சன் டிவியில் இந்த வருடம் ‘தல’ தீபாவளி

By Mayura Akilan

சன் டிவியில் தீபாவளி சிறப்புத்திரைப்படமாக 'தல' அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

தீபாவளி தினத்தில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது அந்தக்காலம். இப்போது எந்த சேனலில் என்ன புதுப்படம் போடுகிறார்கள் என்றுதான் பெரும்பாலோனோர் எதிர்பார்க்கின்றனர்.

அதிரடி சரவெடி….

அதிரடி சரவெடி….

தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக சன் டிவியில் அஜீத், திரிஷா நடித்த மங்காத்தா திரைப்படம் ஒளிபரப்புகின்றனர். அதற்கான முன்னோட்டம் இன்றிலிருந்தே தொடங்கிவிட்டது.

இந்தியத் தொலைக்காட்சிகளில்…

இந்தியத் தொலைக்காட்சிகளில்…

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஹிட் அதிரடித் திரைப்படம் மங்காத்தா ஒளிபரப்பாகிறது என்ற அறிவிப்பு களை கட்டத் தொடங்கிவிட்டது.

அஜீத் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி

அஜீத் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி

தீபாவளி தினத்தன்று அஜித் நடித்த திரைப்படம் வெளியாகவில்லை என்று கவலைப்பட்ட ரசிகர்கள் மங்காத்தாவைப் பார்த்து ‘தல' தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடலாம்.

விஜய் டிவியில் வேட்டை

விஜய் டிவியில் வேட்டை

விஜய் டிவியில் மாதவன், ஆர்யா, அமலாபால், சமீரா ரெட்டி நடித்த ‘வேட்டை' புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இதைத் தவிர பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்புகின்றனர். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X