நடிகை பெயரைக்கேட்டு பல்டி அடித்த அரசியல்வாதி.. குணசேகரனை நம்ப வைத்த ராவணன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் மீனாட்சி அம்மன் படத்தின் முன்பு ஈஸ்வரி ஏற்றிய விளக்கு அணைந்ததால் மனவேதனையில் இருந்த ஈஸ்வரி, விசாலாட்சியிடம் நீங்க தான் வீட்டுக்கு பெரியவங்க நீங்களே இந்த பூஜை நடத்துங்க என்று சொல்ல, மனம்இறங்கும் விசாலாட்சி, இன்று தானே விளக்கேற்றி பூஜையை நடத்துகிறார். இந்த பூஜையில் ஈஸ்வரி, ஜனனி, சக்தி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து குணசேகரன், ராவணனிடம் சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்கிறார். அதற்கு ராவணன், இப்படி ருசியான சாப்பாட்டை சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டது. என் அம்மா உயிருடன் இருந்தபோது மட்டும்தான் வகை வகையாக சமைத்துக் கொடுப்பார்கள். நான் எட்டு வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார்கள். அதன் பிறகு தனியாகவே வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்கிறார். மேலும், யாரும் என்னை நம்பவே மாட்டார்கள். ஆனால் நீங்கள் என்னை நம்பியிருப்பது எனக்கு சந்தோஷம் இருக்கு, எனக்கு நல்ல ஒரு குடும்பம் கிடைத்து இருக்கிறது என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதன்பிறகு புதிய தொழில் தொடர்பான பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறும் ராவணன், முதலில் திறப்பு விழாவிற்கு ஒரு முக்கிய அரசியல்வாதியை நேரில் சென்று அழைக்கலாம் என அனைவரையும் அழைத்துச் செல்கிறார். அங்கு அந்த அரசியல்வாதி, அன்றைய தினம் டெல்லியில் முக்கியமான கூட்டம் இருப்பதால் வர முடியாது என்கிறார். அப்போது ராவணன், நீங்க வந்தா, எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கும் என்கிறார். ஆனால், அரசியல்வாதி வரமுடியாது வேறு ஒரு தேதியில் இதை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அப்போது,கரிகாலன், நீங்கள் வருவீர்க என்று நினைத்து நடிகை தூரிகாவையும் அழைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதைக் கேட்ட அரசியல்வாதி, என்னது நடிகை தூரிகா வருகிறாரா? அப்படியானால் நானும் கண்டிப்பாக திறப்பு விழாவில் கலந்து கொள்கிறேன் என்கிறார்.
ஈஸ்வரியின் அன்பு: மறுபக்கம் வீட்டில் ஈஸ்வரி சமையல் செய்து கொண்டிருக்க, அப்போது ஈஸ்வரி இந்த நந்தினியிடம், இந்த சாப்பாட்டை ஜனனியிடம் கொடுத்து விடு என்று சொல்கிறார்.ஆனால் நந்தினி, அக்கா ஜனனி நம்மீது கோபமாக இருக்கிறாள். இந்த சாப்பாட்டை அவள் வாங்குவாளா, சாப்பிடுவாளா என்று தெரியவில்லை என தயக்கத்துடன் பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி, நீ கொடு... கண்டிப்பாக அவள் சாப்பிடுவாள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். இப்படியான நிலையில் தான் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications