ராதிகாவுக்காக அட்ஜஸ்ட் செய்த சன் டிவி
Recommended Video

சென்னை: சன் டிவி ராதிகா சரத்குமாருக்காக ஒரு விஷயம் செய்துள்ளது.
ராதிகா சரத்குமார் நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி தொலைக்காட்சி தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
புதிய தொடரை சன் டிவியும், ராதிகாவும் ட்வீட் செய்து விளம்பரப்படுத்துகிறார்கள்.
ராதிகா
சந்திரகுமாரி தொடர் இன்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. அதாவது சன் டிவியில் முதல் முறையாக ஒரு தொடரின் அறிமுக நாள் அன்று ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள்
ராதிகாவின் சந்திரகுமாரி தொடர் இன்று இரவு 1 மணிநேரம் ஒளிபரப்பாகும் என்பதை அறிந்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதெல்லாம் ராதிகா மேடத்திற்கு மட்டும் தான் சாத்தியம் என்கிறார்கள்.
சரத்குமார்
சந்திரகுமாரி தொடருக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மரண வெயிட்டிங்
வாணி ராணி முடிந்த கவலையில் இருந்தாலும் ராதிகாவை புதிய அவதாரத்தில் பார்க்க ரசிகர்கள் மரண வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











