மிகவும் அழகான நாடு இத்தாலி.. அதுக்கா இந்த நிலை.. தொகுப்பாளர் தியா வேதனை !
சென்னை : சன் தொலைகாட்சியின் தொகுப்பாளரான தியா மேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த வருடம் இதே நாளில் தான் இத்தாலியில் தான் இருந்ததாகவும் இப்போது இத்தாலியின் நிலை கண்டு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
கொரோனாவின் கோர தாண்டவம் தற்போது வரை இத்தாலியில் கிட்டதட்ட 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரை பறித்துள்ளது. உலகிலே மகிவும் பாதித்த நாடாக இத்தாலி பார்க்கபட்டு வருகிறது. இத்தாலிக்கு பல உலக நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக போராட உதவி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் எதிர்பார்த்ததை விட மிக பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளரான தியா மேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இத்தாலி பற்றிய ஒரு பதிவை போட்டிருக்கிறார். இதில் தான் கடந்த வருடம் இதே நாளில் இத்தாலியில் இருந்ததாகவும் ,உலகிலே மிக அழகிய நாடு இத்தாலி நான் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற போது மிகவும் சந்தோசமாக இருந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் இத்தாலிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலையை நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய பிரார்த்தனை இத்தாலி மற்றும் இந்தியாவை காப்பாற்றும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தொகுப்பாளர் தியா சன் தொலைகாட்சி, சன் மியூசிக் மற்றும் மலையாளத்தில் சூர்யா தொலைகாட்சி ஆகியவற்றில் தொகுப்பாளாராக பணியாற்றி வருகிறார். இவர் மலையாளம் மற்றும் தமிழில் மிக சிறப்பாக தொகுத்து வழங்க கூடியவர் . இவர் பல பட விழாக்களையும் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் .

ஊர் சுற்றுவதை தன் பிரதான பொழுதுபோக்காய் வைத்துள்ள தொகுப்பாளர் தியா. தன் கணவருடன் இது வரை உலகின் பல இடங்களை கடந்த சில வருடங்களாக சுற்றி வருகிறார். இவர் ஊர் சுற்றும் போது என்னவெல்லாம் செய்கிறார் எங்கெல்லாம் சுற்றுகிறார் என்பதை தவறாமல் பதிவுகளாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வைத்துள்ளார் .மேலும் தியா மாடலிங்கும் செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிக சரியாக பயன்படுத்தி வரும் தியா தனது சிறந்த புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
View this post on InstagramA post shared by Diya Vj (@diya_menon) on
கொரோனா பாதிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிலையில் பல பிரபலங்களும் தங்களின் சோகத்தை இணையத்தின் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.கொரோனா தொற்றை தவிர்க்க வீட்டில் இருப்பது மற்றும் சுத்தமாக இருப்பதை பற்றிய அவசியத்தையும் உணர்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











