற்றிவளைத்து கொல்வதற்காக வருகிறார்கள். அவரிகளிடம் சக்தி சண்டை போடுகிறார். இதையடுத்து என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications