ராவணன் விடுத்த சவால்.. குணசேகரன் குடும்பத்தை கெடுக்க போட்டநரித்தந்திரம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: மதிவதனியின் பேச்சில் ஏதோ மாற்றம் இருப்பதை கவனித்த ராவணன், வீட்டிற்குள் யாராவது மறைந்து இருக்கிறார்களா என்று சந்தேகப்படுகிறார். வீட்டை முழுவதும் தேடி பார்த்துக்கொண்டு இருக்க, ச இறுதியில் சமையலறையில் ஜனனி மறைந்து இருப்பதை கண்டுபிடிக்கிறான். உங்களால் தான் மதிவதனி இப்படி பேசுகிறாளா. இப்படி எல்லாம் என் குடும்பத்தில் நடந்து கொள்ள உனக்கு அசிங்கமா இல்லை ஜனனி என்று கேட்க, கடுப்பான ஜனனி, நீ என் வீட்டுக்குள் வந்து உக்காந்துக்கிட்டு பேசுறியே அது உனக்கு அசிங்கமா இல்லை என்று சரியான பதிலடி கொடுக்கிறாள். உடனே ராவணன், குணசேகரன் எனக்கு ஒரு உதவி செய்தார். அவருக்கு நான் உதவி செய்தேன். அதில் நீ ஏன் தலையிடுற, மதிவதனியை எனக்கு எதிராகத் திருப்பியது என்ன செய்ய பாக்குற ஜனனி, உன்னால் எதையும் செய்ய முடியாது, உன்னால் முடிந்ததை பாத்துக்கோ ஜனனி என்று சவால் விட்டுவிட்டு செல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து ராவணன் நேராக குணசேகரன் வீட்டிற்கு வந்து, சோகமாக இருக்கும் அவரைப் பார்த்த குணசேகரன், என்ன தம்பி, ஏன் இவ்வளவு கவலையாக இருக்குறீங்க என்று கேட்கிறார். அதற்கு ராவணன், தொழில் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்துவிடுவேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை நடக்கிறது. என்னுடைய மனைவி , என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, என்னுடன் வாழ மறுக்கிறாள். தனது பதவியை பயன்படுத்தி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டாள். இப்போ என் குழந்தையைக்கூட பார்க்க விடுவதில்லை என்று சொல்கிறான்.

ராணாவின் பிளான்: உடனே யார் உங்க மனைவி என்று கேட்க, ராவணன், மதிவதனிதான் என் மனைவி என்ற உண்மையை சொல்ல ஒட்டுமொத்த குடும்படும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், அப்போ ஜனனியும், மதிவதனியும் சேர்ந்து கொண்டு எனக்கு பிரச்சனை கொடுக்கிறார்கள். அப்போக்கூட ஜனனி, மதிவதனி வீட்டில் தான் இருக்கிறாள் என்று சொல்ல, உடனே நந்தினி, பொய் சொல்லாதீங்க, ஜனனி மருத்துவமனைக்கு போய் இருக்கிறாள் என்கிறாள், உடனே ராணா இல்ல நந்தினி அண்ணி இரண்டு பேரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

குழப்பத்தில் ஜனனி: இதற்கிடையில், மதிவதனி வீட்டிற்கு வரும்படி ஜனனி போன் செய்து சொல்ல சக்தி வீட்டிற்கு வருகிறார். சக்தியிடம் ஜனனி, ராவணன் மிகவும் மோசமானவன். அவன் மதிவதனியின் கணவர். இவ்வளவு மோசமான ஆள் நிச்சயம் நம்ம குடும்பத்திற்குள் எதற்காக வந்தார் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு திட்டத்தோடு தான் வந்து இருக்கிறார். குணசேகரனுக்கு அவன் உதவி செய்வதற்குப் பின்னால் கூட மிகப்பெரிய காரணம் இருக்கிறது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்தை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X