அவமானத்தால் தலை குனிந்த சம்மந்தி.. காலில் விழுந்து கதறி அழுத நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: நந்தினி தனது அப்பாவிற்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வந்த சடங்கு பற்றி பேசுங்கள் என்கிறார். இதையடுத்து, நந்தினியின் பெற்றோர் வர, அவர்களுக்காக வாசலில் காத்திருந்த நந்தினி,காலையில் அனைவரும் கூடி நாளைக்கே சடங்கை வைத்துக்கொள்ளலாம் என்று பேசி விட்டார்கள். நான் நிறைய விஷயத்தை விட்டு கொடுத்துவிட்டேன். ஆனால், என்னுடைய மகள் விஷயத்தில் இனிமேல் விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னுடைய மகளின் சடங்கு சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும். அவங்க இஷ்டப்படி நடக்கக்கூடாது. அதைப்பற்றி அனைவர்களிடமும் பேசி முடிவு செய்து விடுங்கள் என்று சொல்கிறான்.
நந்தினியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் வருவதை பார்த்த விசாலாட்சி... ஏய்.. நந்தினி, நான் காலையிலேயே எல்லாத்தையும் தெளிவாக சொல்லிவிட்டேன் என்கிறாள். இதையடுத்து நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

நந்தினி தனது கணவர் கதிரிடம், உங்க அம்மாவிற்கு தாரா எப்படி பேத்தியோ அதேபோல தான், என்னுடைய அப்பா அம்மாவும் அவள் பேத்தி, இதனால இந்த விஷயத்துல அவங்களும் சேர்ந்து முடிவு எடுக்கணும். அவங்க புதன்கிழமை நல்ல நாள் என்று சொல்கிறார்கள். அன்னைக்கே நாம தாராவோட சடங்க வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறாள். இதை கேட்டு ஆத்திரப்பட்ட விசாலாட்சி யாருடைய பேத்திக்கு யாரு வந்து சடங்கு செய்வது. எல்லா விஷயத்தையும் நாங்க பேசி முடிச்சாச்சு. உங்களுடைய வீட்டு ஆளுங்க யாரும் இந்த விசேஷத்துல கலந்துக் கூடாது என்கிறார். உடனே நந்தினியின் அப்பா, அது எப்படி, என் பேத்திக்கு சடங்கு நடக்கும் போதும் நாங்க வரக்கூடாது என்று சொல்வது சரியில்லை என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, கதிர், மாமா நீங்க வீட்டுக்கு போங்க, நான் அண்ணன் வந்ததும், ஒரு நல்ல நாளை குறித்து விட்டு உங்களை அழைக்கிறேன் என்று சொன்னதும், கடுப்பான நந்தினியின் அப்பா, நீங்க என்ன மாப்ள, பேசுறீங்க வீட்டுல என்னோட பேத்திக்கு விசேஷம் நடக்கும்போது அதுல நாங்க வரக்கூடாதுன்னு சொன்னா எப்படி. நீங்க வேண்டும் என்றால், பயன்படுத்திக் கொள்வீர்கள் வேண்டாம் என்றால் கிள்ளுக்கீரை போல தூக்கி எறிந்துவிடுவீர்களா? இது என்னுடைய பேத்திக்கு நடக்கும் விஷயம், இதில் நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். என்ன இது குடும்பம்.... பெண் கொடுத்த சம்மந்தியை நடத்துவதற்கு, அவமானப்படுத்துவதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா... வாய்க்கு வந்த விஷயங்கள் எல்லாம் நீங்கள் பேசுவீர்கள் நாங்கள் அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா என்று சத்தம் போடுகிறார் நந்தினியின் அப்பா.

கொந்தளித்த ஜனனி: அப்போது ஞானம் குறுக்கிட்டு தேவையில்லாமல் யாரும், இங்கே பேசிக்கொண்டு இருக்க வேண்டாம், அவர்களை அனுப்பி விடு கதிர் என்று சொல்கிறார். அப்பொழுது, கோபப்படும் ஜனனி, அவர்களை வெளியே போக சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு எப்படி தாரா மீது உரிமை இருக்கிறதோ, அதே போலத்தான் அவர்களுக்கும் தாராவின் மீது உரிமை இருக்கு. அவர்களும் இந்த விசேஷத்தில் கலந்து கொள்வார்கள் என்று பேசுகிறாள். இது தாரா சம்பந்தப்பட்ட விஷயம். தாரா தன்னுடைய விசேஷத்தில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்று அவள் தான் முடிவு எடுக்க வேண்டும் நாம் முடிவு எடுக்கக் கூடாது என்று சொல்கிறாள்.

