ஒரு வாரம் தாங்கமாட்டா பார்கவி.. ஆம்பளையா இருந்தா செய்டா.. எகிறிய சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி, ஜனனி, பார்கவி, தர்ஷன் என அனைவருமே வீட்டுக்குள் வர, அப்போது, கதிர் அருவாளை தூக்கி வீசி இதற்கு மேல் இந்த வீட்டில் உங்களுக்கு இடம் இல்லை. வீட்டுக்குள் கால் வைத்தால் அனைவரின் தலையை வெட்டி விடுவோம் என சொல்கிறார். அப்போது, சக்தி எதுவாக இருந்தாலும் அண்ணன் வந்து பேசட்டும் என்று சொல்ல, குணசேகரன் வந்து, கதிர், ஞானம் இருவரை தடுத்து நிறுத்தி, அனைவரையும் வீட்டுக்குள் போக சொல்கிறார். அப்போது ஜனனியிடம், என்னுடைய அனைத்து ஆதாரத்தையும் கொடுத்துவிடு என சொல்கிறார். அதற்கு ஜனனி. எனக்கு இன்னும் ஓரு வாரம் டைம் கொடுங்க, எல்லாத்தையும் தருகிறேன் என சொல்கிறாள்.
வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் வந்த பார்கவி, மீனாட்சி படத்தின் முன்பு விளக்கு ஏற்றிவிட்டு, மேலே செல்கிறாள். இதை பார்த்த விசாலாட்சி என்ன பெரியவனே, இப்படி செய்துட்ட, கண்ட கழுதை எல்லாம் நம்ம வீட்டில் வந்து விளக்கு ஏற்றுகிறது. அதைப் பார்த்துக்கொண்டு நாமும் சும்மா இருக்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டது. நீயும் ஜனனி சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டிக்கிட்டு இருக்க, எனக்கு ஒன்றும் புரியவில்லை என சொல்கிறாள். இதை கேட்ட குணசேகரன், இன்னும் ஒரு வாரம் அமைதியாக இருங்கள் அதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, ஞானம், அவர்களை வீட்டிற்குள் கால் வைத்ததுமே, வெட்டி வீசாமல் அவர்களை விட்டு வைத்தது மிகப்பெரிய தவறு என சொல்கிறார். உடனே குணசேகரன் அவர்களை நாம் ஏன் விட்டு வைத்து இருக்கிறோம் தெரியுமா? இரண்டு பேரும்அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். ஜனனியிடம் இன்னும் என்னென்ன ஆதாரம் இருக்கிறது என்பதை முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல, முல்லையும் வீடியோவை அழித்துவிட்டேன் என சொன்னான் அதையும் அழிக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் அமைதியாக இருந்து எதிராளியின் ஆட்டத்தை பார்த்து விட்டு தான். நாம் காய்களை நகர்த்த வேண்டும் . அந்தப் பாட்டு வாத்தியார் இங்கே அடிபட்டு வெளியில் போய் செத்தான். அவன் மகள் பார்கவி இங்கேயே சாவா, அதற்கான நேரம் வரும் அதுவரைக்கும் நாம் அமைதியாக இருந்து என்ன நடக்கிறது என பார்க்க வேண்டும் என குணசேகரன் சொல்கிறார்.
நீ ஆம்பளையாடா: இன்றைய எபிசோடில், தர்ஷன், பார்கவி இருவரும் தங்குவதற்கு சரியான ரூம், கதிர் இருக்கும் அறை தான் என்பதால் அந்த அறைக்கு அவர்களை அழைத்து செல்கிறாள் நந்தினி. அப்போது கதிர், அறையை தர மாட்டேன் என பிரச்சனை செய்கிறான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு குணசேகரன் அமைதியாக இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் கதிர் கத்திக்கொண்டு இருக்கிறார். அப்போது சக்தி, ஆம்பளையாக இருந்த கல்யாணத்தை நடத்திப் பார்க்க என உன்னுடைய அண்ணன் சொன்னார். நான் கல்யாணத்தை நடத்தி முடித்து விட்டேன். நீ உண்மையில் ஆம்பளையாக இருந்தால், அந்த பொண்ணு மேல அந்த பொண்ணு மேல கை வைடா பாப்போம் என துணிச்சலாக சொல்கிறார் சக்தி. இதையடுத்து பார்கவி, தர்ஷன் இருவரும் அறையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, பார்கவி, இந்த வீட்டை பார்க்கும் ஒவ்வொரு நிமிஷமும் என்னுடைய அப்பாவின் நடந்தது தான் நினைவிற்கு வருகிறது என சொல்கிறாள்.


Click it and Unblock the Notifications











