டி.ஆர்.பியில் சாதனை படைத்த எதிர்நீச்சல் தொடர்கிறது.. விஜய் டிவி சீரியல் காலி!

சென்னை: தொலைக்காட்சியில் சீரியலை ரசித்து பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. வெள்ளிக்கிழமை ஆனதும் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் விதவிதமான படங்கள் வெளியானாலும். சீரியலுக்கு இருக்கும் மவுசு மட்டும் எப்போதும், குறையவே இல்லை. இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும் படத்தைவிட, தினம் தினம் புதுப்புது கதை களத்துடன் வரும் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். ரசிகர்களின் எண்ண ஓட்டத்தையும் புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிலையங்களும், காலையில் இருந்து இரவு முதல் தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. இப்படி ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ஒவ்வொரு விதமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், தற்போது டி.ஆர்.பியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் முந்தி அடித்துக்கொண்டு முன்னேறி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல், முதல் பாகம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து, இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சற்று பின்னடைவை சந்தித்தது. அதற்கு காரணம் கதை ஓட்டம் சரியாக இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது, டிஆர்பி ரேட்டிங்கில் அடித்து தூக்கிக் கொண்டு முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். அதற்கு காரணம், தர்ஷன், பார்கவி திருமணம் நடக்குமா நடக்காதா என்பது தான்.

ethirneechal thodargiradhu TRP rating TRP
Photo Credit:

சூடுபிடித்தது: தர்ஷன் திருமணத்தில் ஆரம்பித்த குழப்பம், அதன் பிறகு பார்கவியின் அப்பா மரணம் என அடுத்தடுத்து சீரியல் புதுவிதமான கதைகளத்துடன் நகர்ந்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஜீவானந்தத்தின் என்ட்ரியால் சீரியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆதி குணசேகரன் தர்ஷன் கல்யாணத்தை நடத்துவதில் தான் மொத்த குடும்பத்தின் கௌரவம் இருக்கு என்று, தர்ஷன் திருமணத்தை நடத்த மும்முரமாக இருக்கிறார். ஆனால், ஈஸ்வரி மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் கல்யாணத்தை நடத்த திட்டம் போடடுகின்றனர். இதனால், இந்த சீரியலை பார்க்கும் பலர் தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என கேட்டு வருகின்றனர். இதனால், இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் இடையே அதிகரித்துள்ளது.

அடிச்சு தூக்கி எதிர்நீச்சல்: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒன்பதாம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தற்போது மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. சீரியல் ஆரம்பித்து 25வது வாரத்தில் 7.56 டிஆர்பியும், 26-வது வாரத்தில் 7.93 டிஆர்பியும், 27-வது வாரத்தில் 8.36 டிஆர்பியும் பெற்றிருந்த நிலையில், 28 வது வாரத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக 8.49 டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று டாப் 10 பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. முதலில் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலை முந்தியது, அதன்பின்னர் அய்யனார் துணை சீரியலை முந்தியது, தற்போது சிறகடிக்க ஆசை சீரியலை விட அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை சீரியல்கள் பின் தள்ளப்பட்டுள்ளன. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களம் இப்படியே விறுவிறுப்பாக நகர்ந்தால், நிச்சயம் இந்த சீரியல் முதல் இடத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X