கதறி அழுத நந்தினி: இதையடுத்து, விசாலாட்சி, தாராவிடம் என் இஷ்டப்படி விசேஷம் நடந்தால், பெரியப்பன், சித்தி என அனைவரும் கலந்து கொள்வோம். அதே உன்னுடைய பாட்டி வீட்டிற்கு நீ சென்று விட்டால் நாங்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டோம். நீயே யோசித்து ஒரு நல்ல முடிவாக சொல் என்கிறார். அப்போது, தாரா, வீட்டில் விசேஷம் நடக்கப் போதா, இல்லை போரா... எதுக்கு இவ்வளவு பெரிய சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, பாட்டி விருப்பப்படியே என்னுடைய சடங்கு நடக்கட்டும் என்று சொல்லிவிடுகிறாள். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த நந்தினி, தகறி அழுதுக்கொண்டு அப்பாவின் காலை பிடித்தபடி, உங்களை தேவையில்லாமல் அவமானப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, நீங்கள் இந்த வீட்டுக்கு வந்திருக்கவே கூடாது. என்னுடைய மகளும் சேர்ந்து உங்களை அவமானப்படுத்தி விட்டாள். அவள் இப்படி செய்வாள் என்று நான் நினைக்கவே இல்லை என்று கதறி அழுகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

மன்னிப்பு கேட்ட தாரா: இதையடுத்து, நந்தினியின் பெற்றோர் அழுதுக்கொண்டே சென்றுவிட, நந்தினியை அனைவரும் சமாதானப்படுத்தி மாடிக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, நந்தினி, என் மகள் ஆசைப்பட்டதால் தான் இந்த விசேஷத்தை நடத்த முடிவு செய்தேன். கடைசியில் என் அப்பா அவமானப்பட்டு போகிறார். இப்போ கூட, யாரும் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு, தாராவை அழைத்துக்கொண்டு வெளியில் போய்விட முடியும், ஆனால், அதற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு முட்டாள் என்று அழுதுக்கொண்டு இருக்க, அப்போது அங்கு வரும் தாரா, அம்மா என்னை மன்னித்துவிடு, நான் மட்டும், அப்படி சொல்லவில்லை என்றால், இந்த நேரம் வீட்டில் பெரிய சண்டையே நடந்து இருக்கும், தாதா, அம்மாச்சியை எல்லாரும் சேர்ந்த திட்டி இருப்பார்கள். இதற்காகத்தான் நான் அப்படி பேசினேன் என்கிறாள்.

இன்றைய ப்ரோமோ: மறுபக்கம், தர்ஷன், அறிவுக்கரசி பேசியதை நினைத்து சோகமாக இருக்கிறான். இதைப்பார்த்த ஈஸ்வரி, அவனிடம் என்ன பிரச்சனை என்று கேட்க, அவன், என்ன செய்வது என்றே தெரியல அம்மா. எங்கே போனாலும் பிரச்சனையாவே இருக்கு, பேசாமல் செத்துவிடலாம் போல இருக்கு என்று சொல்கின்கிறான். உடனே ஈஸ்வரி இந்த வயதில் என்ன உனக்கு பிரச்சனை, இப்படி எல்லாம் பேசக்கூடாது. இப்போ நீ உன்னோ அரியரை கிளியர் பண்ணு அம்மா உன்கூட இருக்கிறேன் என்கிறாள். இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஈஸ்வரி, தர்ஷனை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு சென்று பேசுகிறார். இதை தெரிந்து கொண்ட தர்ஷினி, ஈஸ்வரியிடம் இருக்கும் பிரச்சனை எல்லாம் போதாது என்று, புதுசா ஒரு பிரச்சனை கொண்டு வரபோறீங்களா என்று கேட்க, அப்போது ஈஸ்வரி தர்ஷனும் என் மகன் தான், அவனுக்கு நான் ஒரு அம்மாவாக இருப்பேன் என்று பேசுகிறார். நேற்றைய எபிசோடு மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. இதில் குறிப்பாக நந்தினி அழுது போது, மனதே பதைபதைத்துவிட்டது. இதையடுத்து இன்று என்ன நடந்தது என்பதை நாளை செய்தியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X