பழிசுமத்திய தர்ஷினி.. அணைந்த விளக்கு.. வாசலில் வந்து நின்ற சக்தி-ஜனனி..எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த தர்ஷினி, என்னை கடத்தி வைத்து, என்னை டார்ச்சர் செய்தது ஜனனி தான் என்ன சொல்கிறார். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அதை சற்றும் எதிர்பாராத ஜனனி, என்ன தர்ஷினி சொல்ற ஏன் பொய் சொல்ற என்று கேட்கிறாள். அதற்குள் கதிர் வந்து சண்டை போட, கதிர் ஜனனி இரண்டு பேருக்கும் வீட்டை வெளியில் கிளம்பி மதிவதனி வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.
மதிவதனியிடம் வீட்டில் நடந்த விஷயத்தை அனைத்தையும் சொல்லி ஜனனி வருத்தப்படுகிறாள். எதற்காக தர்ஷினி இப்படி சொன்னால், அதற்கான காரணம் என்ன என்று கேட்கின்றனர். உடனே ஜனனி நிச்சயமாக தர்ஷினி ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கா? ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அவள் இப்படி சொல்லி இருக்கா, தர்ஷினி என்னைவிட போல்டான பொண்ணு ஆனால், எதற்காக இப்படி சொன்னா என்று தான் தெரியவில்லை என சொல்லி வருத்தப்படுகிறாள் ஜனனி.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில் விசாலாட்சி தர்ஷினியிடம், எதற்காக ஜனனி மீது இப்படி ஒரு பழியை போட்ட, அவர் வயித்துபுள்ளக்காரியாக இருக்கும்போது கூட உன்னை தேடியும் காடு மேடு எல்லாம் அழைச்சி வந்தா. ஆனால் நீ அவள் மீது பழியை போட்டு இருப்பது எனக்கு சரியாக படவில்லை. எதுக்காக நீ இப்படி பொய் சொன்ன தர்ஷினி உண்மையை சொல்லு என சொல்கிறார். இதைக்கேட்டு உச்சப்பட்ட டென்ஷனான தர்ஷினி, அய்யோ... என்னை கடத்தி சென்றது ஜனனி தான். ஜனனி தான் என்னை கடத்தி வைத்து டார்ச்சர் செய்தா, என அழுது கொண்டே கத்திவிட்டு அப்படியே மயங்கி விழுந்து விடுகிறாள். இதைப்பார்த்த ஈஸ்வரி, தயவுசெய்து இனிமேல் என்னுடைய மகளிடம் எதுவுமே கேட்காதீர்க, அவள் செத்துப் பொழச்சி வந்து இருக்கா.. தினமும் அவளை ஏதாவது கேட்டு டார்ச்சர் செய்யாதீர்க, இதற்கு மேல் யாரும் அவளிடம் எதுவுமே கேட்கக் கூடாது என சொல்கிறார்.
அணைந்த விளக்கு: அடுத்த நாள் காலை பிசினஸ் தொடங்குவதற்கு பூஜை செய்ய வேண்டும் என குணசேகரன் அனைவரையும் அழைத்து விளக்கு ஏற்ற சொல்கிறார். ஆனால் விசாலாட்சி, இதில் கலந்துகொள்ள இல்லாமல் இருக்கிறார். இதை அடுத்து ஈஸ்வரி விளக்கை ஏற்றி வைத்து பூஜைக்கான ஏற்பாடுகள் செய்ய அப்போது விளக்கு அணைந்து விடுகிறது. இதனால், குணசேகரனும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே குணசேகரன் எதற்காக மீனாட்சி தாயே எதற்காக எங்க குடும்பத்தை இப்படி சோதிக்கிற என கேட்கிறார். அந்த நேரம், வீட்டு வாசலில் சக்தி, ஜனனி வந்து நிற்கின்றனர். அப்போது, ஈஸ்வரி வந்து விசாலாட்சியை விளக்கு ஏற்றும்படி சொல்கிறார். ஆனால், விசாலாட்சி நான் வரமாட்டேன், இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்கிறார். அப்போது ஜனனி, அத்தை எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், அவங்க பிஸ்னஸ் ஆரம்பிக்கும் போது நீங்க கூட நிற்க வேண்டும், அவங்களும் உங்க மகன்கள் தானே, போங்க போய் விளக்கு ஏற்றி நல்லபடியா பூஜை செய்க என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன ஆனது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications