எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் வில்லி.. அறிவுக்கரசி யாருனு தெரியுமா? அவரின் சம்பள விவரம்!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது. தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், மோசமான வில்லியாக நடித்து வரும் அறிவுக்கரசிக்கு, இந்த சீரியலில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அறிவுக்கரசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவங்களுடைய உண்மையான பெயர் காயத்ரி ராஜ். 1995 ஆம் ஆண்டு சென்னையில பிறந்த காயத்ரி ராஜ், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். BSC மேத்தமேட்டிக்ஸ் படித்துக்கொண்டிருந்த காயத்ரி, வீட்டில் இருந்த வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

Ethirneechal Thodargirathu Salary
Photo Credit:

அறிவுக்கரசி: காயத்ரியின் பல முயற்சிக்கு பிறகு, தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும், மான் கராத்தே படத்தில் வீட்டில் பணிப்பெண்ணாகவும், சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் படத்தில் ஹீரோயினியின் தோழியாகவும் நடித்துள்ளார். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருந்த காயத்ரி, மருது திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். துணை நடிகையாக நடித்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு 'V1' திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட காயத்ரி அந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

சம்பளம் எவ்வளவு: சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த காயத்ரிக்கு, ராதிகா சரத்குமார் இயக்கிய வாணி ராணி சீரியலில் நல்ல ஒரு கதாபாத்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து, சின்னத்திரை பக்கம் வந்தார். அதைத் தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் நடித்தார். பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பேரழகி என்ற சீரியலில் லீடர் ரோலில் நடித்து அசத்தினார். அந்த சீரியலில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரிக்கு அந்த சீரியல் நல்ல பெயரை பெற்றக்கொடுத்தது மட்டுமில்லாமல், அந்த சீரியல் மூலம் பிரபலமும் ஆனார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் மோசமான வில்லியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் நடிப்பதற்காக காயத்ரி ராஜுக்கு தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X