ஆஃப்-ஷோல்டர் உடையில் கிளாமர்.. புடவையைத் தூக்கி எறிந்த நந்தினி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: சன் தொலைக்காட்சியின் பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்தத் இல்லத்தரசிகளின் மனங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை ஹரிப்ரியா இசை. இவரின் எதார்த்தமான நடிப்பு, நக்கலான பேச்சு, பக்கா ஹோம்லி லுக் ஆகியவற்றால் இவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியலில் எப்போதும் புடவை கட்டிக்கொண்டு குடும்பப் பாங்கான தோற்றத்தில் வலம் வரும் ஹரிப்ரியா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் வாயை பிளக்க வைத்துள்ளது.

இன்ஸ்டா சப்ஸ்கிரைபர்ஸ் பிளான்: சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் பலரும் தங்களது பிரத்யேக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க 'இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன்' என்ற வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நடிகைகள் ₹300, ₹400 என அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஹரிப்ரியா நடுத்தர ரசிகர்களையும் கவரும் வகையில் வெறும் ₹45 என மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளார். இந்த பெய்டு சப்ஸ்கிரைபர்களுக்காக அவர் பிரத்யேகமாக விதவிதமான கிளாமர் போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

Haripriya Isai Sun TV photos
Photo Credit:

வாயடைத்துப் போன ரசிகர்கள்: அந்த வகையில், தற்போது ஹரிப்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் மார்டன் ஆஃப்-ஷோல்டர் சிவப்பு நிற கௌன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலர் வாய் சூப்பர் என வர்ணித்தாலும், சீரியலில் நந்தினியாக, பக்கத்து வீட்டுப் பெண் போல புடவையிலேயே பார்த்துப் பழகிப்போன ரசிகர்களுக்கு, இந்த திடீர் மார்டன் அவதாரம் சற்றே முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த லேட்டஸ்ட் போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள், "என்ன நந்தினி இது.. சீரியல் நல்ல பேரை வாங்கித் தந்துச்சு, இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? என்றும் கமெண்ட்டுகளில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Haripriya Isai Sun TV photos
Photo Credit:

தொகுப்பாளினி டூ நடிகை: நடிகை ஹரிப்பிரியா இசை, ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின் தவணை முறை வாழ்க்கை என்ற தொடரின் மூலம் சீரியலில் லீட்ரோலில் நடித்து நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரியமானவள், லட்சுமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, விதி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், அவருக்கு பாராட்டை பெற்றுத்தந்த சீரியல் எதிர்நீச்சல் தான்

Read more about: sun tv photos போட்டோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X