ராவணனுக்கு செக் வைத்த மதிவதனி..ஜனனியிடம் சிக்கிய ரகசிய போட்டோ.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜனனி, மதிவதனியையும் அவரது மகளையும் சந்திக்கிறார். ஜனனியை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த மதிவதனி, என்ன ஜனனி பெரிய பெரிய காரியங்கள் எல்லாம் செய்திருக்கீங்க, சக்தி எல்லா விஷயத்தையும் என்னிடம் சொல்லிட்டாரு, ஏன் எனக்கு ஃபோன் செய்யவில்லை என்றும், பணியமாற்றமாகி மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டதாக சொல்கிறார்.
இப்படி இருவரும் பேசிக்கொண்டு இருக்க, மதிவதனியின் மகள் ஒரு பழைய திருமண புகைப்படத்தை கொண்டு வந்து காட்டுகிறாள். அந்த புகைப்படத்தில் மதிவதனியுடன் இருப்பவர் ராவணன். அந்த புகைப்படத்தை பார்த்த ஜனனிஅதிர்ச்சி அடைகிறார். இது யார் என்று ஜனனி கேட்க, மதிவதனி, இவனால்தான் என்னோட வாழ்க்கையே நாசமாயிடுச்சு. நல்லவன் மாதிரி நடிச்சு, பல பொய்களை சொல்லி என்னை திருமணம் செய்து கொண்டான். கல்யாணத்துக்கு பிறகுதான் அவனுடைய உண்மையான முகம் தெரிந்தது. கடைசிவரை அவனுடைய உண்மையான பெயரே எனக்கு தெரியாது. போலியான பெயரில் தான் வாழ்த்துக்கிட்டு இருக்கான் என சொல்கிறாள். உடனே ஜனனி, அவன் பெயர் ராவணன் தானே? என்று கேட்க, அதை கேட்ட மதிவதனி அதிர்ச்சியடைகிறார். அதன்பின் ஜனனி, இவன்தான் இப்போது எங்கள் வீட்டுக்குள் நுழைந்து அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறான் என்ற சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், ராவணன், குணசேகரன் தம்பிகளைஅழைத்துக் கொண்டு கதிர் பிஸ்னஸ் தொடங்க இருக்கும் இடத்தை காட்டுகிறார். அதைப்பார்த்து கதிர் எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சுஇருக்கு நிச்சயம் பிஸ்னஸ் நன்றாக வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என சொல்கிறார். இப்படி இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது,மதிவதனி, ராவணனுக்கு போன் செய்து முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி வீட்டிற்கு வரச் சொல்கிறார். மதிவதனியின் வீட்டுக்கு வரும் ராவணன், என்ன மேடம் உச்ச பேச்சு எல்லாம் வித்தியாசமா இருக்கு, இப்படி நீ பேச மாட்டியே.. என்னை சிக்க வைக்க எதாவது பிளான் போட்டு இருக்கியா என சந்தேகமாக கேட்கிறான். அதே நேரம், மதிவதனியின் மொபைலை வாங்கி சோதனை செய்கிறார். வீட்டில் வேறு யாராவது மறைந்திருக்கிறார்களா என்றும் சுற்றி பார்க்கிறான்.
ராவணன் யார்: அப்போது மதிவதனி, நீங்கள் நினைப்பது போல நான் எதையும் ரெக்கார்ட் செய்யவில்லை. இத்தனை நாள் நமக்குள் இருந்த பிரச்சனையை நீதிமன்றத்தால் தீர்க்க முடியவில்லை. பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. அதனால் நாமே பேசி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்பதற்காகத்தான் உங்களை அழைத்தேன் என்று கூறுகிறார். இந்த பரபரப்பான காட்சியுடன் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடு நிறைவடைகிறது. அடுத்த எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications