குடும்பத்தை அழிக்க ஜனனி திட்டமா?.. ஈஸ்வரிக்கு வந்த அதிர்ச்சி வீடியோ..எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: அரசு வீட்டில் ஜனனி, சக்தி இருக்க போது யாரோ கதவை பயங்கரமாக தட்டுகின்றனர். அந்த சத்தத்தை கேட்டு இருவரும் பயப்பட, சக்தி ஜனனியை அறையைவிட்டு வெளியே வரக்கூடாது என சொல்லிவிட்டு கீழே இறங்கி வர, தொடர்ந்து கதவை யாரோ தட்டிக்கொண்டே இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து சக்தி அருகில் இருந்த சுத்தியை பாதுகாப்பிற்காக எடுத்துக்கொண்டு கதவை திறக்க செல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து இன்றைய எபிசோடில் அரசு சில ரௌடிகளை பாதுகாப்பிற்கான இங்கு நிற்க வைக்கிறேன் என சொல்ல அது எல்லாம் தேவையில்லை என சொல்கின்றனர். இதை ராவணன் வீடியோ எடுத்து ஈஸ்வரிக்கு அனுப்ப திட்டமிடுகிறார். மறுபக்கம் வீட்டில், நந்தினி, தர்ஷன் திருமணத்திற்கு ஜனனியை அழைக்க வேண்டும் என ஈஸ்வரியிடம் சொல்கிறார். இதைக் கேட்டு ஈஸ்வரி, ஜனனியின் நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லாத போது நான் எப்படி அவளை அழைப்பேன்? என பேசிக்கொண்டு இருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ராவணனின் பிளான்: அப்போது ராவணன் ஜனனி ரௌடிகளுடன் பேசிய வீடியோவை ஈஸ்வரிக்கு அனுப்புகிறார். அந்த வீடியோவை பார்த்த ஈஸ்வரி கடும் அதிர்ச்சி அடைகிறார். நம்ம குடும்பத்தை முழுவதுமாக அழிக்க ரவுடிகளுடன் சேர்ந்து ஜனனி திட்டம் போடுகிறாள். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் கூறுகிறார்.

திருச்சியில் மீட்டிங்: இதற்கிடையில், அன்புக்கரசியின் எம்.டி. முக்கியமான ஒரு மீட்டிங் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டால் நம்முடைய கம்பெனிக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதனால் அன்புக்கரசி, தர்ஷன், நிஷா ஆகிய மூவரும் இந்த மீட்டிங்கில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இந்த மீட்டிங் இன்று திருச்சியில் நடைபெறுகிறது என சொல்கிறார். இதைக் கேட்ட அன்புக்கரசி, தர்ஷன் தற்போது லீவில் இருக்கிறார் என கூற, உடனே எம்.டி.. அவரை உடனே வரச் சொல்லுங்கள். இந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவருடைய கேரியருக்கே பிரச்சனை ஏற்படலாம் என எச்சரிக்கிறார். அதன்பின் அன்புக்கரசி தர்ஷனுக்கு போன் செய்து விஷயத்தை கூறுகிறார். அதற்கு தர்ஷன், அம்மாவிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என பதில் அளிக்கிறார். ஆனால், வீட்டில் உள்ள அனைவரும் தர்ஷன் செல்லக்கூடாது என கூறுகின்றனர். பார்கவி மட்டும், இந்த வேலை தான் தர்ஷனின் கனவு. திருமணத்திற்காக அவரது எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அவர் மீட்டிங்கில் போய்ட்டு வரட்டும் என்கிறார்.'

வேதனையில் ஜனனி: இந்நிலையில் வீட்டில் பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது பார்கவி, ஜனனிக்கு ஃபோன் செய்து, இங்கு பந்தக்கால் வேலைகள் நடக்கிறது. நீங்களும் வாங்க அக்கா என அழைக்கிறார். அதற்கு ஜனனி, நான் அங்கு வந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். அக்காக்களை இப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்திக்கவே மனம் வரவில்லை. அவர்களை பார்க்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது. இந்த வழக்கின் மூலம் அக்காக்கள் என்னை நன்றாக புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி இல்லையென்றால் இந்த வழக்கு எங்களை முற்றிலும் பிரித்து விடும் என வருத்தத்துடன் பேசுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X