சன் டிவியில் இது ரேவதி வாரம்...!!
ரஜினி வாரம், கமல் வாரம், பாக்யராஜ் வாரம், ஸ்ரீதேவி வாரம் என கொண்டாடிய சன் டிவி இந்த வாரம் நடிகை ரேவதி வாரம் கொண்டாடுகிறது.
ஜனவரி 28 திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 1 வெள்ளிகிழமை வரை தினசரி இரவு 11 மணிக்கு நடிகை ரேவதி நடித்த அருமையான திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்த 80களில் வெளியான திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு ஒளிபரப்பாகிறது.

திங்கள்கிழமை - வெள்ளிக்கிழமை ராமசாமி
விஜயகாந்த் - ரேவதி ரேவதி நடித்த திரைப்படங்களில் வைதேகி காத்திருந்தாள்... சிறப்பான படமாக பேசப்பட்டது. அதில் சோகமான பாத்திரம்தான் என்றாலும் அருமையான நடனம்...அற்புதமான பாடல்கள் என பேசப்பட்ட படம் அது. இந்த திரைப்படம் திங்கட்கிழமை ஒளிபரப்பாகிறது. இந்தப் படத்தில் ராதாரவி ஏற்று நடித்த வெள்ளிக்கிழமை ராமசாமி என்ற கேரக்டர் இன்று வரை ரொம்பப் பாப்புலர்.

பிரபு – ரேவதி
பிரபு உடன் ரேவதி நடித்த திரைப்படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அதிலும் சின்னப் பெண்ணாய் துறு துறு என்று ரேவதி நடித்த கன்னிராசி திரைப்படம் நல்ல கதை அம்சம் உள்ள படம். இதில் பாடல்களும் சரி, ரேவதியின் நடிப்பும் சரி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

அஞ்சலியில் அம்மாவான ரேவதி
அஞ்சலி திரைப்படம் ரேவதியின் திருமணத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய திரைப்படம். மூன்று குழந்தைகளின் அம்மாவாக ரகுவரனின் ஜோடியாக நடித்திருப்பார். இசைஞானி இளையராஜாவின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட திரைப்படம் அஞ்சலி புதன்கிழமை ஒளிபரப்பாகிறது.

ரஜினியுடன் ரேவதி..
வியாழக்கிழமை இரவு ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த ‘கை கொடுக்கும் கை' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இதில் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் ரேவதி. இந்த படத்தில் வரும் தாழம்பூவே வாசம் வீசு... பாடல் எல்லோருடைய நெஞ்சங்களையும் கொள்ளை கொண்ட பாடல்.

வெள்ளிக்கிழமை - மிஸ்டர் சந்திரமெளலி
வெள்ளிக்கிழமை மெளன ராகம் மணிரத்னம் இயக்கத்தில் திவ்யாவாக நடித்து எல்லோருடைய மனதையும் கொள்ளையடித்தவர் ரேவதி. இந்த திரைப்படத்தில் கார்த்திக்கை காதலிக்கும் போது துறு துறு திவ்யாவாகவும், அப்பாவிற்கு பயந்த பெண்ணாகவும் நடித்த ரேவதி, மோகனை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருப்பார். அருமையான வசனங்கள்... ராஜாவின் இசையில் அழகான பாடல்கள் என மவுன ராகத்தில் ஒரு இசை ராஜாங்கமே அரங்கேறியிருக்கும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மெளன ராகம் கார்த்திக் போல ஒருவர் இருப்பார் என்று கூறலாம்... அந்த அளவுக்கு கார்த்தி்க்கின் அட்டகாசமான நடிப்பு இதில் பேசப்பட்டது

மிஸ் பண்ணாதீங்க!
ரேவதி நடிப்பு நல்லா இருக்கும் சொன்ன அது அல்வா ஸ்வீட் ஆக இருக்கும் அப்படின்னு சொல்ற மாதிரி. இந்த படங்கள் ரேவதியின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய திரைப்படங்கள் மிஸ் பண்ணாம பாருங்களேன்.


Click it and Unblock the Notifications











