செயினை அடகு வைத்தேன்.. இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு நடிக்க வந்தியா..சுந்தரி பட்ட அவமானம்!
சென்னை: சினிமாவில் ஒரு நடிகை ஜெயிக்க வேண்டும் என்றால், அவள் பல கஷ்டங்கள், அவமானத்தை கடந்து தான் ஆக வேண்டும். அப்படி பல அவமானத்தை கடந்து இன்று, இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்துள்ளார், சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா. அவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்.
சினிமாவில் நடிகையாக வரவேண்டும் என்றால், வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல சும்மா வெள்ளையாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், ஸ்லிம்மாகவும், அழகான முடியுடன் தான் இருக்க வேண்டும் என்ற பலவிதமான எழுதப்படாத சட்டம் உள்ளது. நடிப்பு, திறமை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படி டஸ்கி ஸ்கின் டோனுடன் ஜெயித்த நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி தனது கடினமான உழைப்பால் மேலே வந்த நடிகை தான் கேப்ரில்லா.

நடிகை கேப்ரில்லா: டிக் டாக் மூலம் தனது பயணத்தை தொடங்கிய கேப்ரில்லா, 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார் கேப்ரில்லா. அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி போல் சிரித்து காட்டி பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்பு டிக் டாக்கில் பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசி சோஷியல் மீடியாவில் பிரபலமானார்.
சுந்தரி சீரியலில்: சுந்தரி என்ற சீரியலை சன் டிவி களமிறக்கியது. இப்போது சுந்தரி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை வெள்ளித்திரையிலும் கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. இந்த சீரியலுக்காக சன் குடும்பம் உள்ளிட்ட பல விருதுகளையும் கேப்ரில்லா வாங்கி குவித்து விட்டார். அதில் சுந்தரி சீரியல் மூலம், கேப்ரில்லா அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. ஆனால் இதை அடைய அவர் சந்தித்த கஷ்டங்களும் ஏராளம். அவமானங்களை வெகுமானங்களாக மாற்றி இன்று சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கேப்ரில்லா.
அழுது புலம்பிய கேப்ரில்லா: நடிகை கேப்ரில்லாவிற்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், வீட்டில் சொல்லாமல் திருச்சியில் இருந்த செயினை அடகு வைத்துவிட்டு சென்னைக்கு ஓடி வந்து வாய்ப்பு தேடி உள்ளார். இதையடுத்து, சென்னையில் விடுதியில் தங்கி வாய்ப்பு தேட ஆரம்பித்த கேப்ரில்லாவிற்கு திறமை இருந்தும், எடுப்பான நிறம் இல்லை என்பதால் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு நடிக்க வந்தியா என்று நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட போது, அழுது புலம்பிய கேப்ரில்லா, தனது திறமையை மட்டும் நம்பி 30க்கும் மேற்பட்ட குறும்படத்தில் நடித்து இன்று நிறம் ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











