யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்கள்.. அசத்தலாக ஆரம்பமாகும் டாப் குக்கு டூப் குக்கு!
சென்னை: சன் தொலைக்காட்சி முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸுடன் இணைந்து, டாப் கூக்கு டூப் குக்கு சீசன் 2 ஆகஸ்ட் 17ந் தேதி முதல் தொடங்க உள்ளது. பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒரு மணி நேரம ஒளிபரப்பாக உள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக கடந்த ஆண்டு டாப் கூக்கு டூப் குக்கு சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில், 9 பிரபலங்கள் சமைக்க, டூப்புகளாக 9 பேரும் கலந்து கொண்டு, சமைப்பவர்களுக்குதொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களை மீறி குக்குகள் சமைத்து அசத்த வேண்டும். இதில் சீசன் 1ல் நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா ஆகியோரை வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ₹20 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

டாப் குக்குகள்: தற்போது டாப் குக்கூ டூப் குக்கூ சீசன் 2 தொடங்க உள்ளது. இதில், போட்டியாளராக நடிகை கிரண், நடிகை ஷிவானி நாராயணன், டெலன் டேவிஸ் ஆடுகளம் சீரியல் நடிகை, பிரீதா கதைபோமா வெப் தொடர் நடிகை, பிரியங்கா, நடிகர் ரோபோ சங்கர், நகைச்சுவை நடிகர் TSR, வஹீசன் இலங்கைதமிழ் ராப் பாடகர், பெசன்ட் ரவி ஸ்டண்ட் மாஸ்டர்
டூப் குக்குகள்: தீனா,அருண் தொகுப்பாளர், பரத்,மோனிஷா, ஜி பி முத்து, ஆதித்யா கதிர், நிக்கி மீனாட்சி, கமலேஷ், லட்சுமி மதுரையைச் சேர்ந்த இல்லத்தரசி ஆகியோர் டூப்பாக களமிறங்கஉள்ளனர். புகழ்பெற்ற சமையல் நிபுணர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் ராம்மோகன் ஆகியோர் சீசன் 2 க்கான நடுவராக உள்ளனர். கல்லூரியில் இருந்தே நண்பர்களான பட் மற்றும் ராம்மோகனால் இந்த சீசன் நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி இரண்டு மணி நேர எபிசோடுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. டாப் குக்கூ டூப் குக்கு சீசன் 2 உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











