மணிவண்ணன் ரசிகர்களே... சன் டிவியில் உங்கள் வாரம்!

By Mayura Akilan

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மறைவால் வாடிப் போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு சற்றே உற்சாகம் தரும் ஒரு நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்புகிறது. இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 11 மணிக்கு மணிவண்ணன் திரைப்படங்களை அது ஒளிபரப்புகிறது.

மணிவண்ணன் வாரம் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இதில் மணிவண்ணன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான அருமையான ஐந்து படங்களைக் காணலாம்.

அவர் இயக்கிய முதல் படம் முதல் காமெடியில் கலக்கிய உள்ளத்தை அள்ளித்தா வரை அற்புதமான படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

திங்கள்-கோபுரங்கள் சாய்வதில்லை

திங்கள்-கோபுரங்கள் சாய்வதில்லை

இன்று இரவு 11 மணிக்கு கோபுரங்கள் சாய்வதில்லை ஒளிபரப்பாகிறது. இது மணியின் முதல் இயக்கப் படம். அருமயான கதை, அழகான ரம்யமான இசை, பாடல்கள், வசனங்கள், இயக்கம் என அனைத்திலும் பரிமளித்த படம்.

செவ்வாய் - 24 மணி நேரம்

செவ்வாய் - 24 மணி நேரம்

செவ்வாய்க்கிழமை 24 மணி நேரம் ஒளிபரப்பாகிறது. இசைஞானி இளையராஜாவின் அபாரமான பின்னணி இசை, அழகான பாடல்கள், அருமையான திரில் நடிப்பு, சத்யராஜின் கலக்கல் வில்லத்தனம் என பிரமாதப்படுத்திய படம் இது.

புதன்-பாட்டாளி

புதன்-பாட்டாளி

சரத்குமார், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் பின்னியிருப்பார் மணிவண்ணன். இந்தப் படம் புதன்கிழமை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வியாழன்- நூறாவது நாள்

வியாழன்- நூறாவது நாள்

நூறாவது நாள். தமிழ் சினிமாவின் மைல் கல் படங்களில் ஒன்று. சத்யராஜுக்கும், மணிவண்ணனுக்கும் பெரும் பெயர் வாங்கிக் கொடுத்த படம். இசைஞானி இளையராஜாவின் இசையில் அசத்திய படம்.

வெள்ளி-உள்ளத்தை அள்ளித்தா

வெள்ளி-உள்ளத்தை அள்ளித்தா

வெள்ளிக்கிழமையன்று உள்ளத்தை அள்ளித்தா ஒளிபரப்பாகிறது. கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன் உள்ளிட்டோரின் காமெடி கலாட்டா அடங்கிய இப்படம் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் அசத்தலான காமெடிப் படம். சுந்தர்.சியின் இயக்கமும் இதில் வெகுவாகப் பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X