இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. என்ன படம் வேணும் ஓட்டு போடுங்க! அசத்தும் சன்டிவி!
சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தில் உங்களுக்கு என்ன படம் வேண்டும் என ரஜினியின் படத்தை வைத்து ஓட்டு போட சொல்லியிருக்கிறது சன் டிவி.
தீபாவளி, பொங்கல், விடுமுறை நாள் என எதுவாக இருந்தாலும் தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்ப்படங்ளை அள்ளி விடுவார்கள். யார் புதுப்படம் போடுவது, யார் நல்லப்படம் போடுவது, ரேட்டிங்கை எப்படி அள்ளலாம் என திட்டம் போட்டு வேலை பார்ப்பார்கள்.
தங்களை விட நல்ல படம் போட்டி சேனலில் ஒளிபரப்பப்படுகிறது என்றால் தாங்கள் அறிவித்த படங்களையெல்லாம் கூட டிவி சேனல்கள் மாற்றிய வரலாறும் உண்டு. தமிழில் அத்தனை சேனல்கள் இருந்தாலும் தூர்தர்ஷன் காலத்திலேயே கலர்புல் நிகழ்ச்சிகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தது சன்டிவிதான்.

மக்களின் விருப்பப்படி
எந்த சேனல் என்ன படம் போட்டாலும் விசேஷ நாட்களில் சன்டிவில் படம் பார்த்தால்தான், படத்தை பார்த்த திருப்தி இருக்கும் என்று கூறிய காலமெல்லாம் உண்டு. இந்நிலையில் மக்களின் விருப்பப்படி திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறது சன்டிவி.

சிறப்பு திரைப்படம்
அதற்காக தனது டிவிட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பையும் நடத்தியிருக்கிறது. அதாவது வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று அனைத்து டிவி சேனல்களும் சிறப்பாக ஒரு திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு செய்திருக்கின்றன.

இரண்டு ஆப்ஷன்கள்
அந்த வகையில் சன்டிவியும் சிறப்புத் திரைப்படத்தை ஒளிப்பரப்ப இருக்கிறது. ரஜினிகாந்தின் படத்தை ஒளிபரப்ப முடிவு செய்துள்ள சன் டிவி, உங்களுக்கு எந்த படம் வேண்டும் என்று இரண்டு ஆப்ஷன்களை கொடுத்துள்ளது.
முத்து அன்ட் கபாலி
அதாவது முதல் முறையாக நீங்கள் சன்டிவியில் பார்க்க விரும்பும் படத்தை நீங்களே சூஸ் பண்ணலாம் என்றும் உங்களுடைய ஃபேவரைட் சூப்பர் ஸ்டார் படத்துக்கு வோட் பண்ணி அக்டோபர் 2ஆம் தேதி சன் டிவியில பாருங்க. எந்த படம் அதிக ஓட்டுகளை அள்ளுகிறதோ அந்த படம் அக்டோபர் இரண்டாம் தேதி ஒளிபரப்பாகும் என தெரிவித்து, ரஜினியின் கபாலி மற்றும் முத்து படத்தை ஆப்ஷன்களாக கொடுத்துள்ளது சன் டிவி.
முத்துக்கே ஓட்டு
இந்த வாக்கெடுப்பில் இதுவரை முத்து படத்திற்கே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். மேலும் பலர் படையப்பா படம் போடுங்க என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











