நீங்க இந்த வீட்டுல இருக்கிற ஜடம்.. ஜனனி முகத்தில் கரியைப் பூசிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில், ஜனனி, சக்தி இருவரும் இந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து கிளம்புகின்றனர். ஆனால், குணசேகரன், ராணாவின் பேச்சைக் கேட்டு, அவர்கள் வெளியே சென்றால் நம்ம பிஸ்னசுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துவார்கள், இதனால் நம்ம பிஸ்னஸ் ஆரம்பிக்கும் வரை அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேபோகக்கூடாது என்று சொல்கிறார். இதைக்கேட்டுக் கொண்ட குணசேகரன், நீங்க இந்த வீட்டை விட்டு போனீங்கனா, எங்க தொழிலுக்கு பாதிப்பு வருமோ என்ற எண்ணம் இருக்கு இதனால், நீங்க வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது என்கிறார்.

ஆனால், சக்தி அதெல்லாம் முடியாது நாங்க உங்க பிரச்சனை எதுக்கும் வரமாட்டோம். நீங்க எங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க, எங்களுக்கு வர்ற பிரச்சனைகளைத்தான் நாங்க பேஸ் பண்றோம். அதை நீங்க உங்களை எதிர்பதாக நினைக்குறீங்க என்று சொல்கிறார். ஆனா, குணசேகரன் ஒரேடியாக வெளியில போகக்கூடாது என்று அழுத்தமாக சொன்னதால், டென்ஷனான ஜனனி, இப்போ என்ன சொல்லவறீங்க, நாங்க இந்த வீட்டை விட்டு வெளியில போகக்கூடாது அப்படித்தானே, நாங்க இதே வீட்ல இருக்கிறோம். உங்களுடைய பிசிஸ்னஸ் நல்லபடியா நடக்கட்டும் அது முடிஞ்சதும் நாங்க இந்த வீட்ட விட்டு போறோம் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, ஜனனி மாடிக்கு போக, அப்போது, அங்கிருந்த தர்ஷினியை பார்த்து, என்னால உன்னை புரிஞ்சுக்க முடியுது தர்ஷினி, நீ எதுக்காக அப்படி சொன்னா... நீ அப்படி சொன்னதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு, அது எதுவா இருந்தாலும் என்னிடம் சொல்லு என்று சொல்கிறார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி, நீ எதுக்கு அவ கூட பேசிக்கிட்டு இருக்க, அவளை கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடுங்க, ஏற்கனவே அவ பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்து இப்போத்தான் மீண்டு வந்து இருக்கா. அப்படி இருக்கும்போது தொடர்ந்து நீங்க அவளுக்கு பிரச்சனை கொடுத்த என்ன அர்த்தம் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

கோவப்படும் ஈஸ்வரி: இதனால், ஆத்திரப்படும் ஜனனி, என்னக்கா நினைச்சுட்டு இருக்கீங்க, நீங்க இப்படி மாறுவீங்கனு நான் நினைக்கவே இல்ல. நீங்க விபத்துனால பாதி விஷயத்தையும் மறந்துட்டீங்க. ஆனால், அந்த விஷயத்தை எல்லாம் நாங்க திருப்பி உங்ககிட்ட எடுத்து சொல்லியும், நீங்க எதையும் புரிஞ்சிக்கல இந்த வீட்டில் இருக்கிற ஷேர், டேபிள் மாதிரி இப்படியே இருந்தா என்ன அர்த்தம் அக்கா. உங்களுக்கு, உங்கள சுத்தி நடக்குற அநியாயம் எல்லாம் கண்ணுக்கு தெரியுதா இல்லை என்கிறாள். அதற்கு பதில் சொல்லும் ஈஸ்வரி, நிறுத்து ஜனனி, இன்னைக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவா சொல்கிறேன் புரிஞ்சிக்கோ. இதுக்கு மேல இந்த பிரச்சனையை பத்தி பேசவே கூடாது. நீ சென்னையில் வளர்ந்தவன், உனக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியும். ஆனா நாங்க அப்படியில்ல, நான் வளர்ந்த விதம் வேற,

மன்னிச்சிட்டேன்: இன்னைக்கு இவ்வளவு தெளிவா பேசும் நீயே, கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த, கல்யாணத்துக்கு பின்னாடி எப்படி இருந்த, இப்போ எப்படி இருக்கனு பல விஷயத்தை யோசித்து பார்த்து பேசு. உனக்கே இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம தான், மதுரைக்கு வந்து சக்தியை பார்த்து எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொன்ன. அப்படி இருந்தும் உங்க அப்பா வலுக்கட்டாயமா தான் இந்த கல்யாணத்தை பண்ணி வச்சாரு அன்னைக்கு உன்னால எதுவும் பேச முடியாம, அமைதியா இருந்த, ஆனா இன்னைக்கு நீ அப்படியா இருக்க, காலத்துக்கு ஏத்த மாதிரி நீ மாறி இருக்க. அது போல தான் நாங்களும் காலத்துக்கேத்த மாதிரி மாறி இருக்கோம். இந்த வீட்டுக்கு நான் வந்து கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு பல விஷயத்தை சகிச்சுக்கிட்டு தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். அதுக்கு காரணம் என் குழந்தைகள், அந்த குழந்தைகளுக்காக நான் வாழ்ந்துகிட்டே இருக்கேன். அதோட இன்னொரு விஷயம் சொல்லட்டுமா ஜனனி, ஒருத்தர் நம்மகிட்ட மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பது தான் பெரிய மனசு தனம், அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டாரு நான் மன்னிச்சிட்டேன் என்று ஈஸ்வரி சொல்ல ஜனனி அதிர்ச்சியோடு பார்க்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X