'டப்' செய்து 'கலர் கலராக' அழகுப் பெண்களை அச்சுறுத்தும் 'சன்'னின் 'தில் தில் தில்'….!
டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பொழுதுபோக்காக உற்சாகப்படுத்தும் என்ற நிலை போய் இப்போது அச்சுறுத்தும் வகையிலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களை இம்சை செய்து அழவைக்கும் வைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
சன் நெட் ஒர்க் சேனலில் ஹிந்தி நிகழ்ச்சியான ஃபியர் பேக்டர் டப்பிங் செய்யப்பட்டு நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
கலர்ஸ் டிவி சேனலில் பாலிவுட் ஆக்சன் கிங் அக்சய் குமார் தொகுத்து வழங்கிய சாகச நிகழ்ச்சி இது. இது அப்படியே சன் குழும சேனல்களான ஜெமினி, சூர்யா, சன் ஆகியவற்றில் அந்தந்த மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது.

அழகான 13 பெண்கள்
இந்த சாகச நிகழ்ச்சியில் அழகான 13 பெண்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிரபல மாடல்கள், திரைப்பட நடிகைகளும் பங்கேற்றுள்ளனர்.

ஜில் தண்ணியில குதிக்கணும்
நிகழ்ச்சியின் முதல் போட்டியே சில்லிட வைக்கக்கூடியது. 30 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து 8 டிகிரி செல்சியஸ் உள்ள ஜில் தண்ணீரில் குதிக்க வேண்டும் என்பதுதான்.

குதித்த அழகு பெண்கள்
ஒருவழியாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு குதித்து தங்களின் திறமையை நிரூபித்தனர் அந்த பெண்கள்.

பாம்புத் தொட்டிக்குள் தலை
அதாவது பரவாயில்லை பாம்புகள் நிறைந்த தொட்டிக்குள் தலையை விட்டு அதிலிருக்கும் பழங்களை சேகரிக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் எத்தனை சேகரிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள்.

வெளியேறிய போட்டியாளர்
பாம்பைக் கண்டு அஞ்சி பின்வாங்கிய போட்டியாளர் நேற்றைய தினம் வெளியேறினார். வெற்றி பெற்ற பெண்கள் இனி அடுத்தடுத்த போட்டியில் பங்கேற்பார்கள். அவர்களுக்கு பக்கபலமாக முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அச்சுறுத்தலாமா அக்சய் குமார்?
தென்ஆப்ரிக்காவின் அணைப்பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவருமே மாடல்கள், சினிமா நட்சத்திரங்கள்தான். அவர்கள் அனைவரையுமே அச்சுறுத்தியதோடு பார்வையாளர்களையும் அச்சுறுத்திவிட்டார் அக்சய்குமார்.

ஃபியர் பேக்டர் கத்ரோன் கே கிலாடி
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்களின் டப்பிங் உரிமையையும் சன் நெட் ஒர்க் வாங்கியுள்ளது.

ஜெமினி டிவியில்
தெலுங்கு மொழியில் ஜெமினி டிவியில் ஜூன் 23 அன்று இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் ‘தில் தில் தில் ‘
தில் தில் தில் ஃபியர் பேக்டர் என்ற பெயரில் ஜூன் 29 முதல் நண்பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

சூர்யா டிவியில்
சாகசம் - பியர் பேக்டர் என்ற தலைப்பில் மலையாளத்தில் சூர்யா டிவியில் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் 8 மணி ஸ்லாட் ஒளிபரப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களை தொங்கவிட்டு
இதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்' நிகழ்ச்சியில் பெண்களை கம்பியில் தொங்கவிட்டு இம்சைபடுத்தி கேள்வி கேட்கின்றனர். அதை விட கொடுமை மற்றொரு ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘ஒல்லி பெல்லி'யில் ஓடவிட்டு, சைக்கிள் ஓட்டி உடம்பை இளைக்கவைக்க பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர் பங்கேற்பாளர்கள்.

ஏன் இப்படி?
டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் உற்சாகம், நகைச்சுவை, பொழுது போக்கு என்ற நிலையில் இருந்து மாறி பார்வையாளர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் மாறிவருகிறது.

டப்பிங் கலாச்சாரம்
தமிழ் டிவி சேனல்கள் பெரும்பாலும் ஹிந்தி சீரியல்களை டங்பிங் செய்து ஒளிபரப்பி காசு பார்க்கும் நிலையில் சன் டிவி முதன் முறையாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை டப்பிங் செய்து ஒளிபரப்புகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











