தம்பியின் உயிரை எடுக்க துணிந்த குணசேகரன்.. சக்தியின் உயிர் தப்புமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில், தர்ஷன் பார்கவி இருவரும் முதலிரவு அறையில் மனம் விட்டு பல விஷயங்களை பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அன்புக்கரசி தர்ஷனுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் தர்ஷனின் போனுக்கு அனுப்புகிறாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்கவி, கோபத்துடன் அறையை விட்டு வெளியே வந்துவிட, தர்ஷன் அவளை சமாதானப்படுத்துவதற்காக வருகிறான். இந்த சத்தம் கேட்டு, அனைவரும் எழுந்து வந்து என்ன நடந்தது என்று கேட்கின்றனர். அப்போது தர்ஷன், அன்புக்கரசி வேண்டும் என்றே, எப்போதே எடுத்தபோட்டோவை அனுப்பி பிரச்சனை கேட்கிறார் என சொல்ல தர்ஷினி இவளை என்னுடைய சும்மா விடக்கூடாது என்று கோவத்துடன் அன்புக்கரசி இருக்கும் அறைக்கு சென்று தட்டுகிறாள். ஆனால், அவள் கதவை திறக்காமல் இருக்க, ஜனனி அவளை சமாதானப்படுத்தி இப்போது எதுவும் பேச வேண்டாம் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என சொல்கிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடில், ஜனனி டீம் அன்புக்கரசியின் அறையின் கதவை தட்டி, உனக்கு ஏன் இவ்வளவு கேவலமான புத்தி, கொஞ்சம் கூட அநாகரிகமே இல்லாமல் நடந்து கொள்கிறாய். இதற்கு மேல் இந்த வீட்டில் இருப்பதற்கு உனக்கு அருகதையே கிடையாது. வீட்டை விட்டு வெளியே போ என சொல்கிறாள். அப்போது அன்புக்கரசி, நான் ஏன் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும். இந்த வீட்டில் இருப்பதற்கு அனைத்து உரிமையும் எனக்கு இருக்கிறது என சொல்கிறார். யார் உன்னை இந்த வீட்டில் இருக்க சொன்னார்களே அவர்கள் வரட்டும் அது வரையில் இந்த வீட்டைக்குள் நீ இருக்கக் கூடாது என ஜனனி, அன்புக்கரசியின் கையை பிடித்து வெளியே இழுத்து வருகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரம் குணசேகரின் கார் உள்ளே வருகிறது. அப்போது அன்புக்கரசி, நீங்கள் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அனைவரும் என்னை வீட்டை விட்டு அடித்து துரத்துகிறார்கள் என அழுதபடி சொல்கிறாள். அப்போது ஆத்திரப்படும், குணசேகரன் ஜனனி இடம், உன்னை எதற்காக இன்னும் விட்டு வைத்திருக்கேன் தெரியும்ல,15 நாளில் ஆதாரம் கொடுப்பதாக சொன்ன, எங்கே ஆதாரம். அந்த ஆதாரத்திற்காக தான் உன்னை விட்டு வைத்திருக்கிறேன். ஒழுங்காக இரு இல்லை என்றால் எல்லார் கதையும் முடிந்துவிடுவேன் என சொல்லிவிட்டு உள்ளே போகிறார்.

சக்தியை காப்பாற்றப்போவது யார்: இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் இருக்கும் உன்னுடைய புருஷன் சக்தியை இங்கே வந்துவிட சொல்லு, அவன் எதையாவது கண்டுபிடிக்கிறேன் என்று இருந்தால், அவன் வீடு திரும்பமாட்டான். அவனுக்கு தேதி குறிச்சாச்சு, அவன் உயிரோட இருக்க வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கோள் என்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, சக்திக்கு போன் செய்கிறாள். ஆனால், சக்தி போனை எடுக்காததால் ஜனனி பதற்றம் அடைகிறாள். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜனனி, குணசேகரிடம் இன்னும் எத்தனை பேரை கொல்லப்போறிங்க. யார் யாரையெல்லாம் பழிவாங்க போகிறார்க, உங்களுடைய கௌரவத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா? என ஆத்திரத்தோடு கத்துகிறாள். அப்போது குணசேகரன், ஜனனி தள்ளிவிட அவள் கீழே விழுகிறாள். மறுபக்கம், தனுஷ்கோடியில் அடியாட்கள் சக்தியை சுற்றிவளைத்து கொல்வதற்காக வருகிறார்கள். அவரிகளிடம் சக்தி சண்டை போடுகிறார். இதையடுத்து என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X