எதிர்நீச்சல் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தியின் சம்பளம்.. மாரிமுத்து மறைவால் மாறிய வாழ்க்கை!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் 2022ம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம் மற்றும் பாரதி கண்ணன் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்

எதிர்நீச்சல் சீரியல்: இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான இந்த எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார். அவரின் அசத்தலான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த தொடரில் மாரிமுத்து பேசிய இந்தாம்மா ஏய்... அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
மாரிமுத்து மறைவு: இதையடுத்து,கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு ஒரு நல்ல இடத்தை அடைந்து கனவை தொடும் நேரத்தில் மாரிமுத்து திடீரென மறைந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வேல ராமமூர்த்தி: மாரிமுத்துவின் மறைவைத் தொடர்ந்து அடுத்து யார் ஆதி குணசேகரன் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி கமிட்டானார். இவர், விஜய்சேதுபதி நடித்து மெகா ஹிட்டடித்த சேதுபதி படத்தில் வாத்தியாராக நடித்து அடேங்கப்பா என வாய் திறக்க வைத்தவர் தான் இந்த வேல ராமமூர்த்தி.
சம்பளம்: சினிமாவில் வில்லனாக மிரட்டிய இவர், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து, மாரிமுத்துவின் இடத்தை பூர்த்தி செய்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால்,படங்களில் பெரியதாக கமிட்டாகாமல் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறராம் அதற்கு காரணம், எதிர்நீச்சல் தொடரில் மாதத்திற்கு வேல ராமமூர்த்திக்கு 10 லட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